Sunday, July 27, 2025
Home Blog Page 4543

“மம்தா பேனர்ஜி” Weds “சோசியலிசம்” வைரலாகும் திருமண அழைப்பிதழ்!

பி மம்தா பானர்ஜி மற்றும் ஏ எம் சோசியலிசம் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் பார்க்கும் மக்களுக்கு இந்த பத்திரிக்கை அழைப்பிதழ் உண்மையானதா எழுத்தப்பட்டுள்ளதா என்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது.

மேலும் என்னவென்றால் அந்தத் திருமணப் பத்திரிக்கையில் மணமகனின் மூத்த சகோதரர் பெயர் ஏ எம் கம்யூனிசம் மற்றொறு சகோதரரின் பெயர் ஏ எம் லெனினிசம் என்று அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பத்திரிக்கை உண்மையானது என்று குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்தில் சிபிஐ மாவட்ட செயலாளர் மோகன் என்று பிரபலமாக அறியப்பட்ட லெனின் மோகன் என்ப என்பவரின் மகன் திருமண அழைப்பிதழ் தான் இது. இவர் சேலத்தில் உள்ள பனமரத்துப்பட்டி நகரத்தின் கவுன்சிலராக உள்ளார்.

மோகன் எப்படி தனது மகனுக்கு இந்தப் பெயரை வைத்தார் என்பது பற்றி அவர் எடுத்துச் சொல்கிறார், சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட பின்னர் கம்யூனிசம் வீழ்ச்சி அடைந்தது என்றும், சித்தாந்தம் உலகில் எங்கும் செல்லாது என்றும் மக்கள் கூறினார்கள். அப்பொழுது இது தொடர்பாக தூர்தர்ஷனில் ஒரு செய்தி வந்தது, அந்த நேரத்தில் என் மனைவி என் மூத்த மகனைப் பெற்றெடுத்தார். மனித இனம் இருக்கும் வரை கம்யூனிசம் வீழ்ச்சி அடையாது என்று நான் நம்பியதால் உடனடியாக என் மூத்த மகனுக்கு கம்யூனிசம் என்று பெயரிட முடிவு செய்தேன் என்று அவர் கூறினார்.

கட்டூர் கிராமத்தில் கம்யூனிசத்தை பெரும்பான்மையான மக்கள் பின்பற்றுவதாக அவர் கூறினார். எனது மூன்று மகன்களுக்கும் ஒரே மாதிரியாக பெயரிட வேண்டும் என்று விரும்பினேன். அதேபோல் மணமகளும் எங்கள் உறவுக்காரர். மணமகளின் தாத்தா ஒரு காங்கிரஸ்காரர். அதனால் மம்தா பானர்ஜியின் செயல்களால் மிகவும் ஈர்க்கப்பட்டார். எனவே அவர் தனது பேத்திக்கு மம்தா பானர்ஜியின் பெயரிட விரும்பினார். நமது சந்ததியினர் சித்தாந்தத்தை நோக்கி முன்செல்ல வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்பினோம். அதேபோல் எனது பேரனுக்கு மார்க்சியம் என்று பெயரிட்டுள்ளேன். எங்கள் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தால் நாங்கள் அவளுக்கு கியூப மதம் என்று பெயர் இடுவேன் என்று மோகன் கூறியுள்ளார்.

இந்த அழைப்பிதழ் திங்களன்று பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்டதில் இருந்து கடந்த 3 நாட்களாக எனக்கு 300க்கும் மேற்பட்ட போன்கால்கள் வந்துள்ளன. அதுவும் எப்படி மணமகன் மற்றும் மணமகள் பெயர்களை மிகவும் ஆர்வமாக கேட்டு மகிழ்ந்தனர். இந்த அழைப்பிதழ் நிஜமாகவே உண்மை தன்மை உடையதா என்று சரிபார்க்க பல நண்பர்கள் மற்றும் ஊடகங்களில் இருந்து எனக்கு அழைப்புகள் வந்தன. பலரும் ஒரே கேள்வியை கேட்டதனால் சற்று எரிச்சலாகவும் இருந்தது. பின்னர் நான் அதை பயன்படுத்திக் கொண்டேன் என அவர் கூறினார்.

திருமணத்தின் பொழுது இந்த திடீர் சலசலப்புக்கு குடும்பத்தினர் எவ்வாறு அதை சகித்துக் கொண்டார்கள் என்று கேட்ட பொழுது, அவர்களின் பெயர்கள் இவ்வளவு உற்சாகத்தை கொடுத்ததில் அவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்று கூறினார்.

