Tuesday, July 22, 2025
Home Blog Page 4553

வயிறு பெருசா இருக்குனு கவலை படாதீங்க! 7 நாளில் இடுப்பு அளவு கொறஞ்சிடும்!

 

நாம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் கிடையாது. அனைத்தும் சரியாக இருக்குமானால் தொப்பை மட்டும் தொங்கிக்கொண்டிருக்கும்.
இதனை எப்படி சரி செய்யலாம் என நினைத்து நினைத்தே பலர் மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். எத்தனையோ வழிமுறைகளை பயன்படுத்தி பயன் தரவில்லையா? ‌ இதோ உங்களுக்கான அருமையான டிப்ஸ் இதனை நீங்கள் பயன்படுத்தி வரும் போது உங்களது இடுப்பின் அளவு குறைவதை நீங்களே காண முடியும்.

தேவையான பொருட்கள்:
1. சுடுதண்ணீர்
2. எலுமிச்சை பழம்
3. சீரகத் தூள்
4. கருவேப்பில்லை தூள்
5. தேன் தேவைக்கேற்ப்ப

செய்முறை:
1. முதலில் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
2. நன்கு கொதித்த தண்ணீரில் அரை ஸ்பூன் எலுமிச்சை பழ ஜூஸை கலந்து கொள்ள வேண்டும்.
3. அதனுடன் கால் டீஸ்பூன் சீரகத் தூள் சேர்க்க வேண்டும்.(சீரகத்தை லேசாக தீயில் வறுத்து கருக விடாமல் அதனை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்).
4. மேலும் அதனுடன் கால் டீஸ்பூன் கறிவேப்பிலை தூள் சேர்க்க வேண்டும்.(கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி நன்கு காய்ந்தவுடன் பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும்).
5. இப்போது அந்த தண்ணீரை நன்றாகக் கலந்து மூடி வைக்கவேண்டும். 5 நிமிடம் அப்படியே இருக்க வேண்டும்.
6. இதனுடன் தேவைக்கேற்ப தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

பயன்படுத்தும் முறை:

இதனை காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி விட்டு சுடுதண்ணீரை ஒரு டம்ளர் குடித்து விட்டு, அதன் பிறகு இந்தத் தண்ணீரை 7 நாட்கள் வரை குடித்து வர உங்களது இடுப்பின் அளவு குறையும். நீங்களே இதனை சோதித்துப் பார்க்கலாம்.

இது உங்கள் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கும் தன்மை கொண்டது. நிச்சயமாக பயன்படுத்தி பாருங்கள் இது நல்ல தீர்வாக உங்களுக்கு அமையும்.

என்னோடு உல்லாசமாக இருந்தால் தான் இதெல்லாம் தருவேன்! மருமகளுக்கு மாமனார் நெருக்கடி!

என்னோடு உல்லாசமாக இருந்தால் தான் இதெல்லாம் தருவேன்! மருமகளுக்கு மாமனார் நெருக்கடி!

பெண்களுக்கு எதிராக செயல்படுவது, வன்புணர்ச்சி செய்வது என அனைத்தும் வெளியிடங்களில் தான் நடக்கிறது என்றால், இங்கோ வீட்டிலேயே இந்த பெண்ணுக்கு நடக்கிறது. 70 வயதில் காலம் போன காலத்தில் மகள் போல் நடத்தாமல் இப்படி ஒரு மனிதன் பாருங்கள்.

32 வயது பெண் ஒருவர், தருமபுரி மாவட்டம், அரகாசனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட, எர்ரப்பட்டி கிராமத்தில் வாழ்ந்து வந்துள்ளார். இவர் தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனது கணவர் மாதேஸ், கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் இறந்ததால் எனது பெண் குழந்தைகளுடன் பெங்களூருவில் உள்ள என்னுடைய சகோதரர் வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்தேன்.

தற்போது கொரோனா காரணத்தால் ஊர் திரும்பி எனது கணவரது வீட்டில் குடியிருந்து வரும் நிலையில், 70 வயதான என்னுடைய மாமனார் ஆறுவேல் இரவு நேரத்தில் எனக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார்.

அவருடன் மனைவியாக வாழ்ந்தால் மட்டும் வீடு மற்றும் நிலம் எழுதி வைப்பதாகவும், இல்லை என்றால் எதுவும் தர முடியாது என்றும், கூறி மிரட்டி வருகிறார். மேலும் வீட்டில் இருக்கவும் கூடாது என கூறி, தனது இச்சைக்கு கட்டுப்பட வலியுறுத்தி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்.

