உலகக் கோப்பை தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறிய வங்கதேசம்! பாகிஸ்தான் ஹேப்பி!!
நடப்பு உலகக் கோப்பை தொடரில் நேற்று(அக்டோபர்31) நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தோல்வி பெற்ற வங்கதேசம் முதல் அணியாக வெளியேறியுள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 31வது லீக் சுற்றில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரண்டு அணிகள் நேற்று(அக்டோபர்31) விளையாடியது. கொல்கத்தாவில் நேற்று(அக்டோபர்31) நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட் செய்த வங்கதேசம் 45.1 ஓவர்களில் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்கள் சேர்த்தது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக மஹ்முதுல்லா அரைசதம் அடித்து 56 ரன்களும், காட்டன் தாஸ் 45 ரன்களும், ஷாகிப் 43 ரன்களும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணியில் ஷாகீன் அப்ரிடி, முகம்மது வாசிம் ஜூனியர் இருவரும் தலா 3 விக்கேட்டுகளை கைப்பற்றினர். ஹாரிஸ் ராப் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து 205 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடங்கியது வீரர்கள் ஃபக்கர் ஜமான் மற்றும் அப்துல்லா சபிக் இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். சிறப்பாக விளையாடிய அப்துல்லா பிக் அரைசதம் அடித்து 68 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடர்ந்து விளையாடிய ஃபக்கர் ஜமான் அரைசதம் அடித்து 81 ரன்கள் சேர்த்தார்.
இறுதியாக களமிறங்கிய ரிஸ்வான் 26 ரன்களும் இப்டிகர் அஹமது 17 ரன்களும் சேர்க்க பாகிஸ்தான் அணி 32.3 ஓவர்களில் 205 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியில் வீழ்ந்த மூன்று விக்கெட்டுகளை மெஹிடி ஹசன் மிராஸ் கைப்பற்றினார். இதன் மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரின் 3வது வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான் அணி அரையிறுதிப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணி பெறும் 6வது தோல்வி இதுவாகும். அதனால் நடப்பு உலகக் கோப்பை தொடரின் இருந்து முதல் அணியாக வங்கதேச அணி வெளியேறியுள்ளது.