Monday, July 28, 2025
Home Blog Page 4539

சற்று முன்: திடீரென்று சரிந்த தங்கத்தின் விலை! வாங்க தயாரா?

0

இம்மாத தொடக்கத்தில் இருந்தே குறைந்து வந்த தங்கத்தின் விலை அதிகரித்து இன்று கிராமுக்கு  30 ரூபாய் குறைந்து ஒரு சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த ஆண்டை போலவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. தங்கத்தின் மீதான முதலீடுகள் பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில் வரலாறு காணாத அளவுக்கு ஏற்றத்தை கண்டது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து
ரூ.4605க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 குறைந்து ரூ.36840-க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 ரூபாய் குறைந்து ரூ.4964 க்கு விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 குறைந்து ரூ.39712-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்:

வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதிகரித்து வருகிறது. வெள்ளி ஒரு கிராம் 77.30-விற்க்கும், ஒரு கிலோ
ரூ. 77300 க்கும் விற்கப்பட்டு வருகிறது.

நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் தங்கத்தின் விலை சற்று குறைவது ஒரு மாற்றம் அல்ல. ஒரு நாள் குறைந்து பல நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

டிவி ரிமொட் தர மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரம்! மகன் செய்த செயல்!

0

டிவி ரிமொட் தர மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரம்! மகன் செய்த செயல்!

கடந்த ஒரு வருடமாகவே அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளதால் கிட்ட தட்ட அனைவருமே மன உளைச்சலில் தான் உள்ளோம். பெரியோருக்கு வீட்டு செலவுகள் மற்றும் ஈ.எம்.ஐ.கள் மன உளைச்சல் என்றால் பிள்ளைகளுக்கோ பள்ளி செல்லாததாலும், வீட்டிலேயே உள்ளதாலும், வெளியே மற்ற பிள்ளைகளுடன் விளையாட செல்லாததாலும் மன உளைச்சலில் உள்ளனர்.

இந்த கொடுமையான காலங்கள் மாறும் அதுவரை நாம் அனைவரும் கொஞ்சம் பொறுமையாகவும், அன்புடனும், அரவணைப்புடனும் இணைந்து வாழ்வோம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் இளையபெருமாள் இவருடைய 16வயது மகன் மனோஜ் குமார் ஊரடங்கு காலம் என்பதால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் மகன் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

அதிக நேரம் வீட்டிலேயே டிவி பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டிவி பார்ப்பதற்காக பெற்றோரிடம் ரிமோட் தருமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு அவருடைய பெற்றோர்கள் ரிமோட் எல்லாம் தர முடியாது என மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த மகன் மனோஜ் குமார் ஆத்திரத்தில் திடீரென வீட்டின் அறைக்குள் சென்று தாழ்ப்பாள் போட்டுள்ளான்.

இதையடுத்து நீண்ட நேரமாகியும் சிறுவன் வெளியே வராததால் பயந்து போன பெற்றோர்கள் கதவை உடைத்து பார்த்தபோது சிறுவன் மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பெற்றோர் டிவி பார்ப்பதற்காக ரிமோட் தராததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்! இந்திய அணியின் வீரர்கள் பட்டியல்!

0

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் விளையாட இங்கிலாந்து நாட்டிற்கு சென்ற இருக்கிறது இந்த நிலையில், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டுவென்டி தொடருக்கான இந்திய வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு சென்று மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆட்டங்கள் ஜூன் மாதம் 13 மற்றும் 16 19, 22, 24, 26, ஆகிய தேதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.

