செங்கல் தூக்கினால் அமைச்சர் பதவி! கல்லைத் தூக்கினால் பதவி பறிப்பா! தேமுதிக தலைவர் பிரேமலதா கேள்வி?

0
219
#image_title
செங்கல் தூக்கினால் அமைச்சர் பதவி! கல்லைத் தூக்கினால் பதவி பறிப்பா! தேமுதிக தலைவர் பிரேமலதா கேள்வி?
திமுக கட்சியில் உதயநிதிக்கு ஒரு நியாயம் நாசருக்கு ஒரு நியாயமா என்று தேமுதி கட்சி தலைவர் பிரேமலதா அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் திமுக கட்சியில் அமைச்சர்களின் பதவிகள் மாற்றப்பட்டது. அதில் புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். இதற்கு முன்னர் திமுக கட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அவர்களிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து தேமுதிக கட்சித் தலைவர் பிரமேலதா அவர்கள் இந்த பதவி பறிப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் நேரத்தில் தற்போதைய அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் எய்ம்ஸ் என்று பெயர் பதித்த செங்கல்லை வைத்து பிரச்சாரம் செய்தார். இதை நினைவு கூர்ந்த தேமுதிக கட்சித் தலைவர் பிரேமலதா அவர்கள் சமீபத்திய பேட்டியில் “அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் செங்கல்லை தூக்கியதற்கு பாராட்டும் முதல்வர் அவர்கள் நாசர் அவர்கள் கல்லை தூக்கினால் ஏன் அவரை பதவியை விட்டு தூக்கினார். நாசர் அவர்கள் குற்றம் செய்திருந்தால் அவரை தனியாக அழைத்து விளக்கி கூறியிருக்கலாம். நேரடியாக பதவி பறிக்கப்பட்டது மிகப் பெரிய தண்டனை” என்று அவர் கூறியுள்ளார்.
Previous articleஇனி இந்த சம்பவங்கள் நடக்கவே கூடாது! மதிமுக தலைவர் வைகோ வெளியிட்ட அறிக்கை!!
Next articleகண் குறைபாடு முதல் சரும பிரச்சனை வரை அனைத்திற்கும் இந்த 1 லட்டு போதும்!!