AADMK: மாணவி பாலியல் வழக்கு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த டிசம்பர்-23 ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குணசேகரன் என்பவர் டிசம்பர்-25 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பாலியல் வழக்கில் கைதானது குணசேகரன் திமுக கட்சியின் முக்கிய நிர்வாகி என தெரிய வந்துள்ளது.
மேலும், திமுக உயர்மட்ட தலைவர்களுடன் அக் குற்றவாளி எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி தமிழக மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. டிசம்பர்-27 ஆம் தேதி அதிமுக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவதாக அறிவித்தார்கள். இந்த நிலையில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இறந்தார்.
எனவே, அதிமுகவினர் 27 ஆம் தேதி நடைபெற இருந்த போராட்டத்தை இன்று டிசம்பர் 30 க்கு ஒத்தி வைத்தார்கள். எனவே, அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டி எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். அப் போஸ்டரில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ‘யார் அந்த சார்?’ சேவ் அவர் டாட்டர் என்ற வாசகங்கள் இடம் பெற்று இருக்கிறது.
மேலும், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது. ஆறு வயது முதல் அறுபது வயதுடைய பெண்கள் என வயது வித்தியாசம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது பேரதிர்ச்சியாக இருக்கிறது. திமுக அரசு குற்றவாளிகளுக்கு ஆதரவு கொடுக்கிகிறது என தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள் அதிமுகவினர்.