அதிமுக ஒருங்கிணைப்பு.. அவர்களிடம் கேளுங்கள்!! ஓபிஎஸ் பதிலால் பரபரப்பு!!

0
135
AIADMK integration.. Ask them!! Excited by OPS response!!
AIADMK integration.. Ask them!! Excited by OPS response!!

ADMK: பல அணிகளாக பிரிந்து இருக்கும் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என கழக குரல் எழுந்து வரும் நிலையில், இன்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து அதிமுக நிர்வாகிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பிரிந்த தலைவர்களை சேர்ப்பதற்கான ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதிமுக அமைச்சர்கள் பலரும் ஓபிஎஸ், தினகரன், சசிகலா, செங்கோட்டையன் போன்றவர்களை துரோகிகள் என்று கூறி வருவதால் இந்த இணைப்பு சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது. பொதுக்கூட்டத்தில் பேசிய இபிஎஸ், இந்த தேர்தலில் அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறியிருக்கிறார். இந்த சமயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், அதிமுக ஒன்று சேர பாஜக பாஜக விரும்புவது பற்றிய கேள்விக்கு, இதை பொதுக்குழு நடத்துவோரிடம் தான் கேட்க வேண்டும் என்றும் பதிலளித்துள்ளார். ஒருங்கிணைவு குறித்து முடிவு எடுக்க வேண்டும் என இபிஎஸ்க்கு, ஓபிஎஸ் டிசம்பர் 15 வரை கெடு விதித்த நிலையில் இவரின் இந்த பதில் கவனம் பெற்றுள்ளது. மேலும் ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் சேர்க்கபடவில்லை என்றால் அவரின் அடுத்த கட்ட நடவடிக்கை திமுகவா, தவெகவா, பாஜகவா இல்லை தனிக்கட்சி தொடங்குவது என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன.

Previous articleவிஜய்க்கு ஒன்றிய அரசை பற்றி ஒன்றும் தெரியாது.. லெஃப்ட் ரைட் வாங்கிய பாஜக தலைவர்!!
Next articleஅதிமுகவில் ஆட்சி பங்கு.. எம்.பி. தம்பிதுரை சொன்ன தகவல்!! வாயடைத்து போன பாஜக!!