Wednesday, July 23, 2025
Home Blog Page 4551

பாதியில் நின்ற ஐபிஎல் எங்கே நடக்க இருக்கிறது தெரியுமா?

0

ஐபிஎல் தொடரின் 14வது சீசன் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் வேகமாக பரவத் தொடங்கியது. அந்த சமயத்தில் பயோ பிபிளில் இருந்த வீரர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக பிசிசிஐ ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

இந்த சூழ்நிலையில் மீதம் இருக்கின்றன 31 போட்டிகளை துபாய் சார்ஜா அபுதாபியில் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக அந்த நாட்டு அரசுடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும், தெரிவிக்கப்படுகிறது.

25 தினங்களில் ஐபிஎல் 2021 தொடரின் மீதம் இருக்கின்ற போட்டிகளை நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதேபோல வெளிநாட்டு வீரர்கள் மீதம் இருக்கின்ற ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்கு உரிய பேச்சுவார்த்தைகளிலும் பிசிசிஐ ஈடுபட்டிருப்பதாக தெரிகின்றது.

அவ்வாறு அவர்களால் வர இயலவில்லை என்றால் மாற்று ஏற்பாடுகளுக்கு யோசனை செய்ய வேண்டும் என்ற பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். பிசிசிஐ அதிகாரிகள் அயல் நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் உடன் பேசி இதற்கு ஒரு நல்ல முடிவை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

மாணவியின் ஆபாச படத்தை பேஸ்புக்கில் பதிவு! ஆப்பிள் நிறுவனம் 35 கோடி இழப்பீடு!

0

அமெரிக்காவில் உள்ள ஒரு மாணவியின் ஆபாசபடம் முகநூலில் பரவியதை அடுத்து ஆப்பிள் நிறுவனம் அந்த பெண்ணிற்கு 35 கோடி இழப்பீடு தந்துள்ளது.

 

ஐபோன்களில் ஏதாவது ஒரு பழுது ஏற்பட்டால் அதை நீக்குவதற்கு அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெகட்ரான் என்ற நிறுவனம் ஐபோன்களில் உள்ள பழுதை நீக்கி தரும் தொழிலை எடுத்து செய்து வருகிறது.

 

இங்கு ஒரு மாணவி ஒருவர் தனது ஐபோன் பழுதடைந்து விட்டதால் அதை பழுது பார்ப்பதற்காக இந்த பெக்கட்ரான் நிறுவனத்தில் கொடுத்துள்ளார். இதனை இரண்டு பொறியாளர்கள் பழுது பார்த்து உள்ளனர். அப்பொழுது அந்த ஐபோனில் அந்த மாணவியின் ஆபாசபடம் ஒன்று இருந்துள்ளது. அதை அவர்கள் பார்த்து ரசித்து விடுவதோடு மட்டும் இல்லாமல் அதை அந்த மாணவியின் முகநூலிலேயே பதிவிட்டுள்ளனர்.

 

இதை பார்த்த அந்தப் பெண்ணின் சக தோழர்கள் அந்த மாணவியிடம் தெரிவித்துள்ளனர். இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி என்ன செய்வதென்று தெரியாமல் வழக்கறிஞரின் உதவியை நாடினார்.

 

மேலும் அவர்கள் பெகட்ரான் நிறுவனத்திடம் பல கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு உள்ளனர். ஆனால் அந்நிறுவனம் அதை தர மறுத்துவிட்டது. பெகட்ரான் நிறுவனம் இந்த பிரச்சனையை மறைக்க முயற்சித்த பொழுது, பிறகு இந்த தகவலை அறிந்த ஆப்பிள் நிறுவனம் பெகட்ரான் நிறுவனத்தின் மூலமே 35 கோடி ரூபாயை இழப்பீடாக கொடுத்துள்ளது. இப்படி தனக்கு நேரடி தொடர்பு இல்லாத மற்ற விவகாரத்திலும் ஆப்பிள் நிறுவனம் இழப்பீடுகளை தந்து தனது பெயரை காப்பாற்றிக் கொள்வது நடைபெறுகிறது. சமீபத்தில் கூட இந்த மாதிரி ஒரு பிரச்சனைக்கு ஆப்பிள் நிறுவனம் இழப்பீடு வழங்கியது குறிப்பிடத்தக்கது. ஆபாச படத்தை முகநூலில் பதிவிட்டு இரண்டு பொறியாளர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் அளித்த நிறுவனமும், அந்த தனியார் நிறுவனம் செய்யும் சட்ட விரோதமான செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