அதேபோல் என் மகன்களும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அத்தகைய பெயர்களை வைத்து இருப்பதால் அனைவரும் பாராட்டுகிறார்கள். அரசு பள்ளிகளில் படித்தவர்கள் நிறைய இந்த பெயரினால் அவமானத்தை எதிர்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் பெயர்களை தவறாக எழுதி கூட இருக்கிறார்கள். ஆனால் கல்லூரி சென்ற பின் அந்த நிலைமை கொஞ்சம் மாற்றம் அடைந்தது. நாங்கள் பல தலைமுறைகளாக இந்த பெயர் பின்பற்றி வருவதால் மக்கள் பின்னணியை கேட்பார்கள் மற்றும் கவரப்படுவார்கள் என்று நம்புகிறேன். எனக் கூறினார்.

சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணனின் கிறங்க வைக்கும் மாடல் உடை புகைப்படம் உள்ளே!

0

தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருபவர் நடிகை, தொகுப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர், என்று பன்முகத் தன்மையை கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன் இவருடைய நடிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

lakshmy-ramakrishna


இந்த திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் அவர்களுக்கு அம்மாவாக நடித்து இவர் கண் கலங்கி நிற்கும் காட்சிகள் இன்றுவரையில் ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது என்று தெரிவிக்கலாம். அதன் பிறகுகூட வேட்டைக்காரன் திரைப்படத்தில் விஜய்யின் அம்மாவாகவும் சென்னையில் ஒரு நாள் என்ற திரைப்படத்தில் கார்த்திக்குக்கு அம்மாவாகவும் நடித்திருக்கின்றார்.

இருந்தாலும் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் இவர் பிரபலமானதைவிட சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலமாக மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் கேட்கும் கேள்விகள் மற்றும் அதற்கு இவர் கொடுக்கும் பதிலடி போன்றவைகள் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இவர் அடிக்கடி உச்சரிக்கும் காவல்துறையை கூப்பிடுவேன் என்று தெரிவிக்கும் வசனம் அவ்வளவு எளிதாக யாராலும் மறந்துவிட இயலாது.

lakshmy-ramakrishnan


இதற்கு முன்னர் லட்சுமி ராமகிருஷ்ணனின் 1984ஆம் வருடம் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது பார்க்கும் இடமெல்லாம் லட்சுமி ராமகிருஷ்ணனின் சிறுவயது புகைப்படமாகவே இருந்தது.

என்ன பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம் ஜெனிபருக்கு ரகசிய திருமணமா! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0

விஜய் தொலைக்காட்சியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக விளங்கி வருவது பாக்கியலட்சுமி தொடர் இல்லத்தரசிகளிடம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கும் இந்த தொடரில் ஜெனிஃபர் என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாலா திரைப்படத்தின் வில்லன் மற்றும் தயாரிப்பாளரான ஆர்கே சுரேஷ் அவர்களை காதலித்ததாகவும் நாங்கள் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும், தெரிவித்திருந்தார் பாக்கியலட்சுமி தொடரில் நடிக்கும் ஜெனிஃபர் என்ற திவ்யா.

இருந்தாலும் ஒரு சில மாதங்களில் இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக பிரிந்து விட்டதாகவும், திவ்யா தெரிவித்திருக்கின்றார். அதற்குப் பின்னர் சென்ற வருடம் ஆர்கே சுரேஷிற்கு ரகசிய திருமணம் நடைபெற்றது. இதில் 15 நபர்கள் மட்டுமே பங்கேற்றார்கள்.

நோய் தொற்று காலம் என்ற காரணத்தால் யாரையும் அழைக்காமல் ரகசியமாக திருமணம் நடைபெற்றது என்றும், தெரிவிக்கப்படுகிறது. ஆர்கே சுரேஷ் தமிழ்சினிமாவில் தாரை தப்பட்டை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மருது என்ற திரைப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்து இருந்தார். ரோலக்ஸ் பாண்டி என்ற கதாபாத்திரம் மக்கள் இடையில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது என்று தெரிவிக்கப்படுகிறது.

அதோடு திவ்யா மற்றும் சுரேஷ் அவர்கள் இருவரும் என் மனம் ஒத்து பிரிந்து விட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. தற்சமய ஆர்கே சுரேஷ் சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் இறங்குவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

நடிகர் அஜித்துடன் மீண்டும் இணையும் பிரபலம்! எகிறும் வலிமை திரைப்படத்தின் எதிர்பார்ப்பு!

