குஜராத்தில் கோர விபத்து! டேங்கர் லாரி மற்றும் வேன் நேருக்கு நேர் மோதல்!
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள காம்பாத்திற்கு 8 பேர் வேனில் சென்றனர். இன்று அதிகாலை குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள வாலானா கிராமத்திற்கு, அருகே அவர்கள் பயணித்த வேன் டேங்கர் லாரியின் மீது பயங்கரமாக நேருக்கு நேர் மோதி உள்ளது. இந்த கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மற்றொருவர் காயம் அடைந்து காம்பத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பரிதாபமாக பிரிந்துவிட்டது. இந்த விபத்து அதிகாலை நேரம் நடந்துள்ளது. அதிகாலை 5 மணி அளவில் வடமன் மற்றும் பாவ்நகரில் இணைக்கும் சாலையில் நடந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேன் சாலையின் தவறான சாலையில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களில் இரண்டு பெண்களும் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் கம்பாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.