போட்டிகளும் ஒரே இடத்தில் நடத்தப்படும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருக்கின்றது. அதோடு கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இந்த போட்டி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான 24 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது. அந்த அணியில் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், லோகேஷ் ராகுல், ரஹானே, மயங்க் அகர்வால், சுப்மன்கில், முகமது ஷமி ரவீந்திர ஜடேஜா அஷ்வின், முகமது சிராஜ், போன்ற முன்னணி வீரர்கள் இந்த அணியில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியலில் பிசிசிஐ அறிவித்திருக்கின்றது. இதன்படி இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவானும் துணை கேப்டனாக புவனேஸ்வர் குமார் அவர்களும் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

35 வயதான ஷிகர் தவான் கடந்த இரண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி இருக்கிறார். தற்சமயம் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் ரன் குவிப்பில் 380 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் இருக்கின்றார். அதோடு மட்டுமல்லாமல் தற்போதைய தனித்தேர்வுக்கு இருக்கின்ற வீரர்களின் மூத்த வீரர் ஷிகர் தவான் தான் இந்திய அணிக்காக கடந்த இரு வருட காலமாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது எல்லோராலும் பாராட்டப் படுகிறது.

இலங்கை செல்லும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் வருமாறு ஷிக்கர் தவான் புவனேஸ்வர் குமார், தேவ்நெட் படிக்கல், ருதுராஜ், கெய்ங்க்வாட், சூரியகுமாரி யாதவ் மணிஷ் பாண்டே ஹர்திக் பாண்டியா நிதிஷ் ரானா, இஷான்கிஷன், சாம்சங் ஆர் சாகர், கே கவுதம்,குர்னல் பாண்டியா,குல்தீப் யாதவ்,தீபக்சாகர்,நவ்தீப்சைனி,சி.சகரியா.

பிரதமரை சந்திக்க இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! காத்திருக்கும் சசிகலா!

0

எப்போதுமே மாநிலத்தின் முதலமைச்சர் பதவி ஏற்றவுடன் டெல்லி பயணம் செய்து பிரதமரை சந்தித்து பேசுவது இந்திய அரசியலில் இயல்பான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இந்த விதத்தில் தமிழக முதலமைச்சராக இருந்த மாதம் ஏழாம் தேதி பொறுப்பேற்றுக்கொண்ட ஸ்டாலின் நோய்த்தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டிவந்த தான் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் செய்ய வேண்டிய இயல்பான செயல்பாடு களில் கூட கவனம் செலுத்த இயலவில்லை என்றும் சொல்லப்படுகிறது. தற்சமயம் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டு நோய் பரவல் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 16ஆம் தேதி டெல்லிக்கு சென்று அங்கே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமிட்ஷா காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆகியோரை சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக பள்ளிக்கு செல்ல இருக்கிறார் என்பதால் இது தமிழகத்திற்கு அரசியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக கருதப்படுகின்றது. ஆகவே ஏற்கனவே அதிமுகவில் பரபரப்பை கிளப்பி வரும் சசிகலா தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்கும் நாளை எதிர்ப்பார்த்து காத்து இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் நேருக்கு நேர் சந்தித்த பின்னரும் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசின் அணுகுமுறையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார் சசிகலா. பாரதிய ஜனதா கட்சி மற்றும் திமுக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே இந்த பயணம் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே முதலமைச்சர் ஸ்டாலின் இந்த டெல்லி பயணம் தமிழகத்தில் அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் நிகழலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி! கடும் சீற்றத்தில் சீமான்!

0

திருச்சி கார் உதிரிபாக கடைக்காரரை மிரட்டிய வழக்கு ஒன்றில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். திருச்சியைச் சார்ந்த யூடியூப் சேனல் நடத்தும் சாட்டை துரைமுருகன் இவர் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் அணியில் இருந்து வருகின்றார்.

கார் உதிரிபாக கடை வைத்திருக்கும் ஒருவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாக தவறாக பேசி விட்டதாக தெரிவித்து துரைமுருகன் கார் உதிரிபாக கடைக்காரரை அவருடைய கடைக்குச் சென்று மிரட்டி இருக்கின்றார்.

இதுதொடர்பாக அந்தக் கடைக்காரர் அளித்த புகாரின் பேரில் சாட்டை துரைமுருகன், வினோத், சரவணன், சந்தோஷ் உள்ளிட்ட 4 பேரும் திருச்சி கே கே நகர் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். அதோடு மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள். நான்கு பேர் கைது செய்யப்பட்டு தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து இருப்பதாக தெரிகிறது.

சதத்தை நெருங்கும் பெட்ரோல் டீசல் விலை!

0

இந்தியாவைப் பொறுத்தவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தையில் நிலைமை வரும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.

சில காலத்திற்கு முன்பு வரையில் இந்த பெட்ரோல் டீசல் விலையை மாதம் ஒருமுறை நிர்ணயம் செய்யும் நடைமுறை இருந்து வந்தது. ஆனால் இதனை மாற்றி நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை மத்திய அரசு அறிவித்தது.

அதன்படியே இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்தநிலையில், நோய்த்தொற்று பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இருந்தது. ஆனால் ஜூன் முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகின்றன.

அந்த வகையில், இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்திருக்கிறது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 24 காசுகள் உயர்ந்து 97 ரூபாய் 43 காசுக்கும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து 96 ரூபாய் 64 காசுக்கும், விற்பனையாகி வருகிறது

பிசாசு 2 படத்தில் நிர்வாணமாக நடித்து உள்ளாரா? ஆண்ட்ரியா?

0

ஆண்ட்ரியா ஒரு பாடகியாக இருந்து பின் திரை உலகில் கால்பதித்து, ஆயிரத்தில் ஒருவன், பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடிகையாக வலம் வந்தார்.

 

ஆண்ட்ரியா சென்னையில் உள்ள அரக்கோணத்தில் பிறந்தவர் ஆண்ட்ரியா. இவர் பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் பயின்றார். இவர் தந்தை ஒரு வழக்கறிஞர். இவங்க 10 வயது முதல் பாடி வருகிறார், மற்றும் மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.

 

திரைப் படங்களில் பாடியுள்ளார். இவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் முதன்முதலாக கிடைத்தது.

 

பிறகு ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், வடசென்னை, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

 

மிஷ்கின் இயக்கிய 2016 ஆம் ஆண்டு வெளிவந்த பிசாசு திரைப்படம் அனைவரின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதில் அவர் பேயை தேவதைபோல் காண்பித்து இருப்பார்.

 

அந்த படம் நன்றாக ஓடியது அடுத்து பிசாசு 2 இயக்கி வருவதாக மிஸ்கின் கூறியுள்ளார். அதில் ஆண்ட்ரியா நடித்துள்ளதாகவும் அதேபோல் கார்த்திக் சுப்புராஜ் இசையமைப்பாளர் மற்றொரு கதாபாத்திரத்தில் பூர்ணா நடித்துள்ளதாக கூறியுள்ளார்.

 

சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்த மிஸ்கின் இந்தப் படத்தில் ஆண்ட்ரியாவை மிகவும் கொடுமை செய்து விட்டேன் என்று அவர் கூறியிருந்தார். சுமார் 10 நிமிடம் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

 

இதுவரை 70 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஆண்ட்ரியா, இந்த படத்திற்கு 1.3 கோடி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இப்படியும் ஒரு கின்னஸ் சாதனை! சீன பெண்ணின் அதிசய வளர்ப்பு!

0

இப்படியும் ஒரு கின்னஸ் சாதனை! சீன பெண்ணின் அதிசய வளர்ப்பு!

அனைத்து பெண்களுமே மற்றவர்களை விட தன்னை அழகாக காட்டி கொள்ள கொஞ்சம் மெனக்கெட்டு தங்களை கொஞ்சம் மெருகூட்டுவது வழக்கம் தான் என்றாலும், இந்த பெண் சற்று வித்தியாசமாக இதை செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அதைப்பற்றி இவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

