சென்ட்ரல் விஸ்டா கட்டுவதானால் இதையும் செய்ய வேண்டும்! எதிர்கட்சிகள் பிரதமரிடம் கோரிக்கை!
உலகில் பலர் வாழ்வாதாரத்தை இழந்து கொரோனாவிற்கு எதிராக பல போராட்டங்களை சந்தித்து வருகின்றனர்.இந்த அவசர நிலை பிரகடன காலத்திலும்,மாண்புமிகு பிரதமர் அவர்கள் புதிய நாடாளுமன்றம் கட்டுவது, அவருக்கு வீடு கட்டுவது ஆகியவை அடங்கிய சென்ட்ரல் விஸ்டா கட்டிடத்தை கட்டிக் கொண்டு இருக்கிறார்.
கொரோனா காலகட்டத்தில் இந்த செலவுகளை செய்ய வேண்டாம் என்றும் அதில் செலவிடும் தொகையை மக்களின் சுகாதார திட்டங்களுக்கு செலவிடலாம் எனவும் மத்திய அரசுக்கு எதிர் கட்சியான காங்கிரஸ் கட்சியானது அழுத்தம் கொடுத்து வருகிறது.
ஆனால் மத்திய அரசோ அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.அந்த நிலை தொடர்ந்து வருவதால் பிரதமருக்கு காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட 12 கட்சிகள் கூட்டாக சேர்ந்து கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் கோரோனாவினால் வேலை இழந்தவர்களுக்கு ரூ.6000 இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், பதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக உணவுப்பொருட்களை வழங்க வேண்டும் என்றும் எதிர் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.