Sunday, July 13, 2025
Home Blog Page 35

பெண்களுக்கு அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு; உடனே விண்ணப்பியங்கள்!!

பெண்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் பெண்களுக்காக இலவச தையல் இயந்திரம், மானிய கடன் திட்டம், மகளிர் சொந்த தொழில் செய்ய கடனுதவி என பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி இருக்கின்றனர்.

பெரும்பாலும் கைம்பெண்கள், மற்றும் ஆதரவற்ற மகளிர்கள், உதவி இல்லாமல் சிரமப்படுபவர்களுக்கு தமிழக அரசு திட்டங்கள் அதிகளவு இருக்கின்றது. அந்த திட்டங்களில் பயன்பெற நல வாரியத்தில் உறுப்பினராக சேர்வது அவசியம். அந்த வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோருக்கு நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எட்டாவது தளத்தில் வரும் 12ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள வரும் பயனாளிகள் தொலைபேசி எண், குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், அலைபேசி ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.

அதன் பிறகு உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் உறுப்பினராக பதிவு செய்யும் பெண்கள் விரும்பும் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்க முடியும்.

இத்திறன் பயிற்சி மேற்கொள்வதால் சுயதொழில் புரிய மாவட்ட தொழில் மையம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் செயல்படுத்தப்படும் சுயதொழில் திட்டங்களில் மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்படுவாரா..ராமதாஸ் எடுக்க போகும் முடிவு என்ன?

பாமக நிறுவனர் ராமதாஸ் பாமகவில் அடுத்தடுத்த நிர்வாகிகளை நீக்கி அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அன்புமணி நீக்கம், பாமக பொதுக்குழு தொடர்பாக ராமதாஸ் பதில் கூறுவதாக தெரிவித்த நிலையில் பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் செயல் தலைவர் அன்புமணிக்கும் இடையே கட்சியை யார் உரிமை கொண்டாடுவது என பல்வேறு போட்டி நிலவி வருகின்றது. ராமதாஸ் நீக்கம் செய்யும் நிர்வாகிகளை அன்புமணி உடனடியாக நியமனம் செய்து போட்டிக்கு போட்டி அரசியல் செய்து வருகின்றனர் இந்நிலையில் தைலபுரம் தோட்டத்தில் முக்கிய நிர்வாகிகளை ராமதாஸ் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றார். மேலும் வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி, வன்னியர் சங்க மாநில மகளிர் அணி தலைவர் வழக்கறிஞர் சுஜாதா, வன்னியர் சங்க மாநில மகளிர் அணி செயலாளர் மற்றும் பாமக மாநிலத் துணைத் தலைவர், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ராமதாஸை சந்தித்து பேசினார்கள்.

பாமகவில் 27 மாவட்ட செயலாளர், ஆறு மாவட்ட தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாமகவில் நிர்வாகிகள் நியமனம் மற்றும் மாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

அன்புமணி கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா பாமக பொதுக்குழு எப்போது கூட்டப்படும் என இன்று பதிலளிப்பதாக ராமதாஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமக அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் மாநிலங்களவை எம்பி சீட்டு அன்புமணிக்கு கிடைக்கவில்லை. தற்போது 2026 ஆம் ஆண்டு வரும் தேர்தலில் பாமக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; அலார்ட் ஆன மருத்துவமனைகள்!!

நாடு முழுவதும் கொரோனா பெருதொற்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் போக்குவரத்து அனைத்தும் ரத்து செய்யப்பட்டு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் மக்கள் மிகவும் அவதி அடைந்து வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது கொரோனா மீண்டும் தலை தூக்கி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது. அதனால் விமான நிலையங்கள் மற்றும் மக்கள் அதிக கூடும் இடங்களில் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அதிக அளவு கூட்டத்தை சேர்க்க வேண்டாம் என சுகாதாரத்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 50 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பெரியவர்களுக்கு 30 படுக்கைகளும், சிறியவர்களுக்கு 20 படுக்கைகளும் என 50 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. அதிநவீன மருத்துவ உபகரணங்களும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில் மதுரை மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிக அளவு காணப்படவில்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு வார்டு மற்றும் உபகரணங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இங்கு சுழற்சி முறையில் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் பணியாற்றுவார்கள்.

காய்ச்சலுக்காக தனி வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு; 2026 தேர்தல் களத்தில் இறங்கிய விஜய்!!

நடிகர் விஜய் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே பொது தேர்வுகளில் முதல் மூன்று இடத்தை பிடிக்கும் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றார்.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக நடத்தப்படுகின்றது. அதனால் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்நிலையில் இந்த ஆண்டு பொது தேர்வு முடிவடைந்த நிலையில் முதற்கட்டமாக தவெக சார்பாக மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்த முடிந்தது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக இந்த விழாவானது மாமல்லபுரத்தில் நடத்த முடிவு செய்துள்ளனர்.

