சனிக்கிழமை, ஜூலை 27, 2024
Home Blog Page 3378

இரண்டு நாட்களுக்குள் பணத்தை கட்டுங்கள் தனுஷ் !! உத்தரவிட்ட நீதிபதி!!

0

இரண்டு நாட்களுக்குள் பணத்தை கட்டுங்கள் தனுஷ் !! உத்தரவிட்ட நீதிபதி!!

சில நாட்களாகவே சினிமா வட்டாரங்கள் மற்றும் பொது மக்களால் பேசப்பட்டு வருவது தான் வரி விலக்கு பிரச்சனை. மேலும் இந்த பிரச்சனை அண்மையில் நடிகர் விஜய் மூலம் ஆரம்பமானது. விஜய் தனது இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு வரி விலக்கு கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் அதைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்பு அந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்திற்கு வந்தது.

அதைத் தொடர்ந்து வரி ஏய்ப்பு கேட்டதற்காக விஜய்க்கு நீதிமன்றம் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், வரி ஏய்ப்பு ஏதும் செய்ய முடியாது என்றும் உத்தரவிட்டு இருந்தது. இதை தொடர்ந்து விஜய் அண்மையில் தான் கொரோனா நிவாரண நிதி கொடுத்ததாக என்னால் மறுபடியும் நிவாரண நிதி செலுத்த முடியாது என்று கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து தற்பொழுது விஜையை போல தனுஷும் வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்த தன் சொகுசு காருக்கு வரி விலக்கு கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தனுஷின் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு 60.66 லட்சம் ரூபாய் வரி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து இந்த வரி விலக்கு கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு தாக்கல் இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதி 50 ரூபாய்க்கு பெட்ரோல் அடிக்கும் பால்காரர் கூட பெட்ரோல் வரி கட்டுகிறார். மேலும் சோப்பு வாங்கும் சாமானியர் கூட டேக்ஸ் கட்டுகிறார். ஆனால் சமுதாயத்தில் நல்ல நிலைமையில் இருக்கும் உங்களை போல நடிகர்கள் தான் வரி விலக்கு கோரி நீதிமன்றத்தை நாடுகின்றனர் என்று தனுஷை கண்டித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து தற்போது இறுதி தீர்ப்பு வெளியாகியுள்ளது. அந்த தீர்ப்பில் 50 சதவீதமான 30 லட்சம் வரியைக் கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த 30 லட்சம் ரூபாய் வரியை 48 மணி நேரத்தில் கட்ட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குளோசிங் பெல்: வங்கிப் பங்குகள் சரிந்தன!! பாரதி ஏர்டெல் 3.97% லாபம்!! சென்செக்ஸ் புதிய உச்சம்!!

0

குளோசிங் பெல்: வங்கிப் பங்குகள் சரிந்தன!! பாரதி ஏர்டெல் 3.97% லாபம்!! சென்செக்ஸ் புதிய உச்சம்!!

இந்திய பங்கு சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 இன்று லாபத்தில் வர்த்தகம் செய்து உள்ளது. மும்பை பங்கு சந்தை குறியீடான பிஎஸ்சி சென்செக்ஸ் 54,717 ஐத் தொட்டு எல்லா சமயத்திலும் புதிய உச்சத்தை எட்டியது. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 50 16,349 ஐப் பெற்றது. இறுதி மணியில், சென்செக்ஸ் 0.23% உயர்ந்து 54,492 ஆக இருந்தது. நிஃப்டி 50 16,294 என 0.22% ஆக இருந்தது. வங்கி நிஃப்டி 0.54% சரிந்து 35,834 இல் நிறைவடைந்தது. சந்தைகளின் குறியீடான ஸ்மால்கேப் குறியீடுகள் நஷ்டத்தில் முடிந்ததால் பரந்த சந்தைகள் கலவையாக மூடப்பட்டன.

அதிக லாபம் அடைந்தவர்கள் (Top Gainers):  பாரதி ஏர்டெல் 3.97% உயர்ந்து சென்செக்ஸ் லாபத்தில் முதலிடத்தைப் பிடித்தது. ஐடிசி, டெக் மஹிந்திரா மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் லாபத்தில் உள்ளன.

அதிக இழப்பை சந்தித்தவர்கள் (Top Losers): எஸ் பி ஐ, இண்டஸ்இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை சென்செக்ஸில் அதிக இறப்பேன் இழப்பில் முதலிடத்தில் உள்ளன.

குளோசிங் பெல்:

இந்திய பங்குசந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இன்று புதிய உச்சத்தை எட்டின. மேலும் பங்குகள் லாபத்தில் மூடப்பட்டன. பரந்த சந்தைகள் நஷ்டதில் முடிந்தது. வங்கி நிஃப்டி 0.54%சரிந்தது.  இந்தியா VIX 2.57%சரிந்தது.

அந்த நடிகையா இவர்? அடையாளமே தெரியலயே! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

0

அந்த நடிகையா இவர்? அடையாளமே தெரியலயே! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

இந்தி திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அக்க்ஷய் குமார் ஆவார். இவர் தமிழ் திரைபடத்தில் எந்திரன் 2.0 படத்தில் ரஜினி காந்த் உடன் வில்லன் கதாபாத்திரத்தில் கூட நடித்திருந்தார். தற்போது இந்தி இயக்குனர் ஒருவரின் நடிப்பில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அக்க்ஷய் குமார், ஹிமா குரோசி, வாணி கபூர், லாரா தத்தா, தலைவாசல் விஜய் என பலரும் நடித்துள்ளனர். இந்த திரைபடத்திற்கு பெல்பாட்டம் என பெயரிடப் பட்டுள்ளது.

இந்த திரைபடத்தில், 1980 களில் நடந்த உண்மை சம்பவம் கதையாக எடுக்கப் பட்டுள்ளது. முதலில் ஓ.டி.டி. யில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கொரோனா நோய் தொற்றின் தீவிரம் குறைந்துள்ளதால், திரையில் ஆகஸ்ட் 19 ம் தேதி வெளியிடலாம் எனவும், மக்கள் திரையரங்கிற்கு விரும்பி வரவழைக்கவும், மக்களை கவரும் வண்ணம் 3D தொழில் நுட்பத்தில், வெளியிடலாம் எனவும் படக்குழு தீர்மானம் செய்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த படத்தில் நடிகை லாரா தத்தா அப்படியே இந்திரா காந்தியின் சாயலில் இருப்பது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இவரும் தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சோஷியல் மீடியாக்களில் சிலர் இந்த நடிகை யார்? அடையாளமே தெரியலையே? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.அந்த அளவிற்கு அந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. மேலும் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை அப்படியே அச்சு அசலாக கண் முன்னே காட்டிய ஒப்பனையாளருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. நீங்களே பாருங்களேன் அச்சு பிசகாமல் அப்படியே உள்ளார்.

அதிமுக மூத்த தலைவர் மரணம்! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

0

அதிமுக மூத்த தலைவர் மரணம்! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

கடந்த ஒன்றரை வருட காலமாக ஆரசியல்வாதிகள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டனர்.அதில் பலர் உயிரிழக்கும் அபாயமும் உண்டானது.அவற்றிலிருந்தே இன்றளவும் சிலரால் மீண்டு வரவில்லை.அந்தவகையில் அதிமுக கட்சியின் மூத்த தலைவரான மசூதன் தற்பொழுது அப்போலோ மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.மதுசூதன் 1991 களில் சட்டமன்றத்தில் போட்டியிட்டு வென்றார்.மேலும் அவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அமைச்சரைவையில் கைத்தறி அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.

தற்பொழுது அவர் வயது மூப்பு காரணமாக கட்சி பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.தற்பொழுது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கூட தனது வாக்கினை செலுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டினர்.ஏனென்றால் தற்பொழுது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது அவரது உடல்நிலை சீராக இல்லாதபோதிலும் வெண்டிலேட்டர் உதவியுடன் தன்னுடைய வாக்கினை செலுத்தினார்.அதுமட்டுமின்றி இவர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கபட்டார்.அவற்றிலிருந்து மீண்டும் வந்தார்.அவ்வாறு மீண்டு வந்த நிலையில் சென்ற மாதம் 20 -ம் தேதி திடீரென்று அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

அதனையடுத்து அவரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.மேலும் அவருக்கு தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.தினந்தோறும் அவரது சிகிச்சை அளிக்கப்படும் விதத்தினை மருத்துவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.அவ்வாறு கூறுகையில் அவர் தீவீர சிகிச்சை பிரிவை கடந்துவிட்டதாக முதலில் கூறினர்.ஆனால் தற்போது  சிகிச்சை பலனின்றி  மதுசூதன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இவ்வாறு மருத்துவர்கள் கூறியதால் அதிமுக முன்னால் அமைச்சர்கள்,முக்கிய நிர்வாகிகள்,அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ்,பாலகங்கா,வெங்கடேஷ்பாபு ஆகியோர் அப்போலோ மருத்துவமனைக்கு செல்கின்றனர்.அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆரம்ப கட்டக்காலத்திலிருந்து பெரும் ஆதரவாகவே மதுசூதன் இருந்தார் என்பது குறிபிடத்தக்கது.மேலும் இவர் மரணத்தால் கட்சி தலைமை பெரும் சோகத்தில் உள்ளது.

படப்பிடிப்பு களத்தில் தவறி விழுந்த நடிகர்!! 8 தையலுக்கு பிறக்கும் தொடர்ந்து தனது காட்சியில் நடிக்கிறாராம்!!

0

படப்பிடிப்பு களத்தில் தவறி விழுந்த நடிகர்!! 8 தையலுக்கு பிறகும் தொடர்ந்து தனது காட்சியில் நடிக்கிறாராம்!!

பிரபல தமிழ் திரைப்படம் இயக்குனர் சேரன். மேலும் இவர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்கிய வெற்றிக் கொடிகட்டு, ஆட்டோகிராப் மாற்றம் தவமாய் தவமிருந்து போன்ற திரைப்படங்கள் தேசிய திரைப்பட விருதுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் சொல்ல மரந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் போன்ற பல திரைப் படங்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டில் பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்களிடம் மேலும் பிரபலமானார்.

இவர் ஆரம்பத்தில் சில திரைப்படங்களில் தயாரிப்பு மேலாளராக பணி புரிந்தார். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் புரியாத புதிர் என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முதலில் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதை தொடர்ந்து சேரன் பாண்டியன் முதல் நாட்டாமை வரை அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அதன் பிறகு கமலஹாசனுடன் இணைந்து மகாநதி திரைப்படத்தில் இயக்குனராக பணியாற்றினார்.

மேலும் இவர் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில் அண்மையில் இயக்குனர் சேரன் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் சேரன், கௌதம் கார்த்திக் உட்பட பல நடிகர்கள் ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படத்தில் நடித்து உள்ளனர். மேலும் இத்திரைப்படத்தை நந்தா பெரியசாமி இயக்கி வருகிறார்.

பி.ரங்கநாதன் தயாரிக்கும் இப்படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஷிவாத்மிகா ராஜசேகர் நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது.மேலும் வீடு ஒன்று படத்தில் பிரதானமாக இடம் பெறுகிறது. அந்த வீட்டில் படப்பிடிப்பு நடந்தபோது இயக்குனர் சேரன் கால் தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேரனுக்கு தலையில் 8 தையல்கள் போடப்பட்டு உள்ளது. மேலும் சேரன் படப்பிடிப்பை ரத்து செய்யாமல் தொடர்ந்து தனது காட்சிகளை நடித்துக் கொண்டு உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சாதியை ஒழிக்க அறிஞர்கள் அடையாளத்தை சிதைப்பதா? ராமதாஸ் வேண்டுகோள்

0

சாதியை ஒழிக்க அறிஞர்கள் அடையாளத்தை சிதைப்பதா? ராமதாஸ் வேண்டுகோள்

தற்போதைய திமுக அரசு பதவியேற்ற பின்னர் தமிழகத்தில் பல்வேறு முக்கிய பதவிகளுக்கு தங்களுக்கு சாதகமாக செயல்படுபவர்களை நியமித்து வருகிறது.அந்த வகையில் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக நியமிக்கப்பட்டார்.இவரின் நியமனத்திற்கு எதிராக அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் குரலெழுப்பிய நிலையிலும் திமுக அவரின் பதவியை உறுதி செய்தது.இந்நிலையில் பள்ளி பாடப் புத்தகங்களில் உள்ள அறிஞர்களின் பெயருக்கு பின்னால் உள்ள சாதியின் பெயரை நீக்கி அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

சாதி ஒழிப்பு வரவேற்கத்தக்கதே ஆனால் அறிஞர்கள் அடையாளத்தை சிதைக்காதீர்! என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அதில் கூறியுள்ளதாவது.

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின்படியான 12-ஆம் வகுப்பு பொதுத்தமிழ் பாடநூலில் பாட ஆசிரியர் பெயராகவும், சான்றோர் வரலாற்றிலும் இடம் பெற்றிருக்கும் தமிழறிஞர்கள் பலரின் பெயர்களில் இருந்து சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. சாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் வரவேற்கத்தக்கது தான் என்றாலும் கூட, இத்தகைய நடவடிக்கைகள் சாதிக்கு பதிலாக அடையாளத்தை தான் அழிக்கும்.

2021-22 ஆம் கல்வியாண்டில் பயன்படுத்துவதற்காக 2020-ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட பொதுத்தமிழ் பாடநூலின் திருத்தியப் பதிப்பில், பண்டையக் காலத்துப் பள்ளிக்கூடங்கள் என்ற தலைப்பிலான பாடத்தின் ஆசிரியர் பெயர் உ.வே.சாமிநாதய்யர் என்பதிலிருந்து உ.வே.சாமிநாதர் என்று மாற்றப்பட்டிருக்கிறது. அதேபோல், வ.உ.சிதம்பரம் பிள்ளை, உ.வே.சாமிநாத அய்யரின் ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, முதல் தமிழ் நாவலை எழுதிய மாயவரம் வேதநாயகம் பிள்ளை, தமிழன் என்று சொல்லடா… தலை நிமிர்ந்து நில்லடா என்று தமிழரின் தன்மானத்தை உலகிற்கு உணர்த்திய நாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை, இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், சமூகப் போராளியுமான முத்துலட்சுமி ரெட்டி, இலங்கைத் தமிழ் அறிஞர் சி.டபிள்யூ. தாமோதரம் பிள்ளை உள்ளிட்ட தலைவர்கள் & தமிழறிஞர்களின் பெயர்களின் பின்னால் உள்ள சாதிப் பெயர்களும் நீக்கப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில் தேசிகர், தீக்ஷிதர் போன்ற சாதிப் பெயர்கள் தமிழ்ப் பாடநூலில் இருந்து நீக்கப்படவில்லை.

தமிழறிஞர்கள் மற்றும் தலைவர்களின் பெயருக்குப் பின்னால் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டதற்கு காரணம் சாதி ஒழிப்பாகத் தான் இருக்க வேண்டும் என்று யூகிக்க முடிகிறது. சாதியை ஒழிக்க வேண்டும் என்ற அரசின் நோக்கத்தை குறை கூற முடியாது; மாறாக வரவேற்கவும், பாராட்டவும் தான் வேண்டும். அது எட்டப்பட வேண்டிய லட்சியமும் கூட. ஆனால், அனைத்து மக்களிடமும் சமத்துவத்தை ஏற்படுத்துவதன் மூலம் தான் சாதியை ஒழிக்க முடியும். அதற்காகத் தான் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்காக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அத்தகைய நடவடிக்கைகள் தொடர வேண்டும்.

அதை விடுத்து பாடநூல்களில் இடம் பெற்றிருக்கும் தலைவர்களின் பெயர்களில் உள்ள சாதியை நீக்குவது என்பது புரிதல் இல்லாத செயலாகவே தோன்றுகிறது. உ.வே.சாமிநாத அய்யர், வ.உ.சிதம்பரம் பிள்ளை உள்ளிட்டவர்களின் பெயர்களில் உள்ள சாதிப்பெயர் அவர்களின் அடையாளம். உ.வே.சாமிநாதய்யர் என்றால் தமிழ்த்தாத்தா என்ற பெயர் நினைவுக்கு வரும்; அந்தப் பெயர் நினைவுக்கு வந்தால் ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்களை பதிப்பித்தார் என்பது நினைவுக்கு வரும். மாறாக உ.வே.சாமிநாதர் என்றால் அதே பெயர், அதே முதலெழுத்துகளுடன் வாழ்ந்த ஆயிரக்கணக்கானோரில் ஒருவர் என்று கருதி வருங்கால சந்ததியினர் கடந்து சென்று விடக்கூடும். இது அறிஞர்களின் அடையாளத்தை சிதைக்கும்.

சென்னை மாநகரிலும், தமிழகத்தின் பிற நகரங்களிலும் புதிய குடியிருப்புகள் உருவாக்கப்பட்ட போது அவற்றுக்கு நீதிக்கட்சித் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டன. நீதிக்கட்சித் தலைவர்களில் குறிப்பிடத் தக்கவர் ஆற்காடு இராமசாமி முதலியார். இந்தியா விடுதலை அடைவதற்கு முன் சென்னை மாகாணத்தில், மத்திய அரசுப் பணிகளில் 100% இட ஒதுக்கீட்டை வெள்ளையர்களிடம் பேசி வென்றெடுத்து தந்தவர் அவர் தான். ஏ.ஆர். முதலியார் அல்லது ஆற்காடு இராமசாமி முதலியார் என்பது தான் அவரின் அடையாளம். பல சாலைகளுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ஆனால், சாதிப்பெயர்களை நீக்குவதாகக் கூறி அவரது பெயருக்குப் பின்னால் இருந்த சாதி பெயரும், முன்னால் இருந்த ஊர்ப்பெயரும் நீக்கப்பட்டதால் பல சாலைகள் இராமசாமி சாலை என்றே அழைக்கப்படுகின்றன. இராமசாமி என்றால் யார் என்பது பலருக்கும் தெரிவதில்லை. அதனால் எந்த நோக்கத்திற்காக பெயர் சூட்டப்பட்டதோ, அந்த நோக்கம் சிதைந்து விட்டது.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நீண்ட காலம் பணியாற்றியவர் ஆற்காடு லட்சுமணசாமி முதலியார். அவரது காலத்தில் அந்தப் பல்கலைக்கழகம் முதலியார் பல்கலைக்கழகம் என்றே அழைக்கப் பட்டது. சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும் அவர் பணியாற்றினார். எனக்கு வழங்கப்பட்ட மருத்துவப் படிப்புக்கான சான்றிதழிலும் அவர் ஆற்காடு லட்சுமணசாமி முதலியார் என்று தான் கையெழுத்து போட்டிருக்கிறார். ஆங்கிலேயர்களே வியக்கக்கூடிய மருத்துவ வல்லுனராகவும், கல்வியாளராகவும் திகழ்ந்த அவரது பெயர் சாலைகளிலும், ஆவணங்களிலும் லட்சுமணசாமி என்று சுருக்கப்பட்டதால் அவரது அடையாளம் அழிந்து விட்டது. ஆர்.கே.சண்முகம் செட்டியார், டி.டி.கிருஷ்ணமாச்சாரி, சர்.சி.பி.இராமசாமி அய்யர் என சாதி ஒழிப்பு என்ற பெயரில் அடையாளம் இழக்கச்செய்யப்பட்டவர்களின் பட்டியல் மிகவும் நீளமானது.

அதேபோல், உ.வே.சா அய்யர், வ.உ.சி பிள்ளை உள்ளிட்டவர்களின் அடையாளங்களையும் அழித்து விடக்கூடாது. சாதாரணமானவர்களின் பெயர்களுக்குப் பின்னால் உள்ள சாதிப்பெயர்களை நீக்குவதில் எந்தத் தவறும் இல்லை. சாதனையாளர்களின் பெயர்களுக்குப் பின்னால் சாதிப் பெயர்கள் நீடிப்பதை விதிவிலக்காக அனுமதிக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, வ.உ.சிதம்பரம் பிள்ளை போன்றவர்களை எவரும் சாதிக்காக போற்றவில்லை; சாதனைகளுக்காகவே போற்றுகின்றனர். அதனால், அவர்களின் பெயர்களுக்குப் பின்னால் சாதிப் பெயர் இருப்பதால் சாதி பரவாது.

வட இந்தியத் தலைவர்கள்பெயர்களில் இருந்து சாதிப் பெயர்கள் நீக்கப்படவில்லை. அவர்கள் பானர்ஜி, முகர்ஜி, படேல், மோடி, மேனன், சர்மா, வர்மா, சாஸ்திரி என சாதிப் பெயர்களை இப்போதும் வைத்துக் கொள்கின்றனர். தமிழ்நாட்டில் சாதனை படைத்த தலைவர்களின் அடையாளம் என்ற வகையிலாவது அவர்களின் பெயர்கள் இப்போது வரை எவ்வாறு அழைக்கப்பட்டனவோ அப்படியே நீடிக்க அனுமதிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பெயருக்குப் பின்னால் சாதி பெயரை இட்டுக்கொள்ளும் வழக்கம் ஐம்பதாண்டுகளுக்கு முன்பே முடிவுக்கு வந்து விட்டது. அதனால் இனிவரும் காலங்களில் உருவெடுக்கும் சாதனையாளர்கள்/ தலைவர்களின் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போட வேண்டிய தேவையிருக்காது. ஏற்கனவே சாதிப் பெயர்களுடன் கூடிய தலைவர்களின் பெயர்கள் பாடநூல்களிலும், இதர ஆவணங்களிலும் அப்படியே நீடிக்க அனுமதிக்க வேண்டும். தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க ஒரே வழி சமத்துவத்தை ஏற்படுத்துவது தான். அதற்கான நடவடிக்கைகளைத் தான் அரசு விரைவுபடுத்த வேண்டும். அந்த நடவடிக்கைகளை பா.ம.க. ஆதரிக்கும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்ப துறையில் பல மாற்றங்கள்!! இனிமே ஹேக்கர்ஸால ஒன்னும் பண்ண முடியாது!!

0

தகவல் தொழில்நுட்ப துறையில் பல மாற்றங்கள்!! இனிமே ஹேக்கர்ஸால ஒன்னும் பண்ண முடியாது!!

 

அரசின் தரவுகள் திருடப்படுவதை தடுக்கவும் ஆக்கர்ஸ் இன் ஆதிக்கத்தை தடுக்கவும் 38 அரசு துறைகளின் இணைய பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் இ-ஆபீஸ் திட்டம் என்று அழைக்கப்படும்.

 

இதுகுறித்து அமைச்சர் தங்கராஜ் கூறியதாவது: நமது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக இணையம் மாறிவிட்டது. இந்த சூழ்நிலையில் ஆக்கர்ஸின் ஆதிக்கமும் அதிகரித்து விட்டது. தரவுகள் திருட்டு மற்றும் பாதுகாப்பு நிறல்கள் ஆகியவை நிறைய நடக்கிறது. இவற்றை தடுப்பதற்காக சைபர் செக்யூரிட்டி கட்டமைப்பை உருவாக்கி உள்ளதாக கூறினார். மேலும் அவர் கூறுகையில் அந்த சைபர் செக்யூரிட்டி அமைப்பு 38 அரசு துறைகளில் உள்ள இணையத்தின் முக்கிய ஆவணங்களில் பாதுகாப்பிற்காக, பாதுகாப்பு அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

 

மேலும் அவர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது இன்று தகவல் பாதுகாப்பு அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இதனால் அரசின் எந்த தரவுகளும் திருடு போகாமலும் பாதுகாப்பு வளையம் உடைக்க படாமல் இருப்பதற்கான ஒரு பாதுகாப்பு முயற்சி ஆகும். அலுவலகத்தின் பணிகளை எப்படி எளிமையாக உள்ளது மற்றும் அரசிற்கும் மக்களுக்கும் இடையேயான தொடர்பை எப்படி அடிமையாக்குவது என்பதுதான் இந்த ஆபீஸின் நோக்கம் கடந்த அரசு இந்த வசதியை முறையாக வழங்கவில்லை ஆனால் நாங்கள் இதை கையில் எடுத்து முறைப்படுத்தி உள்ளோம் என்றார்.

சிறப்பாக நடந்து முடிந்த D44 படத்தின் பூஜை!! இனிமே தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்!!

0

சிறப்பாக நடந்து முடிந்த D44 படத்தின் பூஜை!! இனிமே தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்!!

தமிழில் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் தனுஷ். இவர் தமிழில் பல முன்னணி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் நடிப்பு திறனால் 13 தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள், 9 விஜய் விருதுகள், 7 தென்னிந்திய பிலிம்ஃபேர் விருதுகள், ஐந்து விகடன் விருதுகள், ஐந்து எடிசன் விருதுகள், நான்கு தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் ஃபிலிம்பேர் விருதுகள் போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். மேலும் இவரின் ரசிகர்கள் இவருக்கு பெருமளவு ஆதரவு அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் இவரின் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. மேலும் இத்திரைப்படத்தை சிலர் விமர்சித்தாலும் அவரது ரசிகர்களில் இத்திரைப்படத்தை கொண்டாடி தான் வருகின்றனர். இதைத் தொடர்ந்து இவரின் பெயர் சூட்ட D44-வது திரைப்படத்தின் அறிவிப்பு நேற்று வெளியாகி இருந்தது. மேலும் அத்திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து இயக்குனர் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், ராஷி கண்ணன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பதாக நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அபூர்வமாக அறிவித்திருந்தது.

 

இதை தொடர்ந்து இன்று இப்படத்தின் துவக்கப் பூஜை இன்று சென்னையில் உள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் நடைபெற்று உள்ளது. மேலும் இந்த பூஜையில் தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் D44 திரைப்படத்தின் தலைப்பை இன்று மாலை 6 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தகவல் தற்பொழுது தனுஷ் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதை! பாஜகவை கண்டு காங்கிரஸ் மாறும் நிலை!

0

புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதை! பாஜகவை கண்டு காங்கிரஸ் மாறும் நிலை!

தற்பொழுது தமிழகத்தின் பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பொறுப்பேற்றுள்ளார்.இவர் இளம் தலைமுறையை சேர்ந்தவர் என்பதால் தற்போது ஏற்படும் பிரச்சினைகள் அனைத்திலும் அதிகளவு தீவிரம் காட்டி வருகிறார்.அதனால் பாஜக கட்சி முன்பைவிட வலுப்பெற்று சுறுசுறுப்புடன் காணப்படுகிறது.புலியை பார்த்து பூனை சூடு போடும் கதைபோல பாஜகவில் இளம் தலைவரை கண்டு காங்கிரஸிலும் ஒரு இளம் தலைவரை இறக்க உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக 2 முதல் 3 ஆண்டுகள் வரை மட்டுமே பதவி வகிக்க முடியும்.

அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் வேறு தலைவர் நியமிக்கப்படுவார். அந்த வகையில் தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ் அழகிரி கடந்த 2019ஆம் ஆண்டு பதவி ஏற்றார்.தற்பொழுது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் அவரை மாற்றி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.இம்முறை 50 வயதிற்கு கீழ் உள்ளவர்களில் ஒருவருக்கு மாநில தலைவராக நியமிக்கலாம் என்று காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என கூறுகின்றனர்.தற்போதைய நாடாளுமன்ற கூட்டம் நிறைவடைந்ததும் இம்மாதம் இறுதிக்குள் புதிய மாநில தலைவர் அமர்த்தப்படலாம் என்று கூறுகின்றனர்.

இந்த மாநில தலைவர்கள் நியமிக்கும் பட்டியலில் செல்லக்குமார் எம்பி ,மாணிக்கம் தாகூர் எம்பி,கார்த்திக் ,சிதம்பரம் ,ஜோதிமணி எம்பி ,ஆகியோரின் பெயர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.இதை தவிர்த்து செயல் தலைவர்களான விஷ்ணுபிரசாத், ஜெயக்குமார்,மோகன் குமாரமங்கலம்,மயூரா ஆகியோர் உள்ளதாக கூறுகின்றனர். இந்த வரிசை பட்டியலில் கார்த்தி ,சிதம்பரம், விஷ்ணுபிரசாத், வனிதா மற்றும்  ஜோதிமணி ஆகியோர்  50 வயதிற்கும் கீழாக உள்ளனர்.இந்த இளம் வயதுடையவர்கள் பதவி அமர்த்த மூத்த தலைவர்கள் வலி விடுவார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

SBI வங்கி சேவைகள் இந்த 2 நாட்களில் நிறுத்தம்! வெளியானது அறிவிப்பு

0

SBI வங்கி சேவைகள் இந்த 2 நாட்களில் நிறுத்தம்! வெளியானது அறிவிப்பு

நாட்டின் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை கொண்ட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியானது அதன் டிஜிட்டல் சேவைகளில் பராமரிப்பு பணியை மேற்கொள்வதால் ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் அதன் டிஜிட்டல் சேவைகளை சில மணிநேரங்களுக்கு நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தனியார் வங்கிகளுக்கு இணையாக சேவையை வழங்குவதுடன் அதிக அளவிலான வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அவ்வப்போது பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் கொரோனா நோய் தொற்று காலத்தில் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வராமல் வீட்டிலிருந்தே பல வகையான வங்கி சேவைகளை பெற்று கொள்ளும் வகையில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இது தவிர வயது முதிர்ந்தவர்களுக்கான சில சேவைகளையும் அவர்களின் வீடு தேடி சென்று கொடுத்து வருகிறது.

இந்நிலையில் வழக்கம் போல டிஜிட்டல் சேவைகளின் போது பயனர்களுக்கு ஏற்படும் சில பாதுகாப்பு சிக்கல்களை கருத்தில் கொண்டு அவற்றை தடுக்க பராமரிப்பு பணிகளை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக SBI வங்கியின் டிஜிட்டல் சேவைகள் சில மணி நேரங்கள் பாதிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

அதாவது SBI வங்கியின் டிஜிட்டல் தளங்களான யோனோ, யோனோ லைட், இன்டர்நெட் பேங்கிங் மற்றும் யோனோ பிசினஸ் உள்ளிட்ட சேவைகள் ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை, அதாவது இரவு 11.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.45 மணி வரை நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது

அதனால் வாடிக்கையாளர்கள் இந்த குறிப்பிட்ட நேரங்களில் வங்கி சேவைகளை பயன்படுத்த முடியாது என்று SBI வங்கி ட்வீட் செய்துள்ளது. அதில் “ஒரு சிறந்த வங்கி அனுபவத்தை வழங்க பாடுபடுவதால் எங்கள் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்கள் எங்களுடன் பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளது.

இது தவிர புதிய வாடிக்கையாளர்களை டிஜிட்டல் மோசடிகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் சிம் பைண்டிங் வசதியுடன், YONO மற்றும் YONO Lite சேவைகள் வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களின் சிம் வைத்திருக்கும் சாதனங்களில் மட்டுமே வேலை செய்யும் எனவும் அறிவித்துள்ளது.