TVK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான பணிகளில் தேர்தல் களம் முழுவீச்சுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜய்யின் தவெக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக மக்கள் சந்திப்பு பணிகளை மேற்கொண்ட விஜய்க்கு கரூர் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் விஜய் சுமார் ஒரு மாத காலம் வெளியில் தலை காட்டாமல் இருந்தார்.
அதன் பிறகு தவெக சார்பில் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தின் மூலம் அக்கட்சி மீண்டும் புத்துயிர் பெற்றது நிரூபணமானது. இவ்வாறான நிலையில் விஜய் புதுச்சேரியில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதில் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் போன்றோர் கலந்து கொள்ள வேண்டாமென தவெக சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இளைஞர்கள் மரம், கரண்ட் கம்பம் போன்ற மின்சாதன பொருட்கள் மீது ஏறக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பரப்புரைக்கு 5000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
அதுவும் க்யூ ஆர் கோடு கொண்ட அனுமதி பாஸ் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், இது புதுச்சேரியில் நடைபெறும் பிரச்சாரம் என்பதால் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் பொது வெளியில் மக்களை சந்திக்கும் முதல் நிகழ்ச்சி என்பதால் இதனை கரூர் பிரச்சாரம் போல் இல்லாமல் மிகவும் கவனமான முறையில் நடத்த விஜய் உத்தரவிட்டுள்ளாராம்.