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் இந்த விழா இன்று நடைபெறுகின்றது. இதில் பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கி விஜய் கௌரவிக்க இருக்கின்றார். மேலும் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடந்து முடிந்த உடனே பூத் கமிட்டி பணிகளை தீவிர படுத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடனடியாக பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமனம் செய்து மாவட்ட ரீதியாக பூத் கமிட்டி லிஸ்ட்டை தயாரிக்க வேண்டும் என தவெக விஜய் உத்தரவிட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. தவெக கூட்டணி குறித்து கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு செய்திகள் பரவி வரும் நிலையில் விஜய் தற்போது பூத் கமிட்டி அமைக்க உத்தரவிட்டிருப்பது 2026 தேர்தல் களத்திற்கு விஜய் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

4 நாட்கள் தொடர் விடுமுறை; காலையிலேயே அரசு சொன்ன குட் நியூஸ்!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முழு ஆண்டு தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கோடை விடுமுறை விடப்பட்டது. 45 நாட்கள் விடுமுறைக்கு பிறகு ஜூன் இரண்டாம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் உற்சாகமுடன் பள்ளிக்கு செல்ல தொடங்கியுள்ளனர். புதிதாக சேர்ந்த மாணவர்கள் மற்றும் மீண்டும் பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். மேலும் பள்ளிக் கல்வித் துறை சார்பாக மாணவர்களுக்கு புத்தகபை மற்றும் இலவச நோட்டு புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் வழங்குவது குறித்து பள்ளிகளுக்கு அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் பள்ளி திறந்து ஒரு வாரத்திலேயே அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதிக்கு இன்று மற்றும் நாளை இரு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கி புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற காரைக்கால் கைலாசநாதர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெறுவதால் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. நாளை திருநள்ளாறு கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளதால் நாளைய உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்கள் விடுமுறை அறிவித்தால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் பள்ளி கல்லூரி அரசு அலுவலகங்களுக்கு இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் 14 மற்றும் 21ஆம் தேதிகளில் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

EPS-க்கு வந்த புதிய சிக்கல்; இரட்டை இலை சின்னம் விவகாரம்..தேர்தல் ஆணையம் மீது பெங்களூரு புகழேந்தி வழக்கு!!

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் அணிகள் பிரச்சனை தலை தூக்கி உள்ளது. இபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் கடந்த 2017 ஆம் ஆண்டு இணைந்த நிலையில் ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் இபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

அப்போது அதிமுக இவர்கள்தான் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக பதவி ஏற்க முடிவு செய்த நிலையில் ஓபிஎஸ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் கடந்த 2022 ஆம் ஆண்டு அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.

இதனால் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற தற்காலிக அமைப்பை நடத்தி வருகின்றார். மேலும் இரட்டை இலை சின்னம் அதிமுக பொதுச்செயலாளர் பதவி ஆகியவை தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீது தேர்தல் ஆணையம் அனைத்து தரப்பின் வாதங்களையும் கேட்டது. இந்நிலையில் தமிழகத்தில் ஆறு உறுப்பினர்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக சார்பாக இன்பதுரை மற்றும் தனபால் ஆகிய இரு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் கடந்த வாரம் புகழேந்தி மனுதாக்கல் ஒன்றை செய்தார். அந்த மனுவில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுவில் அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடும் படிவங்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது, மேலும் அவர் அறிவித்துள்ள வேட்பாளர்களை அதிமுக வேட்பாளராக அறிவிக்க கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கப் போகும் என அனைவரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில் இரட்டை இலை சின்ன விவகாரத்தில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பெங்களூரு புகழேந்தி அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

அதில் இரட்டை இலை, அதிமுக விவகாரம் குறித்து புகார் மனு அளிக்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் அது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டன்படி தனது மனுக்கள் மீது 14 மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை அதனால் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் குறித்தான மனு மீது விசாரணை விரைவில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஓய்வூதியதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட்; தமிழக அரசு சொன்ன அசத்தல் அறிவிப்பு என்ன தெரியுமா!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு தற்போது ஏராளமான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசால் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகை 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கக்கூடிய பண்டிகை கால முன்பணம் 4000 ரூபாயிலிருந்து தற்போது 6000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கு வெளியான அறிவிப்பில் கட்டணம் இன்றி ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு பெற புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பினை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழக சட்டசபையில் அறிவித்துள்ளார்.

அதில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ 2000 ஊதிய உயர்வானது ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து கணக்கிட்டு வழங்கப்படும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு 50000 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு சார்பாக உயர்த்தப்படும் அகவிலைப்படி போல அதே அளவிற்கு தமிழக அரசும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கும் எனவும் 2024 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முறை மத்திய அரசால் இரண்டு சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பண்டிகை காலம் முன் பணம் ரூ. 10,000 ஆயிரத்திலிருந்து 20000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். அதனை தொடர்ந்து கல்வி முன் பணம் தொழில்கல்விக்கு ஒரு லட்சம் கலை அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு 50000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

வேகமெடுக்கும் கொரோனா பரவல்; விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடு அமல்!!

கொரோனா பரவல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிகரித்து காணப்பட்ட நிலையில் போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டது. முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

அதன் பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் அனைவருக்கும் செலுத்தப்பட்டதால் கொரோனா பரவால் படிப்படியாக குறைந்தது. மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை சார்பாக அறிவிப்பு வெளியாகி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. புதிய வகை கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சுகாதாரத் துறை சார்பாக அதிகம் மக்கள் கூடும் இடங்களில் உள்ள கழிவறை மற்றும் குடிநீர் தொட்டிகள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்தல் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை விமான நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் நிலையில் விமான நிலையம் வரும் பயணிகளிடம் கண்காணிப்பு பரிசோதனை நடத்தப்படுகின்றது. 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு பரிசோதனை செய்வதற்கு சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. காய்சல் மற்றும் இருமல் பாதிப்பு இருக்கும் பயணிகளுக்கு ஸ்கேனர் கண்காணிப்பு கருவி மூலம் பரிசோதனை செய்யப்படும். கொரோனா தொற்று பரவல் இருக்கும் என கண்டறியப்பட்டால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் மதுரை விமான நிலையத்தில் தற்போது பரிசோதனை தொடங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்து அனைத்து பகுதிகளிலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிதாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு வெளியான குட் நியூஸ்; வங்கி கணக்கில் நேரடியாக பணம் டெபாசிட்!!

தமிழகம் முழுவதும் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் அரசு பள்ளிகளில் தற்போது மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைந்து வருகின்றது. அதனால் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது மற்றும் இலவச சீருடை ,புத்தகம் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர்.

ஆனால் ஒரு சில பகுதிகளில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது மிக மிக குறைவாக இருப்பதினால் அப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகை மண்டலம் அருகே கீழூர் என்ற பகுதியில் உள்ள கோக்கலாடா அரசு உயர்நிலைப் பள்ளியும் தொடக்கப் பள்ளியும் அமைந்திருக்கின்றது. இங்கு மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கின்றது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளி மூடப்பட்ட நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த மக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது.

ஆனால் தற்போது அந்த பள்ளியில் 42 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை எந்த வகுப்பில் சேர்ந்தாலும் அவர்களுடைய வங்கி கணக்கில் 5000 ரூபாய் வரவு வைக்கப்படும், 7 ஆம் வகுப்பு வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு 4000 ரூபாயும், 8 ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு 3000 ரூபாயும் 9ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு 2000 ரூபாயும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்து செல்லும் பொழுது இந்த டெபாசிட் முதிர்வுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த சலுகை குறித்து துண்டு பிரசுரங்கள் அச்சிடப்பட்டு வீடு வீடாக ஆசிரியர்கள் வழங்கி வருகின்றனர். 

தொடர் விடுமுறை..சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் கவனத்திற்கு; அரசு போக்குவரத்து கழகம் சொன்ன ஹேப்பி நியூஸ்!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக தினம்தோறும் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் பணிபுரிபவர்கள் என அனைவரும் சென்னையில் உள்ள நிலையில் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். அவர்களின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பரிசுகள் இயக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருக்கின்றது. அதன் பிறகு சனிக்கிழமை மற்றும் ஞாயிறு என வர விடுமுறை வருவதால் சென்னையில் இருந்து மற்றும் பிற இடங்களில் இருந்தும் தமிழகம் முழுவதும் பயணிகள் செல்லும் வகையில் தினந்தோறும் இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, வேளாங்கண்ணி, நாகை, பெங்களூர், ஓசூர் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று 100 பேருந்துகளும், சனிக்கிழமை அன்று 90 பேருந்துகளும் இயக்கப்படும். அதன் பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, திருவண்ணாமலை, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை அன்று 520 பேருந்துகளும் சனிக்கிழமை 550 பேருந்துக்களும் இயக்கப்படும்.

மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து 24 பேருந்துகள் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 300 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது முதலே பேருந்தில் பயணம் செய்ய முன் பதிவு செய்து வரும் நிலையில் பயணிகள் நீண்ட தூரம் பயணத்தை திட்டமிட்டிருந்தால் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.