அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரி சோதனை!!
அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் வீடு, அவரது தம்பி அசோக் வீடு, அவருடைய உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
தற்போது திமுக கட்சியின் கீழ் இருக்கும் தமிழக அரசில் மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைதுறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி அவர்கள் அதிமுக கட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக குற்றம் சாற்றப்பட்டது. அந்த வழக்கு இப்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வசிக்கும் கரூர் இராமேஸ்வரப்பட்டியில் இருக்கும் வீடு, கரூர் இராமகிருஷ்ணபுரத்தில் இருக்கும் அவரது தம்பி அசோக் வீடு, அவரது உறவினர்கள், அவரது நண்பர்கள் ஆகியோர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை தற்போது வரை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. சென்னை, கோவை, கரூர் என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 40 இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகின்றது