கார் ரேஸில் அஜித்தின் அணிக்கு 2வது இடம்!.. ரசிகர்கள் வாழ்த்து..

Photo of author

By அசோக்

கார் ரேஸில் அஜித்தின் அணிக்கு 2வது இடம்!.. ரசிகர்கள் வாழ்த்து..

அசோக்

Updated on:

ajith car race

நடிகர் அஜித்குமார் கார் ரேஸில் அதிக ஆர்வம் உள்ளவர். கார் ரேஸில் ஈடுபட்டு விபத்தில் சிக்கி முதுகு, கால் போன்ற பகுதிகளில் இவருக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும், அந்த வலிகளையெல்லாம் பொறுத்துக்கொண்டுதான் சினிமாவில் சண்டை காட்சிகளில் நடித்து வருகிறார்.

திருமணம் ஆனபின் அஜித் கார் ரேஸில் கலந்துகொள்ள அவரின் மனைவி ஷாலினி அனுமதிக்கவில்லை. பல வருடங்களுக்கு பின் துபாயில் நடந்த கார் ரேஸில் அஜித்குமாரின் டீம் கலந்துகொண்டது. அந்த போட்டியில் அஜித்தின் டீம் 3வது பரிசை வென்றது. இதுவரை இந்தியாவை சேர்ந்த யாரும் அந்த போட்டியில் பரிசை வென்றது இல்லை.

விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய 2 படங்களிலும் நடித்துவிட்டு கார் ரேஸுக்கு போனார். இந்த ரேஸ் நடந்தபோது அஜித்தின் கார் விபத்தில் சிக்கியது. ஆனாலும், அஜித் அதிர்ஷ்டவசமாக தப்பினார். துபாய் ரேஸ் முடிந்ததும் ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் கார் ரேஸில் கலந்துகொள்ளப்போனார் அஜித்.

இந்த வருடம் அக்டோபர் மாதம் வரை அஜித் கார் ரேஸில் கலந்துகொள்ளவிருக்கிறார். அதன்பின்னரே அவர் புது படம் பற்றி யோசிப்பார் என்கிறார்கள். தற்போது பெல்ஜியம் நாட்டில் கார் ரேஸ் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெல்ஜியத்தில் நடைபெற்ற ஜிடி4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் அஜித்குமாரின் அணி 2வது இடத்தை பிடித்திருக்கிறது. துபாயில் 3வது இடத்தை பிடித்த அஜித்தின் அணி இப்போது 2வது இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறது. இதைத்தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.