கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேவை! அண்ணாமலை தெரிவித்த அதிரடி கருத்து!

0
131

சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, அந்த கட்சியில் இணைந்த ஒரு சில மாதங்களிலேயே அந்த கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக பொறுப்பேற்றார். சென்ற ஏப்ரல் மாதம் தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் அரவக்குறிச்சி சட்டசபைத் தொகுதியில் அதிமுக கூட்டணியின் சார்பாக அண்ணாமலை போட்டியிட்டு அதில் தோல்வியையும் சந்தித்தார்.

இந்த சூழ்நிலையில், தமிழக பாஜகவின் தலைவராக இருந்த முருகன் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில்தான் தமிழக பாஜக தலைவர் பதவி காலியானது. ஆகவே அண்ணாமலையை தமிழக பாஜகவின் தலைவராக நியமனம் செய்து அந்த கட்சியின் தேசிய தலைவராக இருக்கும் ஜேபி நட்டா உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

பாஜகவின் தேசியத் தலைமையால் அந்த கட்சியின் தமிழகத் தலைவராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை சென்னை தி நகரில் இருக்கின்ற கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழக பாஜகவின் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் ரவி மற்றும் மத்திய அமைச்சரும் முன்னாள் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவருமான முருகன், முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா மற்றும் இல. கணேசன், சட்ட சபை தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் போன்ற மிக மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களும் பங்கேற்றார்கள்.

பாஜகவின் தமிழக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் அண்ணாமலை பத்திரிக்கை நிருபர்களுக்கு பேட்டி ஒன்றை கொடுத்தார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது, கடைகோடி மனிதர்களுக்கும் அங்கீகாரம் கொடுக்கும் கட்சி பாரதிய ஜனதா கட்சி நீட்தேர்வு வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு. கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வில் மிக முக்கியம் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு என்னை போன்ற விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள், அதோடு முன்னாள் தலைவர் முருகன் போன்ற ஏழை குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு நீட் நுழைவுத்தேர்வு வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. மூலை முடுக்கெல்லாம் சென்று நீட்தேர்வு நல்லது என பொதுமக்களிடம் எடுத்து சொல்வோம் என்று தெரிவித்திருக்கிறார் திரு.அண்ணாமலை.

இந்த தேர்வால் மருத்துவப் படிப்புகளுக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவிடப்படுவது தடுக்கப்பட்டு இருக்கிறது. ஏழை குடும்பங்களில் பிறந்த மாணவர்களுக்கு இந்த தேர்வு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை அடுத்த கட்டத்திற்கு நான் கொண்டு செல்வேன். பாரதிய ஜனதா கட்சியின் தலைமை என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு வழங்கியிருக்கும் பொறுப்பை உணர்ந்து செயல்படுவேன் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மத்திய அரசு இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா மாநிலங்களுக்கும் முறைப்படி நோய்த்தொற்று தடுப்பூசி விநியோகத்தை செய்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியான முறை பின்பற்றப்படுவது கிடையாது. மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து மட்டுமே தடுப்பூசி வினியோகம் செய்யப்படுவது கிடையாது, தடுப்பூசி செலுத்தும் வேகம், தடுப்பூசி வீணாவது, உள்ளிட்டவற்றை தடுப்பூசி முக்கிய காரணிகளாக கருத வேண்டும். தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக உறுதிபட வலியுறுத்தும், மூத்த தலைவர்களை கலந்தாலோசித்த பின்னர் தான் இனி தமிழக பாஜகவில் மிக முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

Previous articleதிமுக பிரமுகருக்கு ஒபிஎஸ் வைத்த ஆப்பு!! தனிப்படை அமைத்து தேடுகிறது திருச்சி போலீஸ்!!
Next articleநயன்தாராவை கட்டித் தழுவிய பாடகி!! வைரலாகும் புகைப்படம்!!