ADMK BJP: பீகாரை தொடர்ந்து தமிழக சட்டமன்ற தேர்தலில் தனது அடியை எடுத்து வைத்துள்ளது பாஜக. பீகாரில் பெற்ற மாபெரும் வெற்றியை தமிழகத்திலும் பெரும் என பாஜகவினர் கூறி வருகின்றனர். இதற்காக அதிமுக-பாஜக கூட்டணி அமைந்துள்ளது. பாஜக தமிழகத்தில் காலூன்ற வேண்டுமென்றால் அதற்கு அதிமுகவில் உள்ள முக்கிய தலைவர்கள் அனைவரும் தேவை. ஆனால் பாஜகவின் எதிர்பார்ப்பு வீணாகிவிட்டது. அதிமுகவிலிருந்து இபிஎஸ்யால் வெளியேற்றபட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா, செங்கோட்டையன் போன்றோர் நால்வர் அணியாக திரண்டு அதிமுக தலைமைக்கு எதிராக நிற்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நால்வர் அணி உருவாக பாஜக தான் காரணம் என்று பலரும் கூறி வந்தனர். அது ஏனென்றால், அதிமுக பல பிரிவுகளாக இருந்தால் தமிழகத்தில் அதிமுகவின் வாக்குகள் சிதறும். இது பாஜகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக பிரிந்தவர்களை ஒன்றிணைத்து, அதிமுகவில் இன்னும் மீதமிருக்கும் முக்கிய தலைவர்களை இந்த நால்வர் அணியுடன் இணைத்து விட்டால், இபிஎஸ் பலவீணமடைந்து விடுவார். அப்போது வேறு வழியில்லாமல் அவர்களை அதிமுக கூட்டணியில் சேர்த்து தான் ஆக வேண்டும். இது தான் பாஜகவின் திட்டம் என்று தகவல் பரவியுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது தான் புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கரனின் பதவி விலகல். இவர் சில தினங்களுக்கு முன்பு கட்சி பணியை தொடர முடியாத காரணத்தினால், அடிப்படை உறுப்பினர் போன்ற எல்லா பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அதிமுக தலைமைக்கு கடிதம் எழுதினார். இதன் பின் இவர் எந்த கட்சியிலும் இணைய மாட்டார் என்று பலரும் கூறி வந்த சமயத்தில், தற்போது அவர் பாஜகவில் இணையப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. பாஜகவில் இணைந்த சில தினங்களில் இவர் நால்வர் அணியுடன் இணைந்து இபிஎஸ் எதிராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவின் இந்த முயற்சி இபிஎஸ்யை கீழிறக்குவதற்கான திட்டம் என்றே பார்க்கப்படுகிறது.

