2021ம் வருடம் சட்டசபை தேர்தலுக்கு தேமுதிக தயாராகி வருகின்றது எனவும், விஜயகாந்த் ஆறுதல் இறுதிகட்ட பிரச்சாரத்திற்கு நிச்சயமாக வருவார் எனவும் அந்த கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருக்கின்றார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற கட்சியின் நிர்வாகி ஒருவருடைய திருமண விழாவில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த், பல நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கின்றார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேமுதிக என்றுமே விவசாயிகள் பக்கம்தான் இருக்கும் எனவும், டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு சுமூகமான தீர்வை காண வேண்டும் எனவும், தெரிவித்தார்.
ஜனவரி மாதத்தில் நடைபெறவிருக்கும் கட்சி உடைய செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னர் கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும், அதுவரையில் அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக தொடரும் எனவும், பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். அதோடு, நடிகர் ரஜினிகாந்த் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் போன்றவற்றை அறிவித்து பொதுமக்களை சந்தித்து பிரச்சாரம் செய்த பின்னர், கூட்டணி தொடர்பாக பேசுவதாகவும், பிரேமலதா விஜயகாந்த் கூறியிருக்கின்றார்.