Sunday, July 13, 2025
Home Blog Page 4223

3 வயது குழந்தையை காரில் பூட்டிய போலீசார்! அப்படி என்ன ஆத்திரம்?

0

3 வயது குழந்தையை காரில் பூட்டிய போலீசார்! அப்படி என்ன ஆத்திரம்?

கேரள மாவட்டத்தில் திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரத்தில் 3 வயது சிறுமியை காரில் அடைத்து வைத்ததாகவும், அந்த சிறுமி தேம்பித் தேம்பி, அழுத போதும் போலீசார் கண்டுகொள்ளாமல் காரின் சாவியை எடுத்துக் கொண்டு போனதாக புகார் ஒன்று தற்போது பதிவாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி அந்த இடத்தில் சிபு என்பவர் தனது மனைவி மற்றும் 3 வயது மகளுடன் காரில் சென்றுள்ளார்.

அப்போது அங்கு வாகன பரிசோதனைக்காக நின்ற போலீசார் அதிவேகமாக சென்றதன் காரணமாக சிபுவின் காரை மடக்கி நிறுத்தினர். மேலும் அவர் அதிவேகமாக வந்ததன் காரணமாக 1500 ரூபாய் அபராதமும் விதித்தனர். அந்த அபராதத் தொகையை செலுத்திய போது, சிபு நிறைய கார்கள் அதிவேகமாக செல்கிறதே, அதையெல்லாம் ஏன் பிடிக்கவில்லை என கேள்வி கேட்டுள்ளார்.

அதனால் ஆத்திரம் தலைக்கேறிய போலீசார் காரின் கதவுகளை பூட்டி சாவியை எடுத்து வைத்துக் கொண்டனர். அவரது மனைவி மற்றும் சிபு காருக்கு வெளியே நின்ற நிலையில், அவர்களது குழந்தை மட்டும் காருக்குள் தனியாக இருந்தது. அந்த சமயத்தில் காரின் கதவுகளை மூடியதன் காரணமாக குழந்தை பலமாக அழுக ஆரம்பித்தது. குழந்தை அழுவது பற்றி போலீசாரிடம் சொல்லியும், அவர்கள் அதை கண்டு கொள்ளவே இல்லை.

போலீசாரோ அதை கண்டுகொள்ளவே இல்லை. மேலும் சார் சீஸ் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்கள். இதைதொடர்ந்து குழந்தை அழுவதை தாய் அஞ்சனா வீடியோவும் எடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் சிபு அவர்களை தாக்கியதாக வழக்கு பதிவு செய்ய முயற்சி செய்தனர். ஆனால் அந்த வழியே சென்ற பயணிகள் அங்கு கூடி நியாயம் பேசியதன் காரணமாக போலீசார் அவர்கள் மீது எந்த வழக்கும் போடாமல் அவர்களை விடுவித்து விட்டனர்.

அந்த வீடியோ எடுத்த அந்த தாய் இது பற்றி கூறும் போது, போலீசாருக்கு பயந்துதான்  இதுவரை எதுவும் செய்யாமல் இருந்தேன். ஆனால், ஆற்றிங்கல் பகுதியில் பெண் போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுத்ததை மீடியாக்களில் வெளியானது. அதன் காரணமாக தைரியமாக தற்போது இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளேன் என்றார். எனவே  பாலராமபுரம் போலீஸ் மீதும் விரைவில் நடவடிக்கை பாயும் என போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

ராஜா கதைகளில் கேள்விப்பட்டு இருப்போம்! டெல்லி போனால் நேரில் பார்க்கலாம்!

0

ராஜா கதைகளில் கேள்விப்பட்டு இருப்போம்! டெல்லி போனால் நேரில் பார்க்கலாம்!

நாம் பாட்டி சொன்ன கதைகளில் எல்லாம் பார்த்திருப்போம். ஒரு இடத்தில் உள்ளே சென்றால் அது அரண்மனையில் வேறு ஒரு இடத்திற்கு சென்று சேரும். அதன் பெயர்தான் சுரங்கப்பாதை என்று சொல்வார்கள். அந்த காலத்தில் கதைகளோடு கேட்டதோடு சரி. அதை யாரும் நேரில்  எல்லாம் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை.

