அதிமுகவின் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ ஆர் பி உதயகுமார் அவர்களும் தங்களுடைய துறையில் என்னென்ன சாதனைகள் புரிந்தவர்கள் என்று கேட்டால் யாருக்கும் தெரியாது.
ஆனால் என்னென்ன நகைச்சுவை செய்தார்கள் என்று கேட்டால், இன்று புதிதாக என்ன தத்துவங்கள் சொன்னார்கள் என்று கேட்டால், மக்கள் அனைவரும் பட்டியலிட்டு கூறி விடுவார்கள்.
வைகை ஆற்று தண்ணீரை தர்மாகோல் கொண்டு மூடியது, முதல் நமக்கெல்லாம் கொரோனா வராது என்று கூறியது வரை அனைத்தையும் காமெடி சேனல் போல் நடத்திக்கொண்டிருக்கிறார் செல்லூர் ராஜு.
குடிமகன்கள் பாதிப்படைய கூடாது என்பதை என்பதற்காகத்தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன என்று கூறினாரே அதை கல்வெட்டாக கூட எழுதி வைக்கலாம். அதற்கு பக்கத்தில் அவரை உட்காரவும் சொல்லலாம் என்று தெரிவித்து கலகலப்பு ஊட்டினார் ஸ்டாலின்.
செல்லூர் ராஜு ஒரு பேட்டி கொடுத்தால் போதும், அடுத்த அரை மணி நேரத்தில் மைக்கின் முன்னால் வந்துவிடுவார் அமைச்சர் உதயகுமார்.
இருவருக்கும் இதில் போட்டி என்றால் பேட்டி கொடுப்பதில் தான் போட்டி.
மதுரையை ரோம் ஆக்குவேன் என்று சொன்னார் செல்லூர் ராஜு ஆர் பி உதயகுமார் மதுரையின் வளர்ச்சியா? அல்லது அமைச்சர் பதவியா? என்று கேட்டால் நான் மதுரையின் வளர்ச்சிதான் என்று சொல்வேன் என சொல்லி இருக்கின்றார்.
இது உலகமகா நடிப்பு தானே இந்த உலகமகா நடிப்பை இவர்கள் இருவரிடமும் தான் கற்றுக்கொள்ள முடியும் என்று ஸ்டாலின் நகைச்சுவையாக தெரிவித்தார்.