0

அஜித் வினோத் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பின்னர் உருவாகிவரும் திரைப்படம் தான் வலிமை கடந்த 2019 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட இந்த வலிமையை திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது வரையில் முடிவடையவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இதில் சுவாரசியம் என்னவென்றால் இது வரையில் அந்த திரைப்படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்புகள் எடுக்கப்படாமல் இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி மற்றும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்ட பலரும் நடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நடிகர் அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தயாரித்த பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் இந்த திரைப்படத்தை மிகப்பெரிய செலவில் தயாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக ஆகஸ்ட் இரண்டாயிரத்து 21ஆம் ஆண்டு வெளியீட்டு தேதி குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இருந்தாலும் தற்சமயம் ஊரடங்கு அமலில் இருப்பதன் காரணமாக, மறுபடியும் வலிமை திரைப்படத்திற்க்கான வெளியீடு தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது. அனேகமாக 2021 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக இந்த திரைப்படம் இருக்கலாம் என்றும் தெரிவிக்கிறார்கள். அதோடு அஜித்துடன் ஏற்கனவே வீரம், வேதாளம் மற்றும் விசுவாசம் போன்ற திரைப்படங்களில் காமெடி கூட்டணியாக யோகி பாபு வலிமை திரைப்படத்திலும் அவருடன் ஒன்றிணைந்து நடித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதோடு இந்த கூட்டணி நான்காவது முறையாக சேர்ந்து இருப்பதாக சொல்கிறார்கள்.

இந்த தகவல் உறுதிப்படுத்தப்படாத தகவலாக இருந்தாலும் கூட அண்மையில் நடிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் தெரிவித்த யோகிபாபு இதனை உறுதி செய்து இருக்கின்றார். கண்டிப்பாக வலிமை திரைப்படத்திலும் நல்ல காமெடி காட்சிகள் இருக்கும் என்று நம்பிக்கை கொடுத்திருக்கிறார் நடிகர் யோகிபாபு.

தனிமையில் அழைத்து முத்தம் கொடுத்தாரா? வைரமுத்து பதறிப்போன சின்மயி!

0

வைரமுத்து மற்றும் சின்மயி உள்ளிட்டோரின் பஞ்சாயத்து பல வருடங்களாக தொடர்ந்து வருகின்றது. வைரமுத்து மீது அவர் பலவிதமான புகார்களை தெரிவித்து வருகின்றார். சமீபத்தில்கூட சின்மயி வைரமுத்து வாங்கியிருந்த விருதை கெடுத்து விடடார் என்று சொல்லப்படுகிறது.

இவ்வளவு தெளிவாக சின்மயி தெரிவிக்கும்போது ஒருவேளை உண்மையிலேயே வைரமுத்து இதை செய்திருப்பாரோ என்று யோசிக்க தோன்றுகிறது. வைரமுத்து நான் அப்படிப்பட்டவன் இல்லை நான் எந்தவிதமான அவதூறுகளையும் செய்யவில்லை என்பதை நான் விரைவில் நிரூபிப்பேன் என்று தெரிவித்துக் கொண்டே தான் இருக்கின்றார்.

ஒருமுறை வைரமுத்து வாய்ப்பு தருகிறேன் என்று தெரிவித்து சின்மயி அவர்களை வீட்டிற்கு அழைத்து இருக்கின்றார். அந்த சமயத்தில் தன்னுடைய அம்மாவுடன் சென்றிருக்கின்றார் சின்மயி அப்போது அங்கே தான் வைரமுத்துவின் மனைவியும் இருந்திருக்கின்றார் என்று சொல்லப்படுகிறது.

வைரமுத்து மனைவி மற்றும் சின்மயின் தாய் உள்ளிட்ட இருவரையும் வெளியே அனுப்பிவிட்டு உள்ளே ஆலோசனை என்று தெரிவித்து சின்மயியை அழைத்துச் சென்று இருக்கின்றார் வைரமுத்து. அந்த சமயத்தில் வைரமுத்து திடீரென்று சின்மயியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது.

அதன்பிறகு பலமுறை வைரமுத்து பாடல் வாய்ப்புத் தருவதாக சின்மயியை அழைத்ததாகவும், முடிந்தவரையில் அவருடன் எப்போதுமே நெருக்கமாக இருக்க மாட்டேன் என்றும் முக்கியமாக அவர் தனியாக இருக்கும் சமயத்தில் அவரை சந்திக்க மாட்டேன் என்றும் தெரிவித்திருக்கின்றார் சின்மயி.

தம்பி! உங்க காமெடி கொஞ்சம் கம்மி பண்ணிக்கோங்க! நாங்க பாவம்! – சிவகார்த்திகேயன்!

