World Cup Carrom Tournament:அமெரிக்காவில் நடந்த உலக கோப்பை கேரம் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த காஷிமா என்ற பெண் மூன்று பதக்கத்தை வென்று இருக்கிறார்.
அமெரிக்காவில் நடந்த,6வது உலக கோப்பை கேரம் போட்டியில், சென்னையை சேர்ந்த காஷிமா என்ற பெண் மூன்று பிரிவுகளில் முதலிடம் பிடித்து பதக்கத்தை வென்று இருக்கிறார். இதற்கு அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மாபூ பாஷா (வயது-54) இவர் அப்பகுதியில் கேரம் பயிற்சியாளராக இருந்து வருகிறார். தனது மகள் காஷிமா வெற்றி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அவர் தான் 17 வயதில் இருந்து கேரம் பயிற்சியாளராக இருப்பதாகவும். தன் மகள் காஷிமாக்கு 8 வயதில் இருந்து கேரம் பயிற்சி கொடுத்து வருவதாக கூறினார்.
மேலும் உலக கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில், மூன்று பதக்கங்கள் காசிமா வென்று இருப்பது பெருமைக்குரியதாக இருக்கிறது என்றார். மேலும் தான் தண்டையார்பேட்டை, செரியன் நகர், 2வது தெருவில் உள்ள தனியார் மையத்தில், கூலி தொழிலாளர்கள், மீனவர்களின் குழந்தைகள் என 45 நபர்களுக்கு கேரம் பயிற்சி தருவதாக கூறினார்.
மேலும் உலக கோப்பை கேரம் போட்டியில் காஷிமா பங்கு பெற 1.5 லட்சம் ரூபாய் வழங்கி உதவிய, துணை முதல்வர் உதயநிதிக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் தான் நடத்தி வரும் கேரம் பயிற்சி மையத்தை மேம்படுத்த அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறார்.