உங்கள் கை மற்றும் கால்களின் நகத்தில் சொத்தை இருக்கின்றதா!!? அதை சரி செய்ய இரண்டு வழிமுறைகள் இதோ!!!
நம்மில் சிலருக்கு கை மற்றும் கால்களில் உள்ள நகங்களில் சொத்தை இருக்கும். இந்த நகம் சொத்தையை சரி செய்ய எளிமையான இரண்டு வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நகம் சொத்தை என்பது நமது உடலில் ஊட்டச்சத்துக்கள் குறைபாடு காரணமாக ஏற்படும். இந்த நகச் சொத்தையை இரண்டே பொருள்களை வைத்து குணப்படுத்தி விடலாம். அதாவது கீழா நெல்லி மற்றும் படிகாரக்கல் இரண்டையும் வைத்து நகம் சொத்தையை சரி செய்யலாம். அதை எவ்வாறு சரி செய்வது என்று பார்க்கலாம்.
வழிமுறை 1:
கீழ்நெல்லி செடி நகம் சொத்தையை சரி செய்யக் கூடியது. இந்த கீழாநெல்லி கீரையை வைத்து எவ்வாறு நகம் சொத்தையை குணப்படுத்துவது என்று. பார்க்கலாம்.
இதற்கு தேவையான பொருட்கள்
* கீழாநெல்லி இலைகள்
* நல்லெண்ணெய்
செய்முறை மற்றும் பயன்படுத்தும் முறை :
கீழாநெல்லி இலைகளின் கீரையை அதாவது இலைகளை எடுத்து அதில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த இந்த பேஸ்டை நகம் சொத்தையாக இருக்கும் இடங்களில் தேய்க்க வேண்டும். முந்தைய நாள் இரவு இதை செய்து விட்டு மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரினால் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்ய வேண்டும். தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால் சொத்தையான நகங்கள் அனைத்தும் குணமாகும்.
வழிமுறை 2:
படிகாரக் கல் கால்களில் உள்ள நகம் சொத்தையை சரி செய்வதற்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
முதலில் படிகாரத்தை பேஸ்ட் போல அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரவு தூங்கச் செல்லும் முன்பு நகம் சொத்தையாக உள்ள இடத்தில் வைத்து கட்ட வேண்டும். மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரினால் நகங்களை கழுவ வேண்டும். இதையும் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் நகம் சொத்தை பிரச்சனை மிகவும் மோசமாக இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.