Eiffel Tower: உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் ஈபிள் டவர் பிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ளது. இதன் மொத்த உயரம் 1,083 உயரமாக இருக்கிறது. இந்த டவர் அடித்தளம், இரண்டாம் தளம், மூன்றாம் தளம் என மூன்று தளங்களை கொண்ட உயர்ந்த கோபுரம் ஆகும். ஈபிள் டவர் 1889 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த டவரை காண உலகில் பல நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் பிரான்ஸ் நாட்டிற்கு வருகை புரிகிறார்கள்.
ஒரு நாளில் மட்டும் பல ஆயிரம் கணக்கான மக்கள் வருகிறார்கள். ஒரு ஆண்டுக்கு 70 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈபிள் டவரை காண வருவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை உலக முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபிள் டவர் மீது வண்ண மின் விளக்குகள் மூலம் அலங்கரிக்கப்படும் அதை காண பல ஆயிரம் மக்கள் ஒன்று கூடுவார்கள்.
எனவே, நேற்று (24.12.2024) மட்டும் சுமார் 12 ஆயிரம் மக்கள் ஈபிள் டவரை காண அப் பகுதியில் கூடி இருக்கிறார்கள். இந்த டவரில் உள்ள முதல் தளதில் இருந்து இரண்டு மற்றும் மூன்றாம் தளங்களுக்கு செல்ல டவர் வசதிகள் உண்டு. இரண்டாம் தளத்தில் இருந்து மூன்றாம் தளத்திற்கு செல்லும் போது டவரில் லிப்ட் ரோபில் எதிர்பாராத விதமாக தீ பற்றி இருக்கிறது.
இந்த தீ மேலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவி உள்ளது. எனவே தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்த போராடி வந்து இருக்கிறார்கள். தீயை அணைக்க சுமார் 4 மணி நேரங்களுக்கு மேல் ஆகி இருக்கிறது என தகவல் வெளியாகி இருக்கிறது. அங்கு கூடி இருந்த 12000 மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.
தற்போது அந்த நாட்டு அரசு ஈபில் டவர் செல்ல தற்காலிக தடை விதித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தின் போது ஈபிள் டவரில் தீ விபத்து ஏற்பட்டு இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் கவலை அடைந்துள்ளார்கள்.