ADMK DMDK: 2026 காண தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மக்களை சந்திக்கும் வேலைப்பாடுகளும், கூட்டணி குறித்த பேச்சும், தொகுதி பங்கீடும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் தங்களது கூட்டணியை பலப்படுத்த முயற்சித்து வருகிறது. பாமகவில் அன்புமணி அதிமுக பக்கமும், ராமதாஸ் திமுக பக்கமும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் தேமுதிக மட்டும் கூட்டணியை சஸ்பென்ஸாகவே வைத்துள்ளது.
தேமுதிக பிரச்சாரத்தில் அதிமுக அமைச்சர் ஆர்.பி உதயகுமாரும், பிரேமலதாவும் சந்தித்து பேசிக்கொண்டதால் தேமுதிக அதிமுக உடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அதே போல் நேற்று நடந்த பிரச்சாரத்தில் விஜய்க்கு ஆதரவாக பேசியதால் விஜய் உடன் கூட்டணி அமைப்பார் என்று சொல்லப்பட்டது. இவ்வாறு கூட்டணி குறித்த செய்தியை பிரேமலதா மிகவும் பொறுமையாக கையாண்டு வருகிறார். இந்நிலையில் தேமுதிக பரப்புரையில் பேசிய அவர், அதிமுக எங்களுக்கு சீட் தருவதாக கூறி விட்டது, அதற்காக அதனுடன் கூட்டணி என்று சொல்லி விட முடியாது.
இந்த சீட்டை நாங்கள் 2025 இல் தருவார்கள் என்று நினைத்தோம். அதனால் குழப்பம் ஏற்பட்டது. அதற்காக அவர்களுடன் கூட்டணி என்பதை இப்போது சொல்லிவிட முடியாது என்று கூறினார். இவரின் இந்த கருத்து இபிஎஸ் சீட் தராததால் தேமுதிக இன்னும் அதிமுக மேல் கோபத்தில் தான் உள்ளது என்பதை நிரூபித்திருக்கிறது. மேலும் துரோகம் செய்தவர்களுடன் எப்படி கூட்டணி என்று சொல்ல முடியும் என்பதையும் பிரேமலதா தெளிவாக கூறியிருக்கிறார்.

