Department of Food Safety:உணவகங்களில் சில்வர் பேப்பர் ,பிளாஸ்டிக் கவர் பார்சலுக்கு தடைவிதித்துள்ளது உணவு பாதுகாப்பு துறை.
சென்னையில் உணவகம் ஒன்றில் சில்வர் கவரில் பிரியாணி பார்சல் செய்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதை வாங்கிய ஒருவர் உணவு பார்சலை பிரித்து பிரியாணியை உண்ணும் சில்வர் பேப்பர் உதிர்ந்து வந்துள்ளது. இந்த நிலையில் அது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தான் உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடியான நடவடிக்கை எடுத்துள்ளது.
அதாவது உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின் படி உணவுகள் பிளாஸ்டிக் மற்றும் சில்வர் கவரில் பார்சல் செய்து வழங்கக் கூடாது என்ற சட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் தான் பிரியாணி மற்றும் துரித உணவு கடைகளில் எளிதாகவும் சீக்கிரமாகவும் உணவு பொருட்கள் விற்பனை செய்வதற்கு பண்படுத்தி வந்து இருக்கிறார்கள்.
மேலும் உணவு பொருட்கள் மிக சூடாக பிளாஸ்டிக் கவர்களில் பார்சல் செய்வதால் உணவுப் பொருட்கள் நஞ்சாக மாறுகிறது. இதை தொடர்ந்து உட்கொண்டால் கேன்சர் போன்ற கொடிய நோய்கள் வருவதற்கு வாய்ப்பாக இது அமைகிறது. மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. எனவே இதை தடுக்க பிளாஸ்டிக் மற்றும் சில்வர் பார்சல் முறையை தடை செய்து இருக்கிறது உணவு பாதுகாப்புத்துறை.
எனவே இதனை மீறி சில்வர் கவர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி உணவு வகைகளை பார்சல் செய்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் கடை உரிமையாளர் மீது 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், மீறினால் உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளது.