கோலிவுட்டில் முக்கிய நடிகராக இருப்பவர் அஜித். முன்பே அஜித்துக்கு போட்டியாக விஜய் இருந்தார். எனவே, விஜய் சம்பளம் ஏற்ற ஏற்ற அஜித்தும் கொஞ்சம் கொஞ்சமாக தனது சம்பளத்தை ஏற்றிகொண்டே போனார். இப்போது விஜய் அரசியலுக்கு போய்விட்ட நிலையில் அஜித் தனிக்காட்டு ராஜாவாக மாறிவிட்டார். ஒருபக்கம், தற்போது வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. அதற்கு காரணம் இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. படம் முழுக்க மாஸான காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன்.
இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். அஜித்துக்காகவே படம் பார்க்கலாம். படத்தில் பாடல்களும், பின்னணி இசையும் கூட சிறப்பாக இருக்கிறது என பலரும் சொல்கிறார்கள். ஒன் மேன் ஆர்மியாக அஜித் படத்தை தாங்கி பிடித்திருக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். முதல் நாளிலேயே இப்படம் 30.9 கோடி வசூலை அள்ளியது. மேலும், அஜித்தின் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் முதல் நாள் அதிக வசூல் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. படம் வெளியாகி 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் 150 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அஜித் தனது சம்பளத்தை 175 கோடியாக உயர்த்திவிட்டதாக சொல்லப்படுகிறது. குட் பேட் அக்லியை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே அஜித்தின் கால்ஷீட்டை வாங்க முயற்சி செய்து வருகிறதாம். ஒருபக்கம், வாத்தி மற்றும் லக்கி பாஸ்கர் போன்ற படங்களை இயக்கிய வெங்கி அட்லுரி சொன்ன கதை அஜித்துக்கு பிடித்திருக்கிறதாம். எனவே, அவர் இயக்கத்தில் நடிப்பாரா என்பது தெரியவில்லை. ஏனெனில், இடையில் அஜித்தை வைத்து படம் இயக்க தனுஷும் காத்துக் கொண்டிருக்கிறார்.
மறுபக்கம்,குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் அடித்துள்ளதால் அஜித்தை வைத்து படமெடுக்க வேல்ஸ் இண்டர்நேசனல், ரெட் ஜெயண்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களும் முயற்சி செய்து வருகின்றன.