0

குக் வித் கோமாளி என்று சமையல் நிகழ்ச்சியில் பிரபலமான சக்தி அவர்கள் இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதற்கு சிவகார்த்திகேயன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதை சக்தி இன்ஸ்டாகிராம் பேஜில் பதிவு செய்து தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார்.

குக் வித் கோமாளி என்ற ஒரு சமையல் நிகழ்ச்சி பலருக்கு பல்வேறு விதமான வாய்ப்புகளை கொடுத்துள்ளது. அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி உள்ளது. அப்படி குக் வித் கோமாளி சீசன் இரண்டில் அறிமுகமானவர் சக்தி.

இவர் டிக் டாக் செயலின் மூலம் பிரபலமானவர். இப்பொழுது விஜய் டிவியின் ஒரு அங்கமான மீடியா மேசன்ஸ் என்ற யூடியூப் சேனலிலும் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் சக்திக்கு பல சின்னத்திரை நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் சக்திக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அவர் கூறியதை சக்தி அப்படியே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்டுகளை அள்ளி தெளித்து வருகிறார்கள்.

அதில் சிவகார்த்திகேயன் கூறியது, ” ஹலோ தம்பி, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், இந்த வருடம் உங்களுக்கு நீங்க ஆசைப்படுகிற எல்லாமே கிடைக்கட்டும். ஆனா ஒரே ஒரு வேண்டுகோள், உங்க காமெடி மட்டும் கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்கோங்க தம்பி, அதுவும் பழைய ஜோக்குகளை கொஞ்சம் கம்மி பண்ணிக்கோங்க, தம்பி நாங்கல்லாம் பாவம், வீட்லயே இருங்க,பத்திரமா இருங்க, பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

அதற்கு சக்தி பதில் அளித்துள்ளார், ” அண்ணா மிகவும் நன்றி! Made my day,
கண்டிப்பா இந்த பர்த்டே இருந்து upgrade பண்ணிட்றன். Love you anna! உங்களிடம் இருந்து இந்த வாழ்த்துக்கள் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று! என கூறியுள்ளார்.

அனைவரும் மற்றும் மக்களும் இதை கேட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

அந்த வீடியோ உங்களுக்காக,
https://www.instagram.com/p/CP5lUARh28I/?utm_source=ig_web_copy_link

வில்லனாக களம் இறங்க இருக்கும் நடிகர் ஜெய்!

0

தமிழ் திரையுலகின் இளம் நடிகர்களில் ஜெய் முக்கியமானவர் பகவதி திரைப்படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து தன்னுடைய சினிமா பயணத்தை ஆரம்பித்தார் என்று சொல்லப்படுகிறது. அதன்பிறகு சென்னை-28 படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது. அதன்பிறகு கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். கோவா, எங்கேயும் காதல் ,ராஜா ராணி, சுப்பிரமணியபுரம், போன்ற திரைப்படங்கள் அவருடைய நடிப்பின் சிறப்பம்சங்கள்.

தற்சமயம் அவர் எண்ணித்துணிக, குற்றமே குற்றம், சிவசிவா, போன்ற திரைப்படங்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், அட்லீ தயாரிப்பில் உருவாகியிருக்கும் ஒரு புதிய திரைப்படத்தின் ஜெய் வில்லனாக நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இந்த திரைப்படத்தில் ஜெய் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. அவர் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்ற உடன் அந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதாக சொல்கிறார்கள்.

இதற்கு நடுவில் சுந்தர்சியின் இணை இயக்குனர் பத்ரி இயக்கிவரும் திரைப்படத்திலும் ஜெய் சிறப்பு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது.

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு எகிறும் மாளவிகா மோகனனளின் மார்க்கெட்!

0

கோலிவுட் வட்டாரத்தில் பேட்ட , மாஸ்டர் , போன்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமடைந்த மாளவிகா மோகனன் மலையாளத் திரைப்படத்தில் புடவை கட்டிக்கொண்டு குடும்பப் பெண்ணாக நடித்து இருந்தார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு இளைய தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். தற்சமயம் நடிகர் தனுஷின் புதிய படம் ஒன்றில் நாயகியாக நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், சமூக வலைதளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் என்பதால் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வித்தியாச வித்தியாசமா வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்துபவர் மாளவிகா மோகனன் விருது வழங்கும் நிகழ்ச்சி களிலும் கவர்ச்சியான உடைகளுடன் வலம் வருவது தான் இவருடைய வழக்கம்.

இந்த சூழ்நிலையில், தற்சமயம் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிக்க இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது அது எந்த அளவுக்கு உண்மையென இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை .

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்!

