Atav Arjuna: “எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்” புத்தக வெளியீட்டு விழாவில் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆனந்த விகடன் குழுமத்துடன் சேர்ந்து விசிக ஆதவ் அர்ஜுனாவின் “வாய்ஸ் ஆஃப் காமன்” நிறுவனத்துடன் இணைந்து எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தகத்தை எழுதி வந்தது. இந்த நூல் வெளியீட்டு விழாவில் விஜய் திருமா ஒரே மேடையில் பங்கேற்க மறுத்து விட்டார். இதற்கு திமுகதான் அழுத்தம் கொடுத்து இருக்கிறது என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று சென்னையில் நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசி இருப்பது திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் கூட பொது தொகுதியில் நின்று எம்.எல்.ஏ ஆக விலை, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க கூடாதா? என கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் பேசிய அவர் தமிழக சினிமாவை ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கட்டுப்படுத்தி அரசியல் மூலம் லாபம் ஈட்டி வருகிறார்கள்.
அது குறித்து இதுவரை ஒரு குரல் கூட கேள்வி கேட்க வில்லை என தெரிவித்து இருந்தார். 4000 கோடி ரூபாய் வருமானம் வரக்கூடிய தொழிலை ஒரு நிறுவனம்தான் கட்டுப்படுத்தி வருகிறது என தெரிவித்து இருந்தார். ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் நடத்திய சினிமா வெளியிட்டு நிறுவனங்களை எதிர்த்து பேசும் வகையில் அவரது கருத்து இருந்தது.
அதில், ஆதவ் அர்ஜுனா கருத்துக்கும் விசிக கட்சி பொறுப்பேற்காது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்து வருகிறார். மேலும், திமுக விசிக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஆதவ் அர்ஜுனா கருத்துக்கும் விளக்கம் கேட்க உள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.