மிகுந்த அதிர்ஷ்டத்தை தரக்கூடிய வாஸ்து செடிகள்..!! வாசனை மலர் செடிகள்..!!

Photo of author

By Janani

மிகுந்த அதிர்ஷ்டத்தை தரக்கூடிய வாஸ்து செடிகள்..!! வாசனை மலர் செடிகள்..!!

Janani

Updated on:

நமது வீட்டில் ஒரு செடியை வளர்க்கிறோம் என்றாலே அது பல அதிர்ஷ்டங்களை நமக்கு கொடுக்கும். அதிலும் அந்தச் செடியில் இருந்து வரக்கூடிய பூக்களை பார்ப்பது என்பது அதைவிட அதிர்ஷ்டம் நிறைந்த ஒன்றாக இருக்கும். வாசனை நிறைந்த மலர்களைக் கொண்ட செடிகளை நமது வீட்டில் வைப்பதன் மூலம், பல விதமான அதிர்ஷ்டங்கள், செல்வ வளம், ஐஸ்வர்யம் ஆகிய அனைத்தும் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அதிர்ஷ்டம் நிறைந்த வாஸ்து செடிகள் எவை எவை என்பது குறித்து தற்போது காண்போம்.

1. பவளமல்லி செடி:
சூரியன் மறைந்த பிறகு தான் இந்த செடியில் உள்ள பூக்கள் பூக்கும். இந்தப் பூக்கள் மிகுந்த வாசனையை கொண்டதாக இருக்கும். இந்த பூவில் உள்ள வாசனை தீய சக்திகள், கண் திருஷ்டிகள் போன்றவற்றை விரட்டக்கூடிய தன்மை கொண்டது. உங்கள் வீட்டில் கண் திருஷ்டி அதிகமாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், உங்கள் வீட்டின் குபேர மூலையில் இந்த செடியை வளர்க்கலாம்.

இந்தப் பூவினை இறைவனுக்கு சூட்டும் பொழுது இறை சக்தியை ஈர்க்கும். மேலும் பல அதிர்ஷ்டங்களையும் ஈர்த்து நமக்கு பல நன்மைகளை ஏற்படுத்தித் தரும்.

2. பாரிஜாதம் பூ செடி:
தேவலோகத்தில் இருக்கக்கூடிய பூவாக இதனை கூறுவர். இந்த மலர் பெருமாளுக்கு மிகவும் பிடித்தமான மலராகும். இந்த பாரிஜாதம் பூ கண்களில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய உதவுவதாகவும் மருத்துவம் ரீதியாக கூறப்படுகிறது.

3. மனோரஞ்சிதம் செடி:
தொழிலில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை, பல்வேறு இடையூறுகள் மற்றும் பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது என்கின்ற போது, இந்த மனோரஞ்சிதம் செடியை நாம் தொழில் செய்யக்கூடிய இடத்தில் வைத்தால் அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

இந்த செடியை வீட்டில் வைத்து வளர்க்கும் பொழுது செல்வ வளம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஆரோக்கியம் மற்றும் புத்துணர்ச்சி அதிகரிக்கும்.

4. செண்பக செடி:
இந்த செடியை வளர்ப்பதினால் சுக்கிர பகவானின் யோகம் உண்டாகும் என கூறப்படுகிறது. அதிர்ஷ்டம் இருக்கக் கூடிய வீடுகளில் மட்டுமே இந்த செடி வளரும் என்றும் கூறுகின்றனர்.
இந்த செடியை வளர்ப்பதினால் வறுமை நீங்கும். மகாலட்சுமி தேவியாருக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த பூவினை வைத்து வழிபடுவதன் மூலம், மகாலட்சுமி அருள் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும்.

5. ரோஜா மல்லி செடி:
மகாலட்சுமிக்கும், சுக்கிர பகவானுக்கும் மிகவும் பிடித்தமான மலர் இது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த கடவுளுக்கு மல்லி பூவினை வைத்து வழிபடும் பொழுது நேர்மறையான ஆற்றல்களையும், வாழ்க்கையில் பல வெற்றிகளையும் பெறலாம்.

6. பிரம்ம கமலம் செடி:
மிக மிக அரிதான மற்றும் அதிர்ஷ்டம் நிறைந்த செடிதான் இந்த பிரம்ம கமலம். இந்தப் செடியில் உள்ள பூவானது வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே அதிலும் இரவு நேரத்தில் மட்டும்தான் பூக்கும். நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே இந்த செடியினை வாங்கி நமது வீட்டில் வளர்க்க முடியும். அதிலும் அதிக அளவிலான அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே அந்த செடியில் பூக்கள் பூப்பதை பார்க்க முடியும்.

இந்த பூவினை பறித்து கடவுளிடம் வைத்து வழிபடுவதை விட, அந்தப் பூவானது பூக்கும் பொழுதே நம் மனதில் வேண்டுதல்களை கூறி வேண்டிக் கொண்டாலே, அந்த வேண்டுதல்கள் கண்டிப்பாக நிறைவேறும்.

7. கிருஷ்ண கமலம் பூச்செடி:
இந்த செடியை நமது வீட்டில் வளர்ப்பதே ஒரு பெருமை என்று இந்து சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. பிரம்ம கமலத்திற்கு அடுத்தபடியாக மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த மற்றும் பெருமை மிகுந்த செடி என்றால் இந்த கிருஷ்ண கமலம் செடிதான்.

இந்தச் செடியை நாம் வளர்ப்பது கிருஷ்ணரையே வளர்ப்பதற்கு ஈடாக கூறுகின்றனர். இதன் மூலம் கிருஷ்ணனின் அருளும் ஆசீர்வாதமும், நமக்கு கிடைக்கும்.