எதையும் கடைபிடிக்க பொறுமை இல்லை! மிக நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்!

Photo of author

By Hasini

எதையும் கடைபிடிக்க பொறுமை இல்லை! மிக நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்!

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தேர்தல் பணிகள் முடிந்தபின் அதிகரித்து விட்டது. அதன் காரணமாக தற்போதைய அரசு அனைவரையும் கலந்தாலோசித்து முழு ஊரடங்கு அனுமதிக்கப் பட்ட நிலையில், தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில், சில தளர்வுகளுடன் மாநில அரசு ஊரடங்கை தளர்வுகளுடன் அறிவித்து உள்ளது.

ஆனாலும், டாஸ்மாக் அந்த வரிசையில் இல்லாததால் மதுபிரியர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர். மேலும் எதையாவது எதனுடனாவது கலந்து குடிக்க ஆரம்பித்து உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

இந்த நிலையில், தமிழக ஆந்திர எல்லைபகுதியான திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆந்திர மதுபானக் கடைகளுக்கு தமிழ்நாட்டு மதுபிரியர்கள் படையெடுத்துள்ளதால் அங்கு கட்டுக்கடங்காத கூட்டம், மிக நீண்ட வரிசையில் நிற்கும் காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.

அங்கு மது பாட்டில்களை வாங்கு வருவோர்களில் பாதிக்கு மேலே மாஸ்க் அணியவில்லை, தனி மனித இடைவெளியையும் கடை பிடிக்காமல் மது பாட்டிக்களை முண்டியடுத்து வாங்குகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமானதால் மதுபானக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால், தமிழக ஆந்திர எல்லையோர பகுதிகளான நகரி மற்றும் கனகம்மாள் சத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்து ஆந்திர மதுபாட்டில்களை மூட்டை மூட்டையாக கடத்தி சென்று, தமிழக எல்லை பகுதியான திருத்தணி ஆகிய பகுதிகளில் விற்று வருகின்றனர். இதனை காவல்துறை கண்டு கொள்ளாமல் இருப்பதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.