coimbatore: கோவையில் நேற்று நடந்த உணவுத் திருவிழாவில் முறையாக ஏற்பாடுகள் செய்யவில்லை என குற்றச்சாட்டு.
கோவை மாவட்டத்தின் பெருமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கோவை மாநகராட்சி திருவிழா நடித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று உணவு திருவிழா நடத்தப்பட்டது. இதற்காக கொடிசியா மைதானத்தில் பிரம்மாண்டமான ஷாட்கள் அமைக்கப்பட்டது. கொங்கு உணவு திருவிழா என்ற பெயரில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் தயாரிக்கப்பட்டது.
பல கேட்டரிங் நிறுவனங்கள் இந்த விழாவில் பங்கேற்று தங்களது உணவுகளை விளம்பரத்திற்காக ஸ்டால்கள் அமைத்து விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த விழாவில் பங்கு பெறுவதற்காக டிக்கெட்டுகள் ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்யப்பட்டது.
குறிப்பாக பெரியவர்களுக்கு 799 ரூபாய் மற்றும் குழந்தைகளுக்கு 499 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை இந்த திருவிழா திடலில் மக்கள் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அலைமோதியது. இந்த உணவு திருவிழாவில் பங்கேற்றவர்களுக்கு முறையாக உணவு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் கைகளுவதற்கு கூட முறையான வசதிகள் செய்யவில்லை என மக்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த விழாவில் நபர் ஒருவர் பங்குபெற்று அங்கு உள்ள ஸ்டால்களில் உணவு கொடுக்கவில்லை என பேசி இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.