ADMK: அதிமுக ஒருங்கிணைய வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த இபிஎஸ் செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார். செங்கோட்டையனுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்தார்.
இபிஎஸ்யும் அமித்ஷாவை சந்தித்தார். ஆனால் அவர் ஒருங்கிணைப்பு நடவடிக்கையை ஏற்று கொள்ளவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்தும் பலர் விலகி வந்தனர். இந்நிலையில் செங்கோட்டையன் டிடிவி தினகரனை ரகசியமாக சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு அண்ணாமலை டிடிவி தினகரனை சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் பேசியது குறிப்பிடத்தக்கது.
ஓபிஎஸ்யும், செங்கோட்டையன் அண்ணன் சம்மதித்தால் நிச்சயம் அவரை சந்தித்து பேசுவேன் என்று கூறினார். இத்தகைய சூழலில் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இவர்கள் மூவரின் ஒரே குறிக்கோள் அதிமுகவில் இணைய வேண்டும் என்பதேயாகும்.
அதனால் இவர்கள் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைவார்களா இல்லை மீண்டும் மத்திய அமைச்சர்களிடம் பேச்சு வார்த்தை நடத்துவார்களா அல்லது தவெக உடன் இணைவார்களா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது. இவர்களுடன் அண்ணாமலையும் இணைவார் என்று சொல்லப்படுகிறது. இந்த கூட்டணி உறுதி படுத்தப்பட்டுவிட்டால் அது அதிமுக- பாஜகவிற்கு எதிரான மெகா கூட்டணியாக உருவாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என சொல்லப்படுகிறது.