 

 

அமைச்சர் சேகர்பாபு கிட்ட பேசுறியா? போலீசாரை மிரட்டிய நபருக்கு நேர்ந்த கதி

0

அமைச்சர் சேகர்பாபு கிட்ட பேசுறியா? போலீசாரை மிரட்டிய நபருக்கு நேர்ந்த கதி

ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட ஆட்டோ டிரைவர் காவல் உதவி ஆய்வாளரிடம் கடுமையான வாக்குவாதம் செய்தது வீடியோவாக சமூக வலைதளங்களில் அதையடுத்து அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்.நோய்த்தொற்று காரணமாக, அதனை முற்றிலுமாக தடுப்பதற்கான தமிழக அரசு மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு இருக்கிறது. பேருந்துகளில் வாடகை ஆட்டோக்கள் டாக்சிகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதனை அடுத்து சென்னை முழுவதும் பல சோதனை சாவடிகள் அமைத்து வாகனங்களை பிடித்து விசாரித்து வருகிறார்கள் காவல்துறையை சார்ந்தவர்கள். அதேபோல சென்னையில் இ.பாஸ் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. போல இ.பாஸ் இல்லாமல் தேவை என்று வெளியே சுற்றித் திரியும் நபர்களிடம் விசாரணை செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை பாரிமுனையில் இருக்கின்ற பாரதி மகளிர் கல்லூரி அருகில் முத்தியால்பேட்டை காவல்துறையினர் சோதனை சாவடிகள் அமைத்து காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். காலை ஒன்பது முப்பது மணி அளவில் அந்த வழியாக வந்த ஆட்டோவை விட்டு விட்டு அந்த ஆட்டோவில் ஓட்டுநர் பெரம்பூர் தில்லைநாயகம் தெருவைச் சார்ந்த அணி என்பவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அவர் முதலில் மருத்துவமனைக்கு செல்வதாக அதன்பிறகு சவாரி செல்வதாகவும் முன்னுக்குப் பின் முரணான பதிலை தெரிவித்திருக்கிறார். அத்துடன் அவர் ஆதரவற்றோர் மாற்றுத் திறனாளிகளுக்கான அவசர காரணம் என்று தெரிவித்து பெறப்பட்ட இ பதிவையும் காண்பித்திருக்கிறார்.இருந்தாலும் வாகனத்தில் அவ்வாறு யாரும் இல்லாத காரணத்தால், காவல்துறையினர் அவரிடம் மீண்டும் விசாரணை செய்து இருக்கிறார்கள். அப்போது ஆட்டோ ஓட்டுனர் உண்மைக்குப் புறம்பான காரணத்தைத் தெரிவித்து இ-பதிவு பெற்று இருந்தது தெரிய வந்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து ஆட்டோவை பறிமுதல் செய்யும் பணியை காவல் உதவி ஆய்வாளர் கிருத்திகா முன்னெடுத்து இருக்கின்றார் ஆனால் இதனால் ஆத்திரம் கொண்ட ஆட்டோ ஓட்டுனர் வாக்கு வாதம் செய்வதற்கு தொடங்கியிருக்கின்றார் இதனை கண்டுகொள்ளாத உதவி ஆய்வாளர் ஆட்டோவையும் பறிமுதல் செய்ய முயற்சி செய்திருக்கிறார்.ஆட்டோ ஓட்டுனரிடம் சாவியை கேட்டும் அவர் கொடுக்கவில்லை. ஆட்டோ சாவியை எடுத்த சமயத்தில் ஆட்டோ ஓட்டுனர் உதவி ஆய்வாளரின் கையை பிடித்து இழுத்திருக்கிறார். இதில் உதவி ஆய்வாளர் குறிப்பிட்ட அவர்களின் கையில் லேசான நககீரல் உண்டாகியிருக்கிறது.

அதோடு உதவி ஆய்வாளர் கிருத்திகா நான் என்னுடைய பணி தான் செய்கிறேன் என்று தெரிவித்ததோடு ஆட்டோ ஓட்டுனரை கண்டித்தும் இருக்கின்றார். இதனைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர் நீ ஒரு பெண் நீயே இவ்வாறு பேசுகிறாயே என்று அவரை இழிவாகப் பேசி இருக்கின்றார். அருகிலிருந்தவர்கள் அவருக்கு அறிவுரை கூறிய போதும் அதனை ஏற்றுக்கொள்ளாத ஆட்டோ ஓட்டுனர் நாகரீகமும் இல்லாமல் ஆபாசமாக பேசியதுடன் மட்டுமல்லாமல் உதவி ஆய்வாளரை நாசமாய் போய்டுவ என்று சபிக்கவும் செய்திருக்கிறார்.

பின்னர் அந்த ஆட்டோ ஓட்டுனர் திடீரென்று யாரோ ஒருவருக்கு போன் செய்து அவருடன் பேசவேண்டும் என்று உதவி ஆய்வாளரை வற்புறுத்தி இருக்கின்றார். இதற்கு மறுப்பு தெரிவித்த அவர் தொடர்ந்து ஆட்டோவை பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது திடீரென உதவி ஆய்வாளரை நோக்கி அந்த ஓட்டுனர் அமைச்சர் சேகர்பாபு கிட்ட பேசுறியா என்று ஒருமையில் பேசி மிரட்டி இருக்கின்றார். அதன்பிறகு ஆட்டோவை அங்கேயே விட்டு விட்டு கோபத்துடன் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர் ஆகார் அலி செயல் அந்த வழியாக சென்ற எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தது. இதற்கிடையில் இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவ தொடங்கியது. ஆட்டோ ஓட்டுநர் காவல் உதவி ஆய்வாளர் இடம் இவ்வாறு நடந்து கொண்டதாக கூறி முத்தியால்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். அதோடு அந்த ஓட்டுனர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இருக்கிறேன் என்று தெரிவிக்கப்படுகிறது.

கோவேக்சினை விட கொவிஷீல்டில் நோயெதிர்ப்பு திறன் அதிகம்! ஆய்வின் மூலம் கண்டுபிடிப்பு!

0

கோவேக்சினை விட கொவிஷீல்டில் நோயெதிர்ப்பு திறன் அதிகம்! ஆய்வின் மூலம் கண்டுபிடிப்பு!

இந்தியாவில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கோவேக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் செயல்திறன் 81 சதவீதம் ஆகும்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனேகா கூட்டு கண்டுபிடிப்பான கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் செயல்திறன் 70 சதவீதம்.

இந்தநிலையில், எந்த தடுப்பூசியால், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் பொருள் (ஆன்டிபாடி) அதிகமாக உற்பத்தி ஆகிறது என்பது பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள விஜய்ரத்னா டயாபடீஸ் சென்டர், கொல்கத்தாவில் உள்ள ஜி.டி. ஆஸ்பத்திரி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.

13 மாநிலங்களின் 22 நகரங்களை சேர்ந்த 515 சுகாதார பணியாளர்களை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களில் 210 போ் பெண்கள். 425 பேர் கோவிஷீல்டு தடுப்பூசி 2 தவணையும், 90 பேர் கோவேக்சின் தடுப்பூசி 2 தவணையும் போட்டுக்கொண்டனர்.

நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை கணக்கிட அவர்களது ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், கோவிஷீல்டு போட்டுக்கொண்டவர்களில் நோய் எதிர்ப்பு சக்தி அளவு, மி.லி.க்கு 127 ஏ.யு. என்ற அளவிலும், கோவேக்சின் போட்டுக்கொண்டவர்களில் நோய் எதிர்ப்பு சக்தி அளவு, மி.லி.க்கு 53 ஏ.யு. என்ற அளவிலும் இருந்தன.

மேலும், நோய் எதிர்ப்பு சக்தி உற்பத்தி விகிதம் கோவிஷீல்டு தடுப்பூசியில் 98.1 சதவீதமும், கோவேக்சின் தடுப்பூசியில் 80 சதவீதமும் காணப்பட்டது. 60 வயதை தாண்டியவர்களை விட 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த விகிதம் அதிகமாக இருந்தது. டைப் 2 நீரிழிவு நோய் இருப்பவர்களிடம் குறைவாக இருந்தது.

முதல் தவணை தடுப்பூசி போடுவதற்கு 6 வாரங்களுக்கு முன்பு கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மற்றவர்களை விட 100 சதவீத நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருந்தது.

பொது மக்கள் தடுப்பூசிக்கு பயந்த நிலையில் இது போன்ற அறிவிப்புகள் மக்கள் மனதில் கொஞ்சம் தைரியத்தை ஏற்படுத்துகின்றன. தற்போது மக்களும் தடுப்பூசி போட முன் வருகின்றனர்.

18 வயது முதல் அனைவருக்கும் தடுப்பூசிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், சிறு வயதுடையோருக்கு கோவிஷீல்டு இரண்டாம் டோஸாக மட்டுமே போட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது தட்டுப்பாட்டினால் இந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி நேரலையில் பேசினார். அப்போது மாநிலங்கள் அனைத்திற்கும் இலவச தடுப்பூசி தரப்படும் எனவும் கூறினார்.

சென்னையில் அனைத்து சிக்னலும் இன்று முதல் இயங்கும்! காவல்துறை அறிவிப்பு!

0

இன்று முதல் காலை 9 மணி முதல் 12:30 மணி வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் ரேஷன் கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் நேற்றுமுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக, காய்கறி மளிகை மற்றும் இறைச்சி கடைகள் மாலை 5 மணிவரையில் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. சென்ற முறை போடப்பட்ட ஊரடங்கில் மதியம் வரையில் மட்டுமே செயல்பட்டு வந்த நியாயவிலை கடைகள் தற்சமயம் மாலை 5 மணி வரையில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அனைத்து மாவட்ட ஆட்சியாளர் களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அந்த சுற்றறிக்கையில் ஜூன் மாதம் 8ஆம் தேதி முதல் சென்னை உட்பட எல்லா மாவட்டங்களிலும் காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும் அதேபோல பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நியாயவிலைக் கடைகள் செயல்படும் என்றும் மறு உத்தரவு வரும் வரை இந்த வேலை நேரம் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

நோய்த்தொற்று நிவாரண நிதியில் இரண்டாவது தவணை தொகையான 2000 ரூபாய் மற்றும் 14 வகையான பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் தொகுப்பினை 15ஆம் தேதி முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் வாங்கிச் செல்ல நியோகம் செய்வதை ஜூன் மாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதிக்குள் ரேஷன் கடை பணியாளர்கள் பிற்பகல் நேரங்களில் அட்டை தாரர்களின் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜூன் மாதம் 11 முதல் 14 ஆம் தேதி வரையில் முற்பகல் சமயத்தில் நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதை போல குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல சென்ற இரண்டு வாரங்களாக தளர்வுகள் எதுவும் இல்லாத ஊரடங்கு அமலில் இருந்த சமயத்தில் வாகன போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சென்னையில் இருக்கின்ற எல்லா சிக்னலும் செயல்படாமல் இருந்துவந்தது. ஆனால் தற்சமயம் விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் அளவிற்கு வாகனங்கள் சாலைகளில் சென்று கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு சென்னையில் இன்று முதல் அனைத்து உயிரினங்களும் செயல்படும் என்று சென்னை காவல் துறை தெரிவித்திருக்கிறது.