எனவே எனக்கும், எனது பெண் குழந்தைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்குவதுடன் பாலியல் தொல்லை கொடுக்கும் மாமனார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என் கணவர் சொத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு இளம்பெண் தனது புகாரில் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மகன் இறந்துவிட்ட நிலையில் தந்தை ஸ்தானத்தில் இருக்க வேண்டிய மாமனாரே தனது மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர்கிட்ட சொல்லவா? பெண் காவலருக்கு மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுனர்!

0

அமைச்சர்கிட்ட சொல்லவா? பெண் காவலருக்கு மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுனர்!

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக சென்னை பாரிமுனை அருகே  வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர் அப்போது அவ்வழியாக வந்த அஸ்கர் அலி என்பவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

விசாரணையில் அவர் மாற்றுத்திறனாளி எனவும் மருத்துவக் காரணங்களுக்காக வெளியே செல்வதாகவும் பொய் கூறியுள்ளார் மேலும் அவர் போலி இ-பதிவு பெற்றுவிட்டு சவாரி ஏற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து தண்டையார்பேட்டை சட்ட ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் கிருத்திகா ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளார். பின்னர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர் அதன்பின் தகாத வார்த்தைகளால் பேசி காவல் உதவி ஆய்வாளரை திட்டியுள்ளார்.

அதற்கு அந்த காவல் உதவி ஆய்வாளர் நான் என்னுடைய பணியை செய்துக் கொண்டிருக்கிறேன் என கூறியதை அடுத்து அந்த நபர் ஒரு பொண்ணு நீயே இப்படியெல்லாம் பேசுறியா? என்னடா இது மோசமான பொண்ணா இருக்குது? உனக்கெல்லாம் சத்தியமா நல்ல சாவே வராது சாபம் விடுகிறேன் அவ என்ன பண்ணிடுவா என இழிவாக பேசினார்.

மேலும் நான் இந்த இடத்தில் 40 வருடங்களாக வசித்து வருகிறேன் என்றும், திமுக அமைச்சர் சேகர்பாபு உடன் பேசுறியா எனவும் கூறி காவல்துறையை தொடர்ந்து ஒருமையில் திட்டினார். இதையடுத்து அந்த காவல் உதவி ஆய்வாளர் கிருத்திகா அஸ்கர் அலி மீது புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து அந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக அதை தொடர்ந்து பெண் உதவி ஆய்வாளர் இடம் ஒருமையில் பேசி கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநர் மீது காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக முதலில் நடிக்க இருந்த நடிகை இவர்தான் போட்டுடைத்த இயக்குனர்!

0

கடந்த 2015ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்து வெளியான பிரேமம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

மலையாள திரைப்படமாக இருந்தாலும் கூட சென்னையில் இந்த திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்ததாக சொல்கிறார்கள். தென்னிந்திய சினிமாவில் ஒரு புதிய வைரலாக இந்த திரைப்படம் அமைந்துவிட்டது. முக்கியமாக மலர் டீச்சர் என்று சாய் பல்லவி அழைக்கப்பட்டது, அதோடு மலர் டீச்சர் தான் என்னுடைய கிரஸ் என பலரும் தெரிவிக்க காரணம் மலர் டீச்சர் கதாபாத்திரம்தான் என்று தெரிவிக்கப்படுகிறது.

தற்சமயம் அல்போன்ஸ் புத்திரன் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக இருக்கின்றார். ரசிகர்களுடைய கேள்விக்கு தொடர்ச்சியாக பதில் அளித்து வருகின்ற அவர் ஒரு சில தினங்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் அவர்களுக்காக தான் ஒரு கதை வைத்திருப்பதாகவும், ஆனால் அவரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிட்டவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

தற்சமயம் பிரேமம் திரைப்படத்தில் வேறு ஒரு நடிகையை நடிக்க வைப்பதற்கான எண்ணமானது தங்களுடைய மனதில் இருந்ததா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதற்கு பதில் அளித்த இயக்குனர் தொடக்க காலத்தில் இந்த கதையை எழுதிய போது நான் நடிகை அசினை தான் மலர் டீச்சராக நடிக்க வைக்க விருப்பம் கொண்டேன் கொச்சியை சார்ந்தவராக நடிகை இருந்தது ஆனாலும் அந்த சமயத்தில் என்னால் அசினை தொடர்பு கொள்ள இயலவில்லை. என்று தெரிவித்திருக்கிறார்.

அவரை தொடர்பு கொள்வதற்கு நடிகர் நிவின் பாலி யும் முயற்சி செய்தார். அதன்பிறகு அசின் முடிவை கைவிட்டு விட்டு தமிழில் கதையை எழுதினேன் நான் சிறுவயதில் ஊட்டியில் நடித்தேன் அதன் பிறகு என்னுடைய திரைப்பட படிப்பை சென்னையில் படித்தேன் என்றும் தெரிவித்திருக்கிறார். இதனால்தான் வலுவான தமிழ் இணைப்பு என்னுள் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! இமெயில் அனுப்பினால் போதும்!

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் தங்களது சுய விவரங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பி பயன்பெறுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நேர்காணலில் கலந்து கொள்ள அழைப்பு வரும்.

நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம்.

காலியிடங்கள்: 4

இடம்: சென்னை.

பணியின் பெயர் மற்றும் விபரங்கள்: விருப்பமும் தகுதியும் உடையவர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. Project associate II
2. Project associate (1) management
3. Project technician.
4. Office assistant

மொத்தம் 4 காலி இடங்கள் நிரப்பப்படுகின்றன.

தகுதி:

  1. Project Associate II-M.E / M.Tech degree in Thermal Stream / Materials Science / Energy Engineering / Engineering Design / Manufacturing Engineering.
  2. Project Associate I (Management)-MBA degree in Finance / HR / Operations / Systems with a degree in B.E / B.Tech / BA / BSc / BBA / BCom & good academic records
  3. Project Technician-Diploma degree in Mechanical / Civil / Electrical Engineering with at least one-year experience in erection, commissioning and maintenance of equipment
  4. Office Assistant- Pass in VIII standard preferably know to read & write in Tamil & English

    சம்பளம்:

    1. Project associate II- Rs.36000
    2. Project associate (1) management- Rs.22000
    3. Project technician. – Rs. 18000
    4. Office assistant- Rs. 10000

    தேர்ந்தெடுக்கும் முறை:

    தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். தேதியும் நேரமும் மின்னஞ்சல் மற்றும் மெசேஜ் மூலம் தெரிவிக்கப்படும்.

    அனுப்பும் முறை:விருப்பமும் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பங்களை சரியான அளவில் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களையும் புகைப்படத்தையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்.

Coordinator – ANIHEES, Centre for Excellence Building, Anna University, Chennai – 600025

அல்லது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதை ஸ்கேன் செய்து அனைத்து தேவையான ஆவணங்களுடன் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு 25. 6 .2021 முன் அனுப்பவும்.

உருவாகிறதா பாபநாசம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம்? கமல்ஹாசனின் தீவிர ஆலோசனை!

0

மலையாள திரையுலகில் மோகன்லால் மீனா உள்ளிட்டோரின் இடத்தில் சென்ற 2013ஆம் வருடம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் திரிஷ்யம். இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தை பல மொழிகளில் ரீமேக் செய்திருக்கிறார்கள். அதேபோல தற்சமயம் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் ரீமேக் செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

அந்த படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் திரைப்படத்தில் கமல் கௌதமி உள்ளிட்டோர் நடித்து இருந்தார்கள். அதேபோல இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருவதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் ஜீத்து ஜோசப் அவர்கள் திரிஷ்யம் திரைப் படத்தின் இரண்டாம் பாகத்தையும் தமிழ் ரீமேக் செய்வேன் என்று இதற்கு முன்னரே தெரிவித்திருந்தார். இருந்தாலும் தற்சமயம் கமல்ஹாசன் இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் விக்ரம் திரைப்படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதால் பாபநாசம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அவரால் நடிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக, இந்த திரைப்படத்தில் ஒரே மாதத்தில் நடித்து முடித்து விடலாம் என்ற காரணத்தால், இது தொடர்பாக ஆலோசனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எதையும் கடைபிடிக்க பொறுமை இல்லை! மிக நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்!

0

எதையும் கடைபிடிக்க பொறுமை இல்லை! மிக நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்!

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தேர்தல் பணிகள் முடிந்தபின் அதிகரித்து விட்டது. அதன் காரணமாக தற்போதைய அரசு அனைவரையும் கலந்தாலோசித்து முழு ஊரடங்கு அனுமதிக்கப் பட்ட நிலையில், தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில், சில தளர்வுகளுடன் மாநில அரசு ஊரடங்கை தளர்வுகளுடன் அறிவித்து உள்ளது.

ஆனாலும், டாஸ்மாக் அந்த வரிசையில் இல்லாததால் மதுபிரியர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர். மேலும் எதையாவது எதனுடனாவது கலந்து குடிக்க ஆரம்பித்து உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

இந்த நிலையில், தமிழக ஆந்திர எல்லைபகுதியான திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆந்திர மதுபானக் கடைகளுக்கு தமிழ்நாட்டு மதுபிரியர்கள் படையெடுத்துள்ளதால் அங்கு கட்டுக்கடங்காத கூட்டம், மிக நீண்ட வரிசையில் நிற்கும் காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.

அங்கு மது பாட்டில்களை வாங்கு வருவோர்களில் பாதிக்கு மேலே மாஸ்க் அணியவில்லை, தனி மனித இடைவெளியையும் கடை பிடிக்காமல் மது பாட்டிக்களை முண்டியடுத்து வாங்குகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமானதால் மதுபானக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால், தமிழக ஆந்திர எல்லையோர பகுதிகளான நகரி மற்றும் கனகம்மாள் சத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்து ஆந்திர மதுபாட்டில்களை மூட்டை மூட்டையாக கடத்தி சென்று, தமிழக எல்லை பகுதியான திருத்தணி ஆகிய பகுதிகளில் விற்று வருகின்றனர். இதனை காவல்துறை கண்டு கொள்ளாமல் இருப்பதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைவா படத்திற்கு வைக்கப்பட்ட தலைப்பு மாற காரணம் யார் தெரியுமா?

0

பிரபல நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி மாதத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும், வசூலையும், பெற்றது. நோய்த்தடுப்பு காரணமாக, போடப்பட்ட ஊரடங்கு காரணமாக, மாஸ்டர் இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. அதன் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்ட உடன் முதல் திரைப்படமாக மாஸ்டர் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்சமயம் நடிகர் விஜய் தளபதி 65 திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், தற்சமயம் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கிய விஜய் நடித்த தலைவா திரைப்படம் தொடர்பான முக்கியமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு முதலில் தளபதி என்றுதான் பெயர் வைக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் விஜய் இயக்குனர் மணிரத்தினத்தை சந்தித்த சமயத்தில் அவர் போட்டுக்கொடுத்த திட்டத்தின்படி தலைவா என்று திரைப்படத்தின் பெயரை மாற்றி விட்டதாக தற்சமயம் தெரிவிக்கப்படுகிறது.

அஞ்சலிக்கு திருமணமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0

அங்காடித்தெரு திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை அஞ்சலி இவர் அதற்கு முன்னர் திரைப் படங்களில் நடித்திருந்தாலும் கூட இந்த திரைப்படத்தில் அவர் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளியிட்டதன் மூலமாக இந்த திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு அநேக திரைப்பட வாய்ப்புகள் கிட்டியது.

ஆனால் அண்மைக் காலமாக அவருக்கு எந்தவிதமான படவாய்ப்புகளும் வரவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆகவே அண்மையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் நான் காதலித்தது உண்மை ஆனாலும் அந்த காதல் கைகூடவில்லை. அது தோல்வியில்தான் முடிந்தது என்று தெரிவித்திருக்கிறார். இருந்தாலும் தன்னுடைய காதலன் யார் என்பது தொடர்பாக அவர் வேகமாக தகவலையும் வெளியிடவில்லை.

இந்த சூழ்நிலையில் அவருக்கு திருமணம் செய்வதற்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும், விரைவாக ஐதராபாத்தில் திருமணம் நடக்க இருப்பதாகவும், தகவல் கிடைத்ததும் பலவிதமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது அவர் ஒரு தெலுங்கு நடிகராக இருக்கலாம் எனவும் அல்லது தொழில் அதிபராக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இருந்தாலும் திருமணத்திற்குப் பிறகு அவர் நடிப்புக்கு முழுக்கு போட இருப்பதாகவும், ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. இது அவருடைய ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தகவல்கள் தொடர்பாக அஞ்சலி இதுவரையில் எந்த விதமான அதிகாரபூர்வமான தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த லட்சுமிராய்! கிரங்கி போன ரசிகர்கள்!

0

கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முறையாக காலடி எடுத்து வைத்தவர் லட்சுமி ராய் இதனைத் தொடர்ந்து அவர் தாம்தூம், மங்காத்தா ,அரண்மனை, காஞ்சனா, மொட்ட சிவா கெட்ட சிவா, போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி விட்டார்.

லட்சுமிராய் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, போன்ற மொழிகளிலும் நடித்து வருகின்றார். சென்ற 2014ஆம் வருடத்தில் பாலிவுட்டில