PMK: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசியலில் மிகுந்த அனுபவம் கொண்ட டாக்டர் ராமதாஸ்யை பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்களும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரை காண சென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது தந்தையான ராமதாசை பார்க்க சென்ற அன்புமணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலமாகவே ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே தலைமை போட்டி நிலவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கினார் ராமதாஸ்.
ஆனால் கட்சியின் தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது. இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வதாக ராமதாஸ் கூறியிருந்தார். மேலும் வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் வகையில் பாமகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரின் மகனை இளைஞரணி தலைவர் ஆக்கினார் ராமதாஸ். இது அன்புமணியை மேலும் கோபப்படுத்தியது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாமக இரண்டாக பிரிந்துள்ளது. இந்த சமயத்தில் தான் ராமதாசை காண சென்ற அன்புமணிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது ராமதாஸ் ஆதரவாளர்கள் செய்த சதி என்றும் அன்புமணி ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இதனால் அன்புமணிக்கும், ராமதாசிற்கும் ஏற்பட்ட சண்டை முடிவுக்கு வருவதாக தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.