கத்திரிக்காய் லேகியம்: ஆந்திராவில் கொரோனா நாட்டு மருந்துக்கு நீதிமன்றம் அனுமதி!

0

அந்தப் பிரதேச மாநிலத்தில் நாட்டு வைத்தியர் ஆனந்தையா அவர்கள் தயாரித்த கத்தரிக்காய் சொட்டு மருந்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

 

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தில் பல்வேறு மக்கள் தடுப்பூசிகள் கிடைக்காமலும், மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமலும் எத்தனையோ பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் நிலையான ஒரு தடுப்பு மருந்தை இன்னும் நாம் கண்டு பிடிக்கவில்லை.

 

இவ்வகையில் ஆந்திராவில், நெல்லூர் அருகே கிருஷ்ணா பட்டி என்னும் கிராமத்தை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரை ஆனந்தையா கத்திரிக்காயில் லேகியம் தயாரித்து கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக வழங்கி வருகிறார். இந்த லேகியத்தை வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாங்கிச் சென்றனர். இதை வாங்கி சென்ற மக்கள் சாப்பிட்டு கோரோனோ உடனடியாக குணமாவதாக தெரிவித்துள்ளனர்.

 

இந்த தகவல் எப்படியோ முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு செல்ல அவர் ஆய்வு செய்தார். ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தையா தயாரித்த இந்த கொரோனா தடுப்பு மருந்து உண்மையாகவே கொரோனாவை குணப்படுத்துகிறதா? வேறு ஏதேனும் பக்க விளைவுகள் உள்ளதா? என்பதை பற்றி அறிய அவர் லேகியத்தை ஐ சி எம் ஆர் குழுவிற்கு கொடுத்து பரிசோதனை செய்ய சொல்லியுள்ளார்.

 

இந்த பரிசோதனையின் முடிவுகள் வெளிவரும் வரையில் லேகியத்தை விநியோகிக்க வேண்டாம் என்று தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அதன்பின் மருத்துவ குழு மற்றும் ஆயுஷ் அமைச்சகம் திருப்பதி தேவஸ்தான ஆய்வாளர்கள் அனைவரும் மேற்கொண்ட ஆய்வின்படி இந்த மருத்துவம் எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன்பின் கத்திரிக்காய் லேகியத்தை மக்களுக்கு கொடுக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால் கத்திரிக்காய் சொட்டு மருந்தை கண்ணில் விட அனுமதி இல்லை என தடை விதித்தது.

 

இந்நிலையில்,ஆனந்தையாவின் ஆயுர்வேத சொட்டு மருந்தை பயன்படுத்த ஆந்திர உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதேபோல் கொரனோ நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளவு குறையும் போது மட்டுமே கத்திரிக்காய் சொட்டு மருந்து விட வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தது.

 

 

கொரோனா பாதித்த பெண் தப்பியோடி காய்கறி விற்றதால் அதிர்ச்சி!

0

தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண், மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்று காய்கறி விற்பனை செய்தது அதிர்ச் சியை ஏற்படுத்தியது.

தெலுங்கானா மாநிலம் மிரியாலகுடா அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர், காய்கறிகளை வாங்குவதற்காக அங்குள்ள சந்தைக்கு சென்றார். அப்போது கொரோனா  வைரஸ் தொற்று பாதிப்புக்கு நேற்று சிகிச்சை பெற்ற பெண், மறுநாளே காய்கறி விற்பனையில் ஈடுபட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனால், மற்றவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து இருப்பதாக எச்சரித்து மருத்துவனை செல்லுமாறு அந்த மருத்துவர் கூறியுள்ளார். ஆனால், அதனை ஏற்காத அந்த பெண், அறிவுரை கூறிய மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காய்கறி சந்தையிலிருந்தும் அந்த பெண் வெளியேற மறுத்ததால், வேறு வழியின்றி காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர்,  அந்த பெண்ணை வெளியேற்றி, அறிவுரைகளைக் கூறிய வீட்டுத் தனிமையில் இருப்பதற்கு  தேவையான நடவடிக்கைகளை எடுத்தனர்.

