காது குடைய பட்ஸ்-யை பயன்படுத்துபவர்களா நீங்கள்? எச்சரிக்கை! இந்த ஆபத்து வர நேரிடும்!

0
181

காது குடைய பட்ஸ்-யை பயன்படுத்துபவர்களா நீங்கள்? எச்சரிக்கை! இந்த ஆபத்து வர நேரிடும்!

காதுகளில் உட்பகுதியில்,காது ஜவ்வை பாதுகாக்க மெழுகு போன்ற திரவம் இயற்கையாகவே உற்பத்தியாகும்.நாளடைவில் அதுவே கெட்டியாகி வெளியே வந்துவிடும்.ஆனால் இதனை பெரும்பாலானோர் காதின் அழுக்கு என்று நினைத்து அதனை சுத்தம் செய்வதாக கூறி பட்ஸ்,ஊக்கு போன்ற சில பொருட்களை காதினுள் விட்டு உட்பகுதி வரை குடைந்து எடுப்பர்.ஆனால் இது முற்றிலும் தவறான விஷயமாகும்.

இவ்வாறு வெளிவரும் அந்த மெழுகு போன்ற திரவத்தை நன்றாக வெளியே வந்த பிறகு காதில் ஓட்டைனுள் போகாதவாறு மேற்பரப்பில் பட்ஸ்-யை விட்டு எடுக்கலாம்.
ஆனால் காதை சுத்தம் செய்வதாக கூறி காதின் ஓட்டைனுள் விட்டு குடைந்து எடுக்கக் கூடாது.இதனால் செவிப்பறை சேதம் அடைந்து காது கேளாமை,குமட்டல் மற்றும் வாந்தியுடன் கூடிய தலைச்சுற்றல், முகத்தில் பக்கவாதம் ஏற்படுதல்,நாக்கின் சுவை குன்றுதல் உட்பட்ட பல்வேறு பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

முக்கியமாக இது குறித்த விழிப்புணர்வை பெற்றோர்கள் அனைவரும் உங்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் ஏற்படுத்த வேண்டும்.