Electric bike:எலக்ட்ரிக் பைக் சர்வீஸ் க்கு 90 ஆயிரம் கேட்ட விற்பனையகம், கோபத்தில் பைக்கை சுத்தியால் உடைத்த உரிமையாளர்.
இந்தியாவில் பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்தியாவில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்களும் E- பைக்கை அறிமுகம் செய்து வருகிறார்கள். பொது மக்களும் பெட்ரோல் டீசல் வாகனங்கள் போல தரமாக இருக்குமா என்ற சந்தேகத்திலேயே வாங்கி செல்கிறார்கள்.
இந்த நிலையில் வட மாநிலத்தில் E-பைக்கை சுத்தியால் உடைக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் அந்த வீடியோ இருக்கும் நபர் பேசியத்தில், அவர் ஒரு மாதத்திற்கு முன் எலக்ட்ரிக் பைக் ஓலா நிறுவனத்தில் வாங்கி இருக்கிறார். அது தற்போது பழுது ஆகிவிட்டதாகவும். அதை பழுது பார்க்க ஓலா விற்பனை நிருவனத்திடம் கொடுத்த பொது 90 ஆயிரம் ஆகும் என தெரிவித்து இருக்கிறார்கள்.
எனவே அந்த நபர் அவரது புது எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை அவர் கொண்டு வந்த ஓலா விற்பனை நிறுவனத்தின் முன் நிறுத்தி சுத்தி கொண்டு அடித்து நொறுக்கி இருக்கிறார். இது தொடர்பான விடியோ வைரல் ஆகி வருகிறது. இது எப்போது நடைபெற்றது என தெரியவில்லை.
தற்போது இணையத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. மேலும் இது வரை இந்திய முழுவதும் 10,644 புகர்கள் வாடிக்கையாளர்கள் தரப்பில் இருந்து வந்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறது Ola Electric நிறுவனம்.