தமிழக அரசுக்கு எல்.முருகன் வைத்த முக்கிய கோரிக்கை!

0

தமிழக அரசு நியாயவிலைக் கடைகள் மூலமாக கொடுக்கும் பணத்தை நியாயவிலைக் கடைகளின் மூலமாக கொடுக்காமல் வங்கிக் கணக்குகள் மூலமாக அதனை பொது மக்களிடம் சேர்க்க வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் முருகன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

நேற்றைய தினம் சென்னையில் பத்திரிக்கையாளர்களும் உரையாற்றிய அவர் தமிழக அரசு நோய்த்தொற்று நிவாரண நிதியாக கொடுக்கும் ரூபாய் 4 ஆயிரத்தை நியாயவிலைக் கடைகளின் மூலமாக நேரடியாக வழங்கப்படுகிறது. அங்கே பொதுமக்கள் ஒன்று கூடுவதால் நெருக்கடி உண்டாகிறது. இதனை தவிர்ப்பதற்காக பிரதமரின் விவசாயிகள் உதவிதொகை திட்டத்தை செயல்படுத்தியதைப்போல மாநில அரசு பணத்தை நேரடியாக பொதுமக்களின் வங்கி கணக்குகளில் செலுத்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

அதோடு தேர்தல் சமயத்தில் திமுகவால் அறிவிக்கப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கான மாத உரிமைத் தொகை 1000 ரூபாய் என்பது வழங்கப்படும் என்று ஆவலாக எல்லோரும் காத்திருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் முருகன்.

அதோடு பிரதமரின் உரையை தொடர்ந்து நேற்று இரவு முருகன் வெளியிட்ட ஒரு காணொளியில் ஜூன் மாதம் 21ஆம் தேதி முதல் தடுப்பூசிகளை எல்லோருக்கும் இலவசமாக வழங்குவோம் என்று அறிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். நோய்களில் இருந்து மீண்டு வருவதற்கு மத்திய அரசு எல்லாவிதமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது. அதோடு வரும் நவம்பர் மாதம் வரையில் நியாயவிலைக்கடை பொருட்களை இலவசமாக வழங்குவதாகவும், இதனால் 80 கோடி மக்கள் பயன் பெறுவார்கள் எனவும், பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இதற்காக தமிழக மக்கள் சார்பாகவும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியையும், பாராட்டுக்களையும், தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் முருகன்.

தனியாக இருந்த முதியவர் படுகொலை! ஏமாறிய கொள்ளையர்கள்!

தனியாக இருந்த முதியவர் படுகொலை! ஏமாறிய கொள்ளையர்கள்!

தும்கூர் மாவட்டம் கொரட்டகெரே தாலுகா சி.எஸ். துர்கா அருகே கொல்லரஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ். இவர் கொரட்டகெரே தாலுகா பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினர் ஆவார். இவருடைய தந்தை ராமண்ணா (வயது 71). லோகேசின் தந்தை ராமண்ணாவும், தாயும் பண்ணையில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் ராமண்ணாவின் மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.  இதனால் அவர், தும்கூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன்காரணமாக பண்ணை வீட்டில் ராமண்ணா மட்டும் தனியாக வசித்து வந்தார்.

ராமண்ணாவின் தோட்டத்தில் அதேப்பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.  இந்த நிலையில் நேற்று காலை ரஞ்சித் வழக்கம் போல தோட்டத்துக்கு வேலைக்கு வந்தார். அப்போது தோட்டத்தில் உள்ள ராமண்ணாவின் வீட்டின் கதவு திறந்து கிடந்தது.

