நடிகை ஐஸ்வர்யா ராய் நேற்று அதாவது நவம்பர் 1ஆம் தேதி தனது 51வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இவருக்கு திரைத்துறையினர் என தொடங்கி, அவரது ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால் அவரது கணவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை.
ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் விவாகரத்து நடைபெறவுள்ளது என பேசப்பட்டு வருகிறது. ஆனால் இவர்கள் இருவரும் தங்களின் தரப்பில் இருந்தும் இதுவரை வாய் திறக்காததால் இந்த செய்திகள் கிசுகிசுக்களாகவே உலா வருகின்றது. இந்த கிசுகிசுக்களை உறுதிப்படுத்தும் விதமாக சில மாதங்களுக்கு முன்னர் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் ஆகியோரது திருமணத்தில் கலந்து கொண்ட போது கூட, இருவரும் தனித்தனியே கலந்து கொண்டனர்.
ஆனால் அந்த நிகழ்ச்சியில் இருவரும் பேசாதது நடிகர்களுக்கு மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது மட்டும் அல்லாமல் அபிஷேக் பச்சன் நடிகை நிம்ரத் கவுர் உடன் டேட்டிங்கில் உள்ளார் என பல தகவல்கள் பரவி வந்தன. இதற்கு அபிஷேக் பச்சன் இந்த கேள்வி தேவை இல்லாதது என மறுத்துவிட்டார்.
அந்த நிலையில் தஸ்வி படத்தின் புரோமோஷனின் போது, நடிகை நிம்ரத் கவுருடன் இணைந்து அபிஷேக் பச்சன் பேட்டி அளித்திருந்தார். அப்போது அவரிடம் அவரது 15 ஆண்டுகால திருமண பந்தம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் பதில் அளித்துக் கொண்டு இருந்தபோது, நடிகை நிம்ரத் கவுர், ” திருமணங்கள் நீண்ட காலம் நீடிக்காது” என தெரிவித்தார்.