அக்னி நட்சத்திரம் அறிவியல் இல்லை!.. வானிலை மைய இயக்குனர் அமுதா விளக்கம்!…

Photo of author

By அசோக்

அக்னி நட்சத்திரம் அறிவியல் இல்லை!.. வானிலை மைய இயக்குனர் அமுதா விளக்கம்!…

அசோக்

sun

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் வந்துவிட்டாலே வெயில் அதிரிக்க துவங்கிவிடும். அதிலும் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கும். ஏப்ரல் மாதத்திலேயே சேலம், வேலூர் போன்ற மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரி செல்சியஸை தொட்டு விடும். இந்த வருடமும் சில நாட்களுக்கு முன்பு அந்த மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியதை தொட்டது.

எனவேதான், காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மக்கள் வெயிலில் வெளியே வரவேண்டாம் என சுகாதார மையம் தொடர்ந்து சொல்லி வருகிறது. அதிலும், வெளியே சுற்றும் வேலை செய்பவர்கள், சாலையோரங்களில் கடை வைத்திருப்பவர்கள் எல்லாம் இந்த வெயிலில் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஆனால், வாழ்வாதாரத்திற்கு வெயிலை சமாளித்து அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

சாதாரண வெயிலே மக்களை வாட்டி வதைக்கும் என்றால் கத்திரி வெயில் என அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் வந்துவிட்டால் இன்னும் வெயில் அதிகரிக்கும். மே 5 முதல் 28ம் தேதி வரை இருக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது. அதேநேரம், இது அறிவியல் இல்லை என்பது இப்போது தெரியவந்திருக்கிறது.

இதுபற்றி விளக்கமளித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதா ‘கத்திரி வெயில் அறிவியல் பூர்வமானது இல்லை. இது அந்தக் காலத்தில் இருந்தே பஞ்சாங்கத்தின் அடிப்படையில் நம்பப்படும் ஒன்றே தவிர இந்திய வானிலை ஆய்வு மையம் இதுபற்றி எந்த அறிவிப்பும் வெளியிடாது’ என கூறியிருக்கிறார்.