உலகில் அழகாக இருப்பது என்பது எந்த பெண்ணுக்கு பிடிக்காது.  எல்லா பெண்களும் தங்களை அழகுப்படுத்தி கொள்ள விரும்புவர்.  இவற்றில் முக அழகு முக்கிய இடம் பிடிக்கிறது.  முகத்தில் கண் இமைகள், நல்ல கருமை நிறத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக மஸ்கரா உள்ளிட்ட வண்ண பூச்சுகளை நவீன கால யுவதிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மிக நீண்ட கண் இமைகளை வளர்த்து சீனாவை சேர்ந்த யூ ஜியாங்சியா என்ற பெண் கின்னஸ் சாதனை படைத்து உள்ளார்.  அவரது இமைகளின் மொத்த நீளம் 8 அங்குலம் ஆகும்.  கடந்த 2016ம் ஆண்டில் ஏற்படுத்திய சொந்த சாதனையை அவர் முறியடித்து உள்ளார்.

இதற்காக தொடர்ந்து அவற்றை வளர்த்து வந்துள்ளார்.  இதுபற்றி கூறும் ஜியாங்சியா, எனக்கு ஏன் இவ்வளவு நீண்ட கண் இமைகள் இருக்கின்றன என நான் நிறைய நாட்கள் யோசித்ததுண்டு.  சில ஆண்டுகளுக்கு முன் மலை பகுதியில் 480 நாட்கள் வரை வசித்து வந்தேன் என கூறுகிறார்.

அவர் ஊசி போல் அதனை நீட்டி கொள்கிறார்.  உலகின் மிக நீண்ட கண் இமைகளை கொண்ட பெண் என்ற பெருமையை பெற்று, கின்னஸ் சாதனை படைத்துள்ள அவர் தொடர்ந்து கூறும்பொழுது, இது நிச்சயம் கடவுள் புத்தர் அளித்த பரிசாகவே இருக்கும் எனவும் கூறுகிறார்.

இதனால் எனது அன்றாட வாழ்க்கையில் எந்த சங்கடமும், பாதிப்பும் ஏற்படவில்லை.  அதற்கு பதிலாக, எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியே ஏற்பட்டு உள்ளது என்றும் கூறியுள்ளார்.  இதுபற்றி அவர் வெளியிட்ட வீடியோ வெளிவந்து வைரலாகி உள்ளது.

இனி ஓட்டுனர் உரிமம் வாங்க எட்டு போட தேவையில்லை!

0

அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி மையங்களில் வெற்றிகரமாக பயிற்சியை முடித்தாலே ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

ஓட்டுனர் உரிமம் வாங்குவதற்கு முதலில் பதிவு செய்துவிட்டு ஓட்டுநர் பயிற்சி மையத்தில் குறிப்பிட்ட தினங்கள் பயிற்சி பெற வேண்டும். அதன் பிறகு உரிமம் வாங்குவதற்கு ஆர்டிஓ அலுவலகங்களில் பல ஆவணங்களை சமர்ப்பணம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். கடைசியாக அதிகாரி முன்பு வாகனத்தில் எட்டு போட்டு காட்ட வேண்டும் என்ற நடைமுறை இருந்து வருகிறது. இதில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், தற்போது இருக்கின்ற விதிமுறைகளை மாற்றி ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு புதிய விதிமுறைகளை மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்திருக்கின்றது. அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்கள் குறித்த விதிமுறைகளை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்கள் தொடர்பான விதிமுறைகளை மாற்றி அமைக்க மத்திய அரசுக்கு மோட்டார் வாகன சட்டத்திருத்தம் இரண்டாயிரத்து 2019 அதிகாரம் வழங்குகிறது.

இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. அதன்படி அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி மையங்களில் வெற்றிகரமாக பயிற்சியை முடித்தவர்கள் ஆர்டிஓ அலுவலகம் வந்து வாகனங்களை ஓட்டி காட்ட தேவையில்லை. இந்த நடைமுறையில் மூலமாக பயிற்சி மையங்களில் பயிற்சியாளர்களுக்கு முறையான பயிற்சி வழங்குவதை உறுதி செய்ய இயலும் என்று தெரிவித்திருக்கின்றது.

அதோடு அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி மையங்களில் ஒரு சில தகுதிகளும் ஏற்படுத்தவேண்டும் பயிற்சியாளர் தரமான பயிற்சி கொடுப்பதற்காக சிமுலேட்டர் வாகனம் மூலமாக வடிவமைப்பு டிரைவிங் பழகுவதற்காக பிரத்தியேக சோதனை போன்றவற்றை அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மோட்டார் வாகன சட்டம் 1988ன் கீழ் ஓட்டுநர் பயிற்சி மையங்களில் புத்தாக்க படிப்பு மற்றும் பயிற்சி வசதிகள் கிடைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பயிற்சி மையங்கள் தொழில் ரீதியான சிறப்பு பயிற்சி வழங்கவும் அனுமதி வழங்கப்படுகிறது. சாலைப் போக்குவரத்துத் துறையில் திறமையான ஓட்டுநர்களின் பற்றாக்குறை முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. சாலை விதிமுறைகள் தொடர்பாக போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், சாலை விபத்துக்கள் அதிக அளவில் நடக்கின்றன இந்த நடவடிக்கையின் மூலமாக போக்குவரத்துத் துறையில் நன்றாக பயிற்சி பெற்ற ஓட்டுநர்களை பெற இயலும். இது அவர்களுடைய செயல் திறனை மேம்படுத்துவதற்கு சாலை விபத்துக்களை குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் தரம் தாழ்ந்த அரசியல் சூழ்நிலை உள்ளது! நடிகை குஷ்பு ஆவேசம்!

0

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதோடு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இருந்தாலும் கடந்த 50 வருடங்களாக இருந்த வழக்கத்தை திமுக அரசு மாற்றியிருக்கிறது. இதனை ஒரு தரப்பினர் வரவேற்று இருந்தாலும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி எப்போதும்போல இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

அதாவது சென்ற 50 வருட காலமாக தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் திராவிட கட்சிகள் எப்பொழுதுமே மத்திய அரசு என்று தான் தெரிவித்து வருகின்றன. இருந்தாலும் முதலமைச்சராக பொறுப்பேற்ற ஸ்டாலின் வெளியிடும் எல்லா அறிக்கையிலும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று தெரிவித்து வருகின்றார்.

இதனை அடுத்து எல்லா திமுக அமைச்சர்களும் மற்றும் சட்டசபை உறுப்பினர்களும், அதோடு திமுகவைச் சார்ந்தவர்களும், மத்திய அரசை ஒன்றிய அரசு என்று தெரிவித்து வருகிறார்கள். அதோடு பல அரசியல் கட்சிகளும் ஒன்றிய அரசு என்று குறிப்பிட தொடங்கியிருக்கின்றன.

அதே சமயத்தில் ஒன்றிய அரசு என்ற சொல் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருக்கிறது என்றும், இதில் உள்நோக்கம் இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இந்த சூழ்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகரும் நடிகையுமான குஷ்பு இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றார். அவர் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்ற பதிவில் தெரிவித்திருப்பதாவது, மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதில் பெருமிதம் கொள்கின்றோம். மத்திய அரசின் ஒரு பகுதியாக இருந்து அதிகபட்ச நலன்களை பெற்றவர்கள்தான் துரதிஷ்டவசமாக 50 வருடங்களுக்கு மேலாக மத்தியில் இருந்து நாட்டை ஆட்சி செய்தவர்களும் இவ்வாறு அழைக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கின்றார்.

தமிழ்நாட்டில் தரம் தாழ்ந்த அரசியல் சூழ்நிலை இருந்துவருகிறது. தமிழகத்தில் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்தால் நாம் பாரதப் பேரரசு என்று அழைப்போம் என்று தெரிவித்திருக்கின்றார். அதோடு தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதி தான் வாழ்க பாரத தேசம் வாழ்க தமிழகம் என்று தெரிவித்திருக்கின்றார் நடிகை குஷ்பு