இதனால் ரஞ்சித் சத்தம் கொடுத்தார். ஆனால் பதில் எதுவும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ரஞ்சித், வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டுக்குள் ராமண்ணா, ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து ரஞ்சித் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர், லோகேசுக்கும், பவனஹள்ளி போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் பவனஹள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், ராமண்ணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், மர்மநபர்கள் ராமண்ணாவை கொலை செய்தது தெரியவந்தது.  இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வம்சி கிருஷ்ணா சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார்.

இந்த கொலை தொடர்பாக அவர் விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு வம்சி கிருஷ்ணா கூறுகையில், ராமண்ணா பாக்கு விவசாயம் செய்து வந்தார். இதனால் அவரிடம் பல லட்சம் ரூபாய் நகை-பணம் இருப்பதாக தெரிகிறது.

இதன்காரணமாக அந்த நகை-பணத்தை கொள்ளையடிக்க மர்மநபர்கள் திட்டமிட்டு அவரை கொலை செய்துள்ளனர்.

மேலும் நகை-பணத்தை கொள்ளையடிக்க மர்மநபர்கள் பீரோவில் தேடி உள்ளனர். ஆனால், கொள்ளை போய்விடுமோ என்ற பயத்தில் ராமண்ணா, நகை-பணத்தை பீரோவில் வைக்காமல், வேறு இடத்தில் வைத்திருந்தார்.

இதனால் பல லட்சம் ரூபாய் நகை-பணம் தப்பியது. கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள் என்றார். இதுகுறித்து பவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு! முதலமைச்சர் ஸ்டாலின் மகிழ்ச்சி

0

மத்திய அரசு மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்.

நேற்றைய தினம் மாலை 5 மணி அளவில் தொலைக் காட்சியின் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அந்த சமயத்தில் மாநிலங்களுக்கு ஜூன் மாதம் 21ம் தேதியிலிருந்து இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் 75% தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து நேரடியாக மாநிலங்களுக்கு வழங்கும் 25 சதவீத தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்த அறிவிப்பிற்கு பல மாநில முதலமைச்சர்கள் வரவேற்பு தெரிவித்து இருப்பதாக தெரிகிறது.

இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, மாநிலங்களுக்கு மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்கும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. நாட்டில் உற்பத்தியாகும் தடுப்பூசிகளின் 75 சதவிகித தடுப்பூசிகளை மத்திய அரசு நேரடியாக கொள்முதல் செய்து அவற்றை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என்று அறிவித்து இருக்கின்றார். தடுப்பூசி கொள்முதலில் இதற்கு முன்னால் இருந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதற்காக பிரதமரை பாராட்டுகின்றேன். அதேபோல தடுப்பூசி முன்பதிவு தடுப்பு செலுத்துவது நிர்வாகம் மற்றும் நடைமுறைகள் போன்றவற்றை எல்லா மாநிலங்களின் கட்டுப்பாட்டிலும் விட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அதேபோல கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தன்னுடைய வலைப்பக்கத்தில் ஜூன் மாதம் 26 ஆம் தேதியில் இருந்து இலவச நோய் தடுப்பூசி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்திருப்பது இந்த சமயத்தில் மிகவும் நன்மை விளைவிக்கும் விஷயமாக இருக்கும். எங்களுடைய வேண்டுகோளுக்கு பிரதமரிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்திருப்பதால் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அதனுடைய வலைதளப் பக்கத்தில் 18 வயதுக்கும் அதிகமான எல்லோருக்கும் இலவச தடுப்பூசி பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டம் நீட்டிப்பு போன்றவற்றை அறிவித்த பிரதமருக்கு நன்றி இது நோய் தொற்றினை எதிர்க்கும் போரில் உதவிகரமாக இருக்கும் என்று பதிவிட்டிருக்கிறார்.