0

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகமாக இருந்த காரணத்தால், ஒன்பதாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரையிலான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பல ஆலோசனைக்குப் பின்னர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கும் முறையை முடிவு செய்ய தனியாக குழுவொன்று அமைக்கப்பட்டது. அந்த குழு மதிப்பெண் வழங்கும் முறையை இன்னும் அறிவிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக பத்தாம் வகுப்பு மாணவர்கள் பதினோராம் வகுப்பில் சேருவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. எந்த நிலையிலும் மதிப்பெண் வழங்கும் முறை தொடர்பாக இதுவரையில் எந்தவிதமான முடிவும் எடுக்கப்படாமல் இருந்து வருகிறது.. மாணவர்கள் இதன் காரணமாக, அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். சென்ற வருடம் காலாண்டு ,அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது இந்த வருடம் எந்தவிதமான தேர்வும் நடத்தப்படாத காரணத்தால், மதிப்பெண் வழங்குவதில் இன்று வரையில் சிக்கல் நீடித்து வருகின்றது.

ஒன்பதாம் வகுப்பு தேர்வு அடிப்படையில் மதிப்பெண்ணை கணக்கிடலாம் ஆனாலும் கூட தனியார் பள்ளிகளில் அதற்கான கோப்புகள் இல்லாத காரணத்தால், அதிலும் சிக்கல் நீடித்து வருகின்றது. இந்த சூழ்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் மதிப்பெண்களை குறிப்பிடாமல் பெயர்ச்சி என்று மட்டும் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்து இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. என அறிவிக்கப்பட்ட தன் காரணமாக பாடவாரியாக தேர்ச்சி என்று மட்டும் குறிப்பிட்டு வழங்கப்பட இருப்பதாக தெரியவந்திருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

UPSC- வேலைவாய்ப்பு! 400 காலிப்பணியிடங்கள்! சம்பளம்: ரூ. 56100

தேசிய பாதுகாப்பு அகாடமியில் மற்றும் கடற்படை அகாடமி தேர்வு 2021 நடைபெற உள்ளது.

இதற்கு ஆட்சேர்க்கும் பணிக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை யுபிஎஸ்சி செய்து வருகிறது. இதனால் தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் வலைதளம் https://www.upsc.gov.in/ மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த ஆன்லைன் வசதி 9.6.2021 முதல் 29.6 .2021 வரை அதிகாரபூர்வ வலை தளமான இதில் கிடைக்கும்.

ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் தகுதி, அளவுகோல் விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை , பாடத்திட்டம் அனைத்தையும் தெரிந்துகொண்டு சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலை வகை: மத்திய அரசு வேலைகள்

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 400

வேலை இடம்:

இந்தியா முழுவதும்

பதவியின் பெயர் & காலியிடங்களின் எண்ணிக்கை:

1. தேசிய பாதுகாப்பு அகாடமி

370 ராணுவத்திற்கு 208, கடற்படைக்கு 42 மற்றும் விமானப்படைக்கு 120 (தரை கடமைகளுக்கு 28 உட்பட)

2. கடற்படை அகாடமி (10 + 2 கேடட் நுழைவு திட்டம்)-30

கல்வி தகுதி:

பள்ளி கல்வி 10 + 2 முறையின் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது மாநில கல்வி வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் சமமான தேர்வு.

வயது வரம்பு:

திருமணமாகாத ஆண் வேட்பாளர்கள் 2003 ஜனவரி 02 ஆம் தேதிக்கு முந்தையவர்கள் அல்ல, 2006 ஜனவரி 1 ஆம் தேதிக்கு பிறகு

தேர்வு நடைமுறை:

1. எழுதப்பட்ட தேர்வு (காகிதம் I & காகிதம் II)
2. உளவியல் திறன் சோதனை மற்றும் நுண்ணறிவு சோதனை

விண்ணப்ப கட்டணம்:

– Candidates (excepting SC/ST candidates/Sons of JCOs/NCOs/ORs specified in Note 2 below who are exempted from payment of fee) are required to pay a fee of Rs. 100/- (Rupees one hundred only) either by depositing the money in any Branch of SBI by cash, or by using net banking facility of State Bank of India or by using Visa/MasterCard/Rupay Credit/Debit Card.

UPSC Official Website Career Page

https://www.upsc.gov.in/

UPSC Official Notification PDF

https://upsconline.nic.in/download1.php?type=ne&file=NDAII2021-E.pdf

UPSC Online Application Form (Part I)

https://upsconline.nic.in/guideline.php?exam_code=NDAI&year=2021&notice_no=03/2021-NDA-I&notice_date=30-12-2020

UPSC Online Application Form (Part II)

https://upsconline.nic.in/upload1.php?ex=NDAII