காசாவிற்கு கருணை காட்டச் சொல்வது ஆகச்சிறந்த நகைச்சுவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை எதிர்வினை!!

0
173
Asking to show mercy to Gaza is the best joke.. Annamalai reaction to Stalin!!
Asking to show mercy to Gaza is the best joke.. Annamalai reaction to Stalin!!

DMK BJP:காசாவில் நடக்கும் இனப்படுகொலையை கண்டித்து திமுக சார்பில் சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விசிக நிறுவனர் தொல். திருமாவளவன், செல்வபெருந்தகை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதல்வர், காசாவில் நடக்கும் இனப்படுகொலை மனதை உலுக்குவதாகவும், இந்த இரக்கமற்ற படுகொலைகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

மனிதாபிமானம் உள்ள யாரும் இதை பிற நாட்டு விவகாரமாக பார்க்க கூடாது என்றும் கூறினார். இது தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில், உள்ளூர் நிலை ஊசலாடுது உலக அரசியல் தேவையா என்று முதல்வர் ஸ்டாலினை நேரடியாக விமர்சித்துள்ளார். மேலும் கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காசாவை பற்றிய கவலை எதற்கு எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் செல்லாத நிலையில், அண்ணாமலையின் இந்த கருத்து கவனம் பெற்றுள்ளது. கள்ளக்குறிச்சியில் மக்களை காப்பாற்ற முடியாத நீங்கள் காசாவிற்கு கருணை காட்டுவது தான் ஆகச்சிறந்த நகைச்சுவை என்றும் விமர்சித்தார். இதனை தொடர்ந்து மாநிலத்தின் அடிப்படை வசதிகள் சரியாக இயங்காமல் மக்கள் பல சிக்கல்களை எதிர்கொள்ளும் வேளையில், வெளிநாட்டு பயணங்களிலும், உலக அரசியலிலும் கவனம் காட்டுவது பொருத்தமற்றது என அவர் கூறியுள்ளார்.

மேலும் திமுக அரசின் செயல்பாடு மக்கள் நலனுக்காக அல்ல அரசியல் பிரச்சாரத்திற்காக என்ற குற்றச்சாட்டையும் அவர் முன் வைத்தார். அண்ணாமலையின் இந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. பாஜக ஆதரவாளர்கள் இதனை வரவேற்க திமுக வட்டாரங்கள் இதனை விமர்சித்து வருகின்றன. வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அண்ணாமலை எடுத்துள்ள இந்த நேரடி தாக்குதல் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

Previous articleபாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் விஜய்.. கடிதத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்!!
Next articleபாமகவில் தனித்து விடப்பட்ட எம்.எல்.ஏ அருள்.. விவாதத்தை ஏற்படுத்திய அருளின் காரசாரமான பதில்!!