Rajinikanth: இலங்கையை சேர்ந்த சுபாஷ்கரனுக்கு லண்டனில் சிம் கார்டு உள்ளிட்ட சில தொழில்கள் உள்ளது. ஆனால், சினிமா எடுப்பதில் ஆர்வம் கொண்ட சுபாஷ்கரன் கோலிவுட்டில் களமிறங்கி லைக்கா புரடெக்ஷன் என்கிற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். இந்த நிறுவனம் இயக்கிய முதல் படம் கத்தி. விஜய் நடித்து வெளியான இப்படம் வெற்றி பெற்றது. அதன்பின் இந்த நிறுவனத்துக்கு விஜய் கால்ஷீட் கொடுக்கவே இல்லை.
எனவே, மற்ற ஹீரோக்களை வைத்து படங்களை எடுத்தது லைக்கா. சின்ன பட்ஜெட்டில் உருவான படங்கள் இந்த நிறுவனத்துக்கு லாபத்தை கொடுத்தது. ஆனால், பெரிய ஹீரோக்களை வைத்து லைக்கா நிறுவனம் எடுத்த எல்லா படங்களுமே அந்த நிறுவனத்திற்கு நஷ்டத்தையே கொடுத்தது.
ரஜினியை வைத்து எடுத்த தர்பார் மற்றும் வேட்டையன், கமலை வைத்து எடுத்த இந்தியன் 2, அஜித்தை வைத்து எடுத்த விடாமுயற்சி போன்ற எல்லா படங்களுமே நஷ்டத்தை கொடுத்தது. இதனால், லைக்கா நிறுவனம் மீண்டும் எழுமா என்கிற சந்தேகமே பலருக்கும் வந்தது. குறிப்பாக இந்தியன் 2 ம் மற்றும் விடாமுயற்சி படங்கள் லைக்காவுக்கு பல கோடி நஷ்டங்களை கொடுத்தது. அதேபோல், ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்து வெளியான லால் சலாம் படமும் தோல்வியடைந்தது.
எனவே, லைக்கா எப்படியாவது மேலே வரவேண்டும் என்கிற எண்ணம் தமிழ் சினிமா உலகினருக்கே வந்தது. இந்த எண்ணம் ரஜினிக்கும் வந்திருக்கிறது. எனவே, உங்களுக்கு ஒரு படம் நடித்து கொடுக்கிறேன் என சொல்லி இருக்கிறாராம். கூலி மற்றும் ஜெயிலர் 2 படம் முடிந்த பின் இந்த பட வேலை துவங்கும் என கணிக்கப்படுகிறது. கூலி, ஜெயிலர் 2 படங்கள் கண்டிப்பாக ஹிட் அடிக்கும். அந்த சூட்டோடு லைக்கா படத்தில் ரஜினி நடித்தால் கண்டிப்பாக பாடம் நல்ல விலைக்கு வியாபாரம் ஆகிவிடும். இதன் மூலம் லைக்காவுக்கு லாபம் கிடைக்கும் என கணக்கு போடுகிறாராம் ரஜினி. அதோடு, சம்பளத்தை படம் ரிலீஸான பின் வாங்கி கொள்ளலாம் என்கிற முடிவுக்கும் வந்திருக்கிறாராம் ரஜினி.
ரஜினியை வைத்து லைக்கா எடுத்த 3 படங்களும் ஓடவில்லை. இந்தமுறை இவர்களின் கூட்டனி வெற்றி பெறவேண்டும் என்பதே எல்லோரின் எண்ணமாக இருக்கிறது.