ஆனால் தற்போது டெல்லி தலைமை செயலகத்தில் இருந்து செங்கோட்டை வரை உள்ள சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதை கேட்கும் போதே உள்ளுக்குள் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. இதன் பயன் என்ன? யாருக்கும் தெரியாமல் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல வேண்டும் அவ்வளவு தான்.

நம் முன்னோர்கள் எவ்வளவு நுண்ணறிவோடு செயல்பட்டு இப்படி ஒரு நுணுக்கமான வேலைகளை செய்துள்ளனர். அது இத்தனை ஆண்டுகாலம் கழித்து நாம் இப்போது தான் பார்த்துள்ளோம் என்பது அரிதிலும் அரிதான நிகழ்வுதான்.

டெல்லி தலைமை செயலகத்தில் இருந்து, செங்கோட்டை வரை சுரங்கப் பாதை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது சுதந்திர போராட்ட காலத்தில், ஆங்கிலேயர்கள் அந்த சுரங்கத்தை பயன்படுத்தி இருக்கலாம் என டெல்லி சட்டசபை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் தெரிவித்துள்ளார். தற்போது அந்த சுரங்கப் பாதையின் முகப்புப் பகுதி கண்டறிந்து உள்ளதாகவும், விரைவில் புனரமைப்பு செய்வதாகவும் தெரிவித்த அவர், அடுத்த ஆகஸ்ட் 15-ல் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு தயார் செய்யப்படும் எனவும், ராம் நிவாஸ் கோயல் மகிழ்ச்சி செய்தியை தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்ய இணையத்தில் பதிவு செய்துள்ளீர்களா? உஷார்! மோசடியில் ஈடுபடும் நைஜீரியர்கள்!

0

திருமணம் செய்ய இணையத்தில் பதிவு செய்துள்ளீர்களா? உஷார்! மோசடியில் ஈடுபடும் நைஜீரியர்கள்!

திருமண மோசடி செய்து ஏமாற்றுவது தற்போதெல்லாம் ஒரு பேஷனாகிவிட்டது. அப்படி சில குற்றங்கள் நடந்ததாக போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. திருமண மோசடி செய்து ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், புது டெல்லியில் வசித்தனர். அவர்கள் நைஜீரியர்கள். ஆப்ரிக்க நாட்டை சேர்ந்தவர்களை தெலுங்கானா சைபர் கிரைம் போலீசார் கடந்த புதன்கிழமை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் செர்ஜ் ஒலிவியர் (33), ஓவோலாபி அபியோடன் ஒமோரிலேவா (31) மற்றும் ஒசாஸ் ப்ரீடோ (39). இவர்கள் அனைவரும் நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் புதுடெல்லி பகுதியில் திலீப் விஹார், நிலோதி பகுதியில் வசித்து வந்தனர். இன்னும் கனோன் எவர்ட் மற்றும் கான்டே மேரி  ஆகிய இரண்டு நபர்கள் இன்னும் தலைமறைவாகவே உள்ளனர். சுற்றுலா விசாவில் இந்தியா வந்த இவர்கள் டெல்லியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர்.

மேலும் சமூக வலைத்தளங்கள் மூலம் மணப்பெண் மற்றும் மணமகன் தேடுபவர்களைத்தான்  இவர்கள் குறியாக செயல்படுகின்றனர். இவர்கள் போலி பெயர்கள் மற்றும் போலி சுய விவரங்களுடன் இவர்கள் அவர்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளனர். இந்த மோசடி திருமண விவரங்களில் அழகான ஆண்களின் புகைப்படங்களையும் பயன்படுத்தியுள்ளனர்.

மேலும் வெளிநாடுகளில் இருப்பதாகவும், அதிகமாக சம்பாதிப்பதாகவும் பொய் தகவல்களையும் வெளியிட்டு உள்ளனர். அவர்களை போலீஸ் மோப்பம் பிடித்து, அவர்களிடம் அவர்கள் போலி முகவரியில் நீண்டநாள் பேசி அதன் பின்தான் கண்டுபிடித்துள்ளனர். சமீபத்தில் இவர்கள் ஐதராபாத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் 26 லட்சம் மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளது.

