முகம் பளிச்சென்று மாற வேண்டுமா? அதுக்கு பீட்ரூட் மற்றும் தேன் மட்டும் போதும்! 

Photo of author

By Sakthi

முகம் பளிச்சென்று மாற வேண்டுமா? அதுக்கு பீட்ரூட் மற்றும் தேன் மட்டும் போதும்!
நம்முடைய முகம் பளிச்சென்று மாறுவதற்கு நாம் பல வகையான மேக்கப் முறைகளை பின்பற்றி வருகிறோம். மேக்கப் சாதனங்களுக்கு பதிலாக இயற்கையான வைத்திய முறைகளை பின்பற்றினால் முகத்தை எளிமையாக பளிச்சென்று மாற்றலாம்.
அதற்கு வீட்டில் கிடைக்கக் கூடிய இந்த பொருட்களே போதும். பீட்ரூட்டை நாம் பொரியல், குழம்பு, சட்னி, ஜூஸ் என்று பல வகைகளில் சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றோம். அந்த வகையில் அதே போல நாம் சருமத்திற்கும் பீட்ரூட்டை பயன்படுத்தலாம். எனவே பீட்ரூட்டை எவ்வாறு முகத்தை பளிச்சென்று மாற்றுவதற்கு பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* பீட்ரூட்
* தேன்
செய்முறை…
முதலில் பீட்ரூட்டை சிறிது சிறிதாக நறுக்கி அதை மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் இருந்து பீட்ரூட் சாறு மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சிறிய பவுல் ஒன்றில் இந்த பீட்ரூட் சாற்றை சேர்க்க வேண்டும். பின்னர் இதில் சிறிதளவு தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை முகத்தில் தேய்த்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழிந்து முகத்தை கழுவி விடலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகம் பளிச்சென்று மாறும்.