METRO RAIL SERVICE: 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிவைடைய இருக்கும் பணிகளில் மெட்ரோ ரயில் சேவையும் ஒன்று. புதிதாகக் கொண்டுவரவுள்ள மெட்ரோ ரயிலில் ஓட்டுநர் இல்லாமலே வாகனம் இயங்கும். இந்த சேவையானது தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் விரைவில் துவங்கப்பட உள்ளது.
ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளபடி முழு வீச்சில் ஓட்டுநர் அற்ற மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றது.
இந்த வகையான மெட்ரோ ரயில்களில் பயணிகள் தங்களுடைய கணினி மற்றும் கைபேசிகளுக்கு சார்ஜ் கூட செய்து கொள்ளலாம். இந்த ரயிலில் உள்ள பெட்டிகள் குளிர்சாதன வசதி கொண்டு அமைந்திருக்கும். சுமார் 1000 பயணிகள் வரை பயணம் செய்யக்கூடிய இந்த மெட்ரோ ரயிலானது மணிக்கு எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஓட்டுநர் இன்றி இயங்கும் இந்த புதிய வகை மெட்ரோ ரயிலானது செப்டம்பர் மாதத்தில் மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் பொருட்டு பூந்தமல்லியில் அமைத்துள்ள பணிமனைக்கு கொண்டுவரச் செய்யப்படும். இந்த ரயிலில் சில பிரத்யேக இடங்கள் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று.
மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான அதிநவீன கருவிகள் தண்டவாளங்களிலே பொருத்தப்பட உள்ள நிலையில் இந்த ரயில் சேவைக்கான சோதனை ஓட்டம் இந்த வருடத்தின் இறுதிக்குள்ளாகவே நடத்தப்படவுள்ளது.