இந்த புகாரின் பேரில் தான் தெலுங்கானா சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை புது டெல்லி சென்று கைது செய்துள்ளனர். அவர்களை ஐதராபாத்திற்கு கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலும் அடைத்துள்ளனர். இதேபோல சென்னை திருமண தகவல் இணையதளம் மூலமும் நெதர்லாந்து டாக்டர் என்று போலி விளம்பரம் செய்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒரு பெண்ணிடம் பணமோசடி செய்த நைஜீரியா கும்பல் ஒன்று மீண்டும் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளது.

திருமண தகவல் இணையதளத்தின் மூலம் வரன் தேடுவோர்கள் எல்லாம் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், சென்னை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஜூலை மாதம் சென்னை பெரம்பூரை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில், ஆள்மாறாட்டம், மோசடி, இணையவழியில் ஆள்மாறாட்டம் இந்த விதங்களில் ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் டெல்லியிலிருந்து மோசடி கும்பல் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து சென்று உத்தம் நகரில் தங்கியிருந்த அந்த மோசடி கும்பலை பிடித்தனர். பாலினஸ் சிகேலுவோ (வயது 31) மற்றும் சிலிட்டஸ் இகேசுக்வு (வயது 23) என்ற மூன்று நைஜீரியர்களை கைது ஆகஸ்ட் 31 ம் தேதி கைது செய்துள்ளனர்.

அதன் பிறகு அவர்களை விசாரணை செய்து, அவர்கள் மோசடி செயல்களுக்கு பயன்படுத்திய கைபேசி, லேப்டாப், வங்கி கணக்கு பாஸ்புக் மற்றும் 4,30,000 பணம் ஆகியவற்றை கைப்பற்றி உள்ளனர். பின்பு அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கைது செய்து உள்ளனர்.

ஆகானிஸ்தானை விட்டு வெளியேறும் இளம் பெண்களுக்கு கட்டாய திருமணம்! குடும்பமே செய்த கொடுமை!

0

ஆகானிஸ்தானை விட்டு வெளியேறும் இளம் பெண்களுக்கு கட்டாய திருமணம்! குடும்பமே செய்த கொடுமை!

கடந்த மே மாத இறுதியிலிருந்து ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கின. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆப்கன் முழுவதும் தலிபான்கள் வசம் சென்றது. 20 வருடங்களாக நடந்த போரினை முடித்து தற்போது,  ஆப்கனை தபீளிபான்கள் கைப்பற்றி உள்ளனர்.

அதையடுத்து அனைத்து உலக நாடுகளும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலம் பாதுகாப்பாக தங்கள் நாட்டுக்கு அழைத்து வந்து கொண்டு இருந்தன. இந்நிலையில் தலிபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான மக்கள் விமான நிலையங்களில் கூடினர். முடிந்தால் எங்களையும் அழைத்துச் செல்லுங்கள் என்று அனைவரையும் கேட்டுக் கொண்டனர். பெற்ற குழந்தைகளை பெற்ற தாய்மார்களே வேறு நபர்களிடம் கொடுத்து அனுப்பிய நிகழ்வுகளும் நடந்தேறின.

பொது மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பிக்கள் என பலரும் வெளிநாடுகளில் தஞ்சம் தேடும் நிலை ஏற்பட்டது. அமெரிக்கப் படைகள் ஆகஸ்ட் 30ஆம் தேதி இரவு ஆப்கானிஸ்தானிலிருந்து முழுவதுமாக இறுதியாக வெளியேறியதை தொடர்ந்தனர். அதனை தொடர்ந்து தலீபான்கள் தற்போது பெண்களுக்கு புது விதி முறைகளை வகுத்து உள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் அல்லது ஆண் துணை இல்லாத பெண்கள், பயணத்தை தடை செய்துவிட்டனர்.

அதனால் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே பல பெண்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டு, அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் தகுதி உடையவர்களாக ஆக்கப்பட்டனர். என பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானின் ஐக்கிய அரபு அமீரக முகாம்களில் சிலர் தலீபான்களிடம் இருந்து தப்பிக்க வேண்டி திருமணம் செய்ய கட்டாயப்படுத்தினர் என அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி சி.என்.என் செய்தி தெரிவித்துள்ளது.

தப்பிக்க உதவுவதற்காக தங்கள் பெண்களை திருமணம் செய்து கொள்வதற்காகவும் அல்லது கணவர்களாக காட்டிக் கொள்வதற்காகவும் நாட்டை விட்டு வெளியேற விருப்பம் உள்ள சில ஆண்களுக்கு அந்த குடும்பங்கள் பணம் கொடுத்து உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. பெண்கள் கடத்தலுக்கு உள்ளாகும் இதுபோன்ற நிகழ்வுகளை அடையாளம் காண அமெரிக்க தூதர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உதவுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் தாக்குதல்! போலீசார் துப்பாக்கி சூடு!

0

சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் தாக்குதல்! போலீசார் துப்பாக்கி சூடு!

நியூசிலாந்தில் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் 6 பொது ஜனம் காயமடைந்துள்ளனர். நியூசிலாந்தின் நார்த் ஐலேண்டு எனும் மாகாணத்தில் உள்ள ஆக்லாந்து நகரில் நியூ லின் பகுதியில் ஒரு சூப்பர் மார்க்கெட் உள்ளது. அந்த சூப்பர் மார்க்கெட்டுக்குள் கத்தியுடன் வந்த ஒரு 20 – 30 வயதான வாலிபர் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கினார்.

அதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு விரைந்த நியூஸிலாந்து போலீசார் அந்த மர்ம நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அதே இடத்தில் அவர் பலியாகிவிட்டார். அதன் பிறகு காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர் இலங்கையை சேர்ந்த நபர் என்றும், ஐ.எஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்டு இப்படி செய்து இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகம் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதெல்லாம் தேவையா? பஞ்சம் பிழைக்க போன இடத்தில் அதுமட்டும் செய்தால் பரவா இல்லை. எதற்கு இந்த வேண்டாத வேலை. படிக்க போனால் அதுமட்டும் செய்தால் பெற்றோருக்கு  பெருமையாக இருக்கும். அதை விட்டு மற்றவர்களுக்கு அடிமையாகி அவர்கள் செய்யும் செயலை நாம் செய்துவிட்டு எதற்கு இந்த அவப்பெயர்.

மக்களுக்கு சொன்னதை வழங்காததால் கலெக்டரின் பரிதாப நிலைமை!

0

மக்களுக்கு சொன்னதை வழங்காததால் கலெக்டரின் பரிதாப நிலைமை!

மதுரை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு நிலம் கையகப்படுத்துவதில், உரிய இழப்பீடு வழங்கவில்லை என எழுந்த குற்றச்சாட்டில் நீதிமன்ற உத்தரவுப்படி கலெக்டரின் கார் ஜப்தி செய்யப்பட்டுள்ளது. 1981ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் குடியிருப்பு கட்டுவதற்காக எல்லீஸ் நகர் பகுதியில் 99 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

இதற்காக அறிவிக்கப்பட்ட இழப்பீட்டு தொகை குறைவாக இருப்பதாக கூறி 1984 ம் ஆண்டு மீண்டும் இதே வழக்கு தொடரப்பட்டது. கடந்த 37 ஆண்டுகளாக சென்னை ஐகோர்ட்டில் நடந்த இந்த வழக்கு, அதன் பின்னர் மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதன் காரணமாக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடாக  8 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இழப்பீடு வழங்கவில்லை என்றால் கலெக்டரின் கார் மற்றும் கலெக்டரின் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவும் பிறப்பித்தது. அதன்படி இழப்பீடு தொகை வழங்கப் படாததால், மாவட்ட கலெக்டரின் இன்னோவா கார் ஜப்தி செய்யப்பட்டது. ஒரு வழக்கு முடிவுக்கு வர எவ்வளவு நாள் பொறுமை காக்க வேண்டி உள்ளது பாருங்கள்.இந்த நிலைமை முதலில் மாற வேண்டும்.

உலகம் முழுவதும் சுற்ற மோட்டார் சைக்கிள்! திட்டம் வகுத்த தல அஜித்!

0

உலகம் முழுவதும் சுற்ற மோட்டார் சைக்கிள்! திட்டம் வகுத்த தல அஜித்!

அஜித் நடிக்கும் வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் முடிவடைந்த நிலையில் அவர் அங்கேயே தங்கி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நடிகர் அஜீத் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதில் இந்தி நடிகை ஹீமா குரேஷி ஹீரோயினாக நடிக்கிறார். எச். வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். மற்றும் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில் கார் சண்டைக் காட்சி ஒன்று மட்டும் படமாக்க வேண்டி இருந்தது.

அதன் காரணமாக அந்த காட்சியை மட்டும் வெளிநாட்டில் படமாக்க படக்குழு திட்டமிட்டு இருந்தது. கொரோனா காரணமாக அதற்கான வாய்ப்பு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இந்த நிலையில் படக் குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன் ரஷ்யா சென்றனர். அங்கு பிரமாண்டமான சண்டைக் காட்சி பத்து நாட்களில் படக்குழு தயாரித்தது. அதை முடித்துவிட்டு அனைவரும் இந்தியா திரும்பிய நிலையில் நடிகர் அஜித்குமார் மட்டும் இன்னும் திரும்ப வில்லை. அவர் ரஷ்யாவிலேயே தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது ரஷ்யாவில் படப்பிடிப்பு முடிந்ததும், அவர் ரஷ்யா முழுவதும் 5 ஆயிரம் கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிள் மூலம் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், உயர் ரக மோட்டார் சைக்கிளுடன் அவர் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவர் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் சிக்கிம் வரை சுமார் பத்தாயிரம் கிலோ மீட்டர் அவர் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

அஜித் தனது பைக்கில் உலக சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் சொல்லப்படுகின்றன. இந்த எதிர்பாராத மோட்டார் சைக்கிள் பயணங்கள் அவரது பயணத்தின் மீதான ஆர்வத்தைக் காட்டுகின்றன. வெவ்வேறான நிலப்பரப்புகள் மற்றும் வானிலை நிலைமைகள் உடன் தன்னை பழக்கப்படுத்திக் கொள்ள அவர் தனது மோட்டார் சைக்கிளில் உலக சுற்றுப்பயணம் மேற்கொள்வதை பற்றி அவர் தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், சமீபத்தில் அவரது நெருங்கிய வட்டாரங்கள் டைம்ஸ் ஆப் இந்தியா என்ற பத்திரிக்கையின் மூலம் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத் தக்கது.

எதற்காக அவர்களை விசாரிக்க வேண்டும்? சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்!

0

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கும் திமுக கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை மேல் விசாரணை செய்து வருகிறது. இதற்கு அதிமுக தரப்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

இந்த சூழ்நிலையில், கொடநாடு வழக்கில் கூடுதலான ஒரு சிலரை விசாரிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக காவல்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார்கள்.

அந்த வழக்கில் கொடநாடு கொலை விவகாரம் குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட எட்டு பேரை இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்ளவேண்டும். விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இவர்களை விசாரிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மனுதாரர்கள் மூவரும் குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் தெளிவானதாக இல்லை .எனக் கூறியிருக்கிறது.

எதற்காக விசாரிக்க வேண்டும்? எதற்காக அவர்களுக்கு சம்மன் கொடுத்து விசாரணை செய்ய வேண்டும்? என்ற காரணங்கள் விரிவாக தாக்கல் செய்ய வேண்டும் என மனுதாரர்களுக்கு உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கு குறித்த பதில்களை தமிழக காவல்துறை தெரிவிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது..

எடப்பாடியின் கதை இனி அம்பேல்? சாட்டையை சுழற்றும் காவல்துறை!

0

கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரிப்பதற்காக ஏற்கனவே ஒரு தனிப்படை அமைக்கப் பட்ட சூழ்நிலையில் மேலும் நான்கு தனிப்படைகள் தற்சமயம் அமைக்கப்பட்டிருக்கின்றன. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் வருடம் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து சயான் மனோஜ் உட்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்தார்கள். தற்சமயம் இவர்கள் எல்லோரும் பிணையில் வெளியில் வந்திருக்கிறார்கள் இதுகுறித்து வழக்கு.

இந்த வழக்கை மறுபடியும் முதலில் இருந்து தொடர்ந்து விசாரிக்க வேண்டுமென்று காவல் துறையினரும் இந்த வழக்கில் கூடுதல் தகவல்களை அளிக்க இருப்பதாக சயானும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்கள். இதனை தொடர்ந்து அவரிடம் கடந்த 17ஆம் தேதி 3 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர் கொடுத்த புதிய வாக்குமூலம் அதிக முக்கியத்துவம் பெற்றதாக மிகப்பெரிய திருப்பம் ஏற்படும் வகையில் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த வாக்குமூலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பாக அவர் வாக்குமூலம் கொடுத்ததாகவும் ஒரு சில முக்கியமான தகவல்களை காவல் துறையிடம் தெரிவித்ததாகவும் சொல்கிறார்கள்.

இது குறித்த வழக்கில் புலன் விசாரணைக்கு ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. இந்த சூழ்நிலையில், திடீர் திருப்பமாக ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் முன்னரே ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது சூழ்நிலைகள் மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதில் டிஎஸ்பி சந்திரசேகர், சுரேஷ், இன்ஸ்பெக்டர் வேல்முருகன், போன்றோர் இந்தத் அடிப்படையில் இடம் பெற்றிருக்கிறார்கள். கொடநாடு வழக்கில் மிக வேகமாக விசாரணை நடத்துவதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கில் இனி பலர் சிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. பலருக்கு கூறி வைக்கப்படலாம் இந்த வழக்கு விசாரணை மிக வேகமாக நகரும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்ற நாளன்று மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக புகார் வந்தது இருந்தாலும் முன்னாள் முதலமைச்சர் இருக்கும் பகுதி என்ற காரணத்தால், அந்தப் பகுதியில் மின் துண்டிப்பு என்பதே இருக்காது. அப்படி இருக்கும் சமயத்தில் எவ்வாறு மின் துண்டிப்பு நடந்தது என்று சந்தேகம் இருப்பதால் இந்த வழக்கில் இது மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதோடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்த சமயத்தில் மின்சார அலுவலகத்தில் பணியில் இருந்தோர் விவரத்தை காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

தமிழில் அர்ச்சனை செய்ய தடை! உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

0

திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் பல மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து அதிரடி காட்டி வருகின்றது. தமிழக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பையும், ஆதரவையும், பெற்றிருக்கிறது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் அடிப்படையில் அதற்காக உரிய பயிற்சி பெற்று காத்திருப்பவர்கள் உள்ளிட்டவர்களை ஓதுவார்கள் ஆகவும், அர்ச்சகர்களாக நியமனம் செய்து தமிழக அரசு நியமனங்களை வழங்கி வருகின்றது.

இருந்தாலும் இதற்கு தமிழ்நாட்டில் பல இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்து அறநிலையத் துறை சார்பாக செய்யப்பட்ட வரும் அர்ச்சகர் பணி நியமனத்தை எதிர்த்து திருச்சி ஸ்ரீரங்கத்தில் சார்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது ஆகம விதிகளுக்கு எதிராக இருக்கிறது. கோவில்களில் எந்த மொழியில் மந்திரம் சொல்ல வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அரசுக்கோ, இந்து அறநிலைத்துறைக்கோ இல்லை என தெரிவித்ததோடு, அர்ச்சகர்கள் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த சூழ்நிலையில், அந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த சமயத்தில் மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் 1998ஆம் வருடம் உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின் சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆண்டாண்டு காலமாக கோவில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிகளை மாற்ற இயலாது. மத விவகாரங்களில் அரசு தலையிட இயலாது என வாதிட்டு இருக்கிறார். அதோடு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி இருக்கிறார். இருந்தாலும் அவருடைய வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டார்கள்.

கடந்த 2008ஆம் வருடம் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது அவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது எனவும், தமிழில் அர்ச்சனை செய்ய எந்தவிதமான தடையும் கிடையாது எனவும், தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு ஒரு குறிப்பிட்ட மொழியில் தான் அர்ச்சனை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் எந்த விதத்திலும் வற்புறுத்த இயலாது என்றும் தெரிவித்ததோடு, ரங்கராஜன் நரசிம்மன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதோடு ஏற்கனவே உயர்நீதிமன்றம் பரிசீலித்து அளித்த தீர்ப்பிற்கு முரணான முடிவு எடுக்க இயலாது என்றும், முன்னரே எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்ய தேவையில்லை எனவும் அப்படி செய்ய இந்த வழக்கிற்கு எந்தவிதமான தகுதியும் கிடையாது என்றும் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்கள் நீதிபதிகள்.