Tuesday, July 8, 2025
Home Blog Page 19

அமைச்சரவையில் பங்கு..அதிகாரத்தில் பங்கு; திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் காங்கிரஸ்!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக செய்து வரும் நிலையில் கூட்டணிகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம், உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக அங்கம் வகித்து வரும் நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலிலும் திமுகவுடன் தான் கூட்டணி என்பதில் கட்சிகள் உறுதியாக இருக்கின்றனர்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வழக்கத்தை விட குறைவாக மதிமுக, விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் ஆறு தொகுதிகளை மட்டும் பெற்றுக் கொண்டு போட்டியிட்டனர். கடந்த தேர்தலில் விருப்பம் இல்லாவிட்டாலும் ஆறு தொகுதிகளை பெற்றுக்கொண்டோம் இந்த முறை கண்டிப்பாக கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என திமுகவிடம்  கேட்போம் என சிபிஎம் மாநில செயலாளர் பேஸ் சண்முகம் தெரிவித்திருக்கின்றார்.

விசிக தலைவரும் கடந்த தேர்தலை விட கூடுதல் இடங்களை பெறுவோம் எனவும் கூடுதல் இடங்கள் கிடைக்கவில்லை என்றாலும் கூட்டணியில் இருப்போம் என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வைகோவுக்கு மாநிலங்களவை சீட்டு மறுக்கப்படுவதை காரணம் காட்டி கூடுதல் சீட்டு கேட்க உள்ளதாக மதிமுக தரப்பில் கூறப்படுகின்றது காங்கிரஸ் 2011 சட்டமன்றத் தேர்தலில் 63 இடங்களிலும் 2016 சட்டமன்றத் தேர்தலில் 41 இடங்களிலும் போட்டியிட்டது.

ஆனால் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 25 இடங்கள் மட்டுமே காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அதில் 18 இடங்களில் வென்று காட்டியது. இந்நிலையில் காங்கிரசும் கூடுதல் தொகுதி கேட்கலாம் என்ற சூழல் நிலவுகின்றது.

கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்பொழுது அமைச்சரவையில் பங்கு வேண்டும் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று நிச்சயம் கோரிக்கை வைப்போம் எனவும் தெரிவித்துள்ளனர். திமுகவை வீழ்த்தி காட்டுவோம் என அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ளன இன்னும் சில கட்சிகள் இந்த கூட்டணியில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால் பாஜக அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றே தெரிவித்து வருகின்றன தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி நடைபெற நிலையில் அமித்ஷாவின் இந்த கருத்து முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.

இனி இவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு கிடைக்காது; ஆசிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழ்நாட்டில், தொடக்க கல்வியின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களுடைய கல்வி தரத்தை உயர்த்திக்கொண்டு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், மற்றும் சமூக அறிவியல் போன்ற பாடங்களில் பட்டப்படிப்பில் படித்திருக்க வேண்டும்.

உயர்கல்வி தகுதி பெற்றால் மட்டுமே ஊக்க ஊதிய உயர்வு பெற முடியும். ஆனால் சம்பந்தப்பட்ட படங்களில் இல்லாமல் வேறு பாடங்களில் படித்த ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த தொகையை திரும்ப வசூலிக்க அரசு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தவறு செய்துள்ள அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை தொடக்கக் கல்வித் துறையில் 8000 மேற்பட்ட அரசு நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர்.

பள்ளிகளில் ஆறு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் நடத்த பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை பெரும்பாலானோர் இடைநிலை ஆசிரியராக இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்று வரும் நிலையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் பணியிடங்கள் ஒதுக்கப்படுகின்றது.

மேலும் இவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு தருவதற்கு அரசு செய்த விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் தொடங்கு கல்வியின் கீழ் பணி புரியும் இடைநிலை ஆசிரியர்கள் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுடைய கல்வி தரத்தை உயர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஐந்து பாடங்களுக்கும் முதன்மை பாடங்களை பட்டப்படிப்பில் படித்து உயர்கல்வி தகுதி பெற்று இருப்பது அவசியம். ஆனால் தற்போது சிலர் சம்பந்தப்பட்ட பாடங்களில் இல்லாமல் வேறு பாடங்களில் உயர் கல்வி படிப்பை முடித்துவிட்டு ஊக்க ஊதியம் பெற்று வருகின்றனர்.

தமிழ் ஆசிரியர்கள் சிலர் அதுபோல சில வேறுபாடு ஆசிரியர்கள் பிகாம் எம்,காம் படித்துவிட்டு ஊக்க ஊதியம் பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது.

அதனால் ஊக்க ஊதிய உயர்வு பெறும் விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்ட பாடம் தவிர மற்ற பாடங்களில் ஊதிய உயர்வு பெற்றிருந்தார் அவர்களின் பணி பதிவேட்டை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் தமிழ்நாடு தொடக்க கல்வித்துறைக்கு விரைவில் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் மருத்துவம் பார்க்கலாம்; தமிழக அரசு அசத்தல் திட்டம்!

திமுக தேர்தலுக்காக பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்த நிலையில் திமுக வெற்றி பெற்றவுடன் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றது. அதில் அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை சார்பாக மக்களுக்கு மருத்துவம் சார்ந்த நலத்திட்டங்களை செய்வதில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக திகழ்ந்து வருகின்றது.

சென்னை பெரியார் அரசு மருத்துவமனை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் பெரியார் நகரில் முக்கிய மருத்துவ பிரிவுகளுடன் ஆறு தளங்களில் சுமார் 560 படுக்கைகளுடன் பெரிய மருத்துவமனையை உருவாக்கிய நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி திறந்து வைத்தார்.

கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு ஜூன் 15ஆம் தேதி திறந்து வைத்துள்ளார். 240 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரம் படுகைகள் மற்றும் 15 அறுவை சிகிச்சை அரங்குகளுடன் செயல்பட தொடங்கி இருக்கின்றது.

மேலும் இந்த மருத்துவமனைகளின் மூலம் லட்சக்கணக்கான புறநானிகளும் உள்நோயாளிகளும் பயனடைந்து வருகின்றனர். அதுபோலவே சென்னை ஓமந்தூர் அரசு உயர்தரப்பு மருத்துவமனை மேம்பாடு செய்யப்பட்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.

இந்த மருத்துவமனையில் நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை, புற்று நோயை அறுவை சிகிச்சை, இருதயம் மற்றும் நெஞ்சு அறுவை சிகிச்சை, குடல் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது போலவே பல்வேறு மருத்துவ உதவிகளை திமுக ஆட்சி செய்து வரும் நிலையில் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவன திட்டத்தின் மூலமாக கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி, சென்னை, கீழ்பாக்கம் மற்றும் ஆவடி ஆகிய இடங்களில் ஆறு புதிய மருத்துவமனைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இலவச மருந்தகமும் ஒவ்வொரு பகுதிகளும் திறந்து வைத்து பயன்பாட்டில் இருப்பதால் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் திமுக மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றால் இதைவிட அதிக நலத்திட்டங்களை செய்ய காத்திருப்பதாக திமுக சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 2026 தேர்தலில் யார் வெற்றி அடைவார்கள் என மக்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு; ஜூன் 30 ஆம் தேதி வரை தான் டைம்!

ரேஷன் கார்டு என்பதும் மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே அரசு வழங்கக்கூடிய நலத்திட்டங்களை பெற முடியும். தற்போது ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் ரேஷன் கார்டில் புதுப்புது அப்டேட்கள் வெளியாகி வருகின்றது. ரேஷன் கார்டில் eKYC  என்பது ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களுடைய ஆதார் அட்டையை பயன்படுத்தி தங்களது அடையாளத்தை சரிபார்த்துக் கொள்ள முடியும்.

தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 2.26 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கும் நிலையில் உண்மை தன்மையை உறுதிப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது. முன்னுரிமை மற்றும் அந்தியோதயா கார்டுகளில் உள்ள உறுப்பினர்கள் விரல் ரேகையை பதிவு செய்வதற்காக கால அவகாசம் தற்போது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு  நிரந்தரமாக சென்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் பெயர்கள் பல குடும்ப அட்டைகளில் தற்போது வரை நீக்கப்படாமல் உள்ள நிலையில் மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. அதனால் அவர்களுக்கும் உணவுப் பொருட்கள் தொடர்ந்து ரேசன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருவதால் மோசடிகள் ஏற்படுகின்றது.

இந்த முறைகேடுகளை தடுப்பதற்காக பயணிகளின் உண்மை தன்மையை உறுதிப்படுத்தவும், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா கார்டில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின் கைரேகையும் ஆதார் சரிபார்ப்பு மூலம் உறுதி செய்யுமாறு மத்திய அரசு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் மூலம் ரேஷன் கடைகளில் விற்பனை முனைய கருவிகள் மூலமாக ரேஷன் அட்டைதாரர்கள் விரல் ரேகை பதிவு செய்யப்பட்டு. ஆதார் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் இந்த பணி கடந்த மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பல லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளர்கள் தங்கள் விரல் ரேகையை பதிவு செய்யாமல் இருக்கும் நிலையில் ரேஷன் கார்டு eKYC காலக்கெடு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதனால் தற்போது வரை விரல் ரேகை பதிவு செய்யாத பயனாளர்கள் உடனடியாக தங்களுடைய அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும் எனவும் அப்போதுதான் அரசு வழங்கும் திட்டங்களை தொடர்ந்து பெற முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கால அவகாசத்திற்குள் ரேஷன் கடைகளில் சென்று விரல் ரேகை பதிவு செய்யாதவர்களுக்கு பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.

வீட்டில் பெண் குழந்தைகள் இருக்காங்களா; கல்வி உதவி தொகைக்கு உடனே அப்ளே பண்ணுங்க!

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு அரசு சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவதற்காகவும் இடைநீற்றலை தவிர்ப்பதற்காகவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

உயர்கல்வி வரை தொடர்ந்து படிக்க மாதந்தோறும் அல்லது வருடத்திற்கு ஒரு முறையாவது பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்திரா காந்தி உதவித்தொகை திட்டம் பல பெண்களுக்கு உதவிகரமாக உள்ள நிலையில் ஒற்றை பெண் குழந்தைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாக உள்ளது.

இத்திட்டத்தின் மூலமாக மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு 36,200 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மேலும் இந்தத் திட்டத்தின் மூலமாக பயன்பெற வீடுகளில் ஒரே பெண் குழந்தையாக இருக்க வேண்டும். இந்திரா காந்தி உதவித்தொகை திட்டம் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் பல்கலைக்கழகம் மாநில ஆணையம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.

குடும்ப சூழ்நிலை காரணமாக உயர்கல்வியை மேலும் தொடர முடியாமல் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த உதவி தொகை கட்டாயம் கிடைக்கும்.

இந்த திட்டத்திற்கு 30 வயதிற்கு உட்பட்டவராக இருப்பவர்கள் அவசியம் தங்கள் குடும்பத்தில் ஒரே ஒரு பெண்ணாக இருக்க வேண்டும், அதேபோல பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதுகலை பட்டப்படிப்பில் சேர்ந்து படித்திருக்க வேண்டும்.

தொலைதூரக் கல்வியோ அல்லது வேறு எந்த திட்டத்திலும் சேர்த்து இருக்கக் கூடாது. நேரடியாக இரண்டு ஆண்டுகள் கல்லூரிக்கு சென்று படித்தால் மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் உதவித்தொகை பெற முடியும். மேலும் உதவித்தொகை பெறும் பெண்களுக்கு அண்ணன் அல்லது தம்பி யாரும் இருக்கக்கூடாது. ஒரு வீட்டில் இரண்டு பெண்கள் இருக்கும் பட்சத்தில் ஒரு பெண்ணிற்கு இந்த உதவித்தொகை கிடைக்க வாய்ப்புள்ளது

ஒரு குடும்பத்தில் ஒரு மகள் மற்றும் ஒரு மகள் இருந்தால் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது. மேலும் இந்த திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் 3000 மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர்.

முதுகலை பட்டப்படிப்பை முடிக்கும் காலத்திற்கு 36,200 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும். இதன் மூலம் விடுதி மற்றும் பெற கட்டணங்கள் வழங்கப்படாது, இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், இளங்கலை பட்டப்படிப்பு, முடித்ததற்கான சான்றிதழ், முதுகலை பட்ட படிப்பிற்கான கல்வி கட்டணம், ஆதார் கார்டு, வங்கி பாஸ்புக், குடும்ப வருமானச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், முதுகலை படிப்பில் சேர்ந்ததற்கான சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் யுஜிசி யின் இணையதளத்தில் இந்த உதவி தொகை தொடர்பாக தகவல்கள் அறிவிக்கப்படும் கடைசி தேதிக்குள் மாணவிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்

மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா!

மத்திய அரசு சார்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோர்மைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலக்கூடிய குழந்தைகளுக்கு 2025- 26 நிதியாண்டில் ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றது.

முதலில் https://scholarship.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை வலைதளத்தில் சென்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் ஒரு முறை பதிவு மூலம் மட்டுமே சமர்ப்பிக்க முடியும். ஒவ்வொரு மாணவரும் தங்களுக்கு என தனியாக தேசிய மயக்கமாக்கப்பட்ட வங்கியின் மைய வங்கி அமைப்பு என்ற தொழில் நுட்ப முறையில் தங்களுடைய தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளை பெற்றிருப்பது அவசியம்.

விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை தங்களுடைய சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்து இருக்க வேண்டும். அப்போதுதான் கல்வி உதவித்தொகை பெற தகுதியுடையவராக கருதப்படுவர். இந்த திட்டத்தின் மூலமாக கல்வி நிதி உதவி தொகை பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்துவதற்கு மின்னணு முறையில் ஒப்புதல் வழங்கப்படும்..

கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு மிக முக்கியம் ஒன்றாக உள்ளது. பதிவு செய்யப்படாத பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் சென்று தேசிய கல்வி உதவித்தொகை வலைதளத்தில் முதலில் பதிவு செய்தல் வேண்டும்.

அதன் பிறகு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை விண்ணப்பங்கள் ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி 31ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் அனைத்து உயர்கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் அக்டோபர் மாதம் 31ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டையில் இந்த அப்டேட்டை பண்ணீட்டிங்களா; தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!

வாக்காளர் அடையாள அட்டை என்பது மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படும் நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான சேவைகளை விரிவுபடுத்த புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது.

அதன்படி வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், புதிதாக பதிவு செய்தல் அல்லது இதர திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கும் பொழுது 15 நாட்களுக்குள் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

வாக்காளர்களுக்கு இந்த சேவைகளை எளிமையாக்கவும் தாமதங்களை குறைக்கவும் வழிவகுக்கும். இந்த புதிய வழிமுறைகளை அடிப்படையில் விண்ணப்பங்கள் ஆன்லைனில் அல்லது அருகில் உள்ள வாக்காளர் பதிவுகளில் நேரடியாக சென்று சமர்ப்பிக்க வேண்டும் விண்ணப்பங்களை பெற்றவுடன் கள ஆய்வு மற்றும் சரிபார்ப்பு செயல்முறைகள் அடுத்த ஏழு நாட்களுக்குள் முடிக்கப்படும்.

அதன் பிறகு எட்டு நாட்களில் அடையாள அட்டை அச்சிடப்பட்டு விநியோக செய்யப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த செயல்முறையில் இளைஞர்கள் மற்றும் முகவரி மாற்றம் செய்ய விரும்புவோருக்கு வசதியாக இருக்கும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல், சரிபார்ப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்கள் நாடு முழுவதும் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இந்த முகாம்களில் பதிவு செய்து வாக்காளர் அட்டையை பெற்றுக் கொள்ளலாம். அடுத்த 15 நாட்களில் உங்கள் அடையாள அட்டை வீடு தேடி வரும் என்று தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

2026 ஆண்டு நடைபெற உள்ள மாநில சட்டப்பேரவை தேர்தல்களை முன்னிட்டு வாக்காளர் பட்டியலை முழுமையாக புதுப்பிக்கவும் வாக்குப்பதிவு செயல்முறையை வெளிப்படையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது

பிரதான் மந்திரி கிசான் திட்டம்; விவசாயிகளின் வங்கி கணக்கில் இருபதாவது தவணை வரப்போகுது!

பிரதான்  மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது.. விவசாயிகள் இதன் மூலமாக தங்களது விவசாயத்தை மேம்படுத்தி வருகின்றனர்.

மேலும் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி அன்று 19வது தவணை வந்து சேர்ந்த நிலையில் இருபதாவது தவணை எப்போது, வரும் என விவசாயிகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் அரசு இணையதளத்தில் இருபதாவது தவணை குறித்து இன்னும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.19 வது  பற்றிய தகவல் உள்ள நிலையில் பழைய முறையை பார்த்தால் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ஒரு தவணை வந்து சேரும்.

இந்த முறையும் அப்படி வந்து சேரும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். கேஒய்சி முடிக்கவும், இல்லையெனில் ஒரு ரூபாய் கூட கிடைக்காது என தகவல்கள் வெளியாகி வருகின்றது. விவசாயிகள்  நில சரிபார்ப்பை செய்யவும், நில ஆவணங்களை சரியாக பதிவேற்றப்பட்டது என்பதை சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.

வங்கிக் கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் விவசாயிகள் பதிவேட்டில் பதிவு செய்திருப்பது அவசியம். அரசு வழங்கும் பணத்தை பெற இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

விசாயிகள் கேஒய்சி செய்யவில்லை என்றால் உங்களுக்கு வழங்கப்படும் பணம் நிறுத்தப்படும் எனவும், நில ஆவணங்கள் முழுமையடை வில்லை என்றாலும் பணம் கிடைக்காது.

வங்கி கணக்குடன் ஆதார் இணைக்கப்படவில்லை என்றாலும் பணம் செலுத்துவது நிராகரிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.. முதலில் pmkisan.gov.in என்ற தளத்திற்கு சென்று பயனாளி நிலைய அல்லது பயனாளி பட்டியல் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் தங்களுடைய மாநிலம், மாவட்டம் ,வட்டாரம், கிராமம், பற்றிய தகவல்களை நிரப்ப வேண்டும்.

அதன் பிறகு அங்கு கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உங்களுடைய பெயரை பார்க்க வேண்டும். அதில் பெயர் இல்லை என்றால் உடனே சிஎஸ்சி மையம் அல்லது வேளாண்மை துறை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா; கல்யாண தேதி எப்போ!

நடிகை ராஸ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்து வருகின்ற நிலையில் ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக சஸ்பென்ஸ் நிலவி வருகின்றது. இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் இருவரும் ஒன்றாக வெளியேறி ஒரே காரில் புறப்பட்டு சென்றுள்ளனர்.

அதனால் இவர்களுக்கு இடையே காதல் இருப்பதை ரசிகர்கள் தற்போது உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இருவரும் தங்களுடைய காதலை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை, ஆனால் இருவரும் சமூக வலைதளங்களில் பரிமாறிக் கொள்ளும் கருத்துகளும், பொது இடங்களில் ஒன்றாக இருபதும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி விடுகின்றது

கடந்த ஆண்டில் இருந்து ஒரே மாதிரியான சுற்றுலா இடங்களுக்கும் விஜய் தேவரகொண்டா வீட்டிற்கு ராஷ்மிகா செல்வது மற்றும் இன்ஸ்டாகிராமில் அதனை பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றது.

அண்மையில் ராஷ்மிகாவின் பதிவில்  எனக்கு பிடித்தவை அனைத்தும் இந்த படங்களில் உள்ளன இடம், சேலை கொடுத்த அன்பான பெண், புகைப்படக்காரர் என்று பதிவு செய்திருந்தார்.

அந்த புகைப்படங்களை தேவரகொண்டா எடுத்தார் என்றும் சேலையை அவரின் தாய் அன்பளிப்பாக கொடுத்துள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி ராஷ்மிகா மற்றும் விஜய் தேவர்கொண்ட இருவரும் கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் படங்கள் இணைந்து நடித்துள்ள நிலையில் ராஷ்மிகா தேவரகொண்டா ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகி நீக்கம்; தலைமை எடுத்த அதிரடி முடிவு!

அதிமுக கடந்த தேர்தல்களில் தோல்வியை சந்தித்த நிலையில் தற்போது வரும் 2026 தேர்தலில் வெற்றி அடைய தனது கட்சியை எடப்பாடி பழனிசாமி தயார்படுத்தி வருகின்றார். ஆனால் அதிமுகவில் இருந்த ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணங்களால் கட்சி இரண்டாக பிரிக்கப்பட்டது.

யார் அதிமுகவில் தலைவராக இருப்பார்கள் என தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி வந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடித்து வருகின்றார். 2026 தேர்தலுக்காக பல்வேறு முக்கிய முடிவுகளை எடப்பாடி பழனிசாமி எடுத்து வருகின்றார்.

இந்நிலையில்  அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதனின் மகனும் தூத்துக்குடி மாநகராட்சி 59 ஆவது வார்டு கவுன்சிலருமான எஸ் பி எஸ் ராஜா தற்போது அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்..

தனது சொந்த அக்காவிடம் நகை மற்றும் 17 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மோசடி செய்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து சென்னை விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் அவர் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை ராஜா தனது சொந்த அக்காவிடம் மோசடியில் ஈடுபட்டதால் தான் எடுக்கப்பட்டது எனவும் கூறப்படுகின்றது. கணவன் மனைவி இருவரும் பண மோசடியில் ஈடுபட்ட நிலையில் சென்னை மத்திய குற்ற பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயற்சி செய்த பொழுது சென்னை விமான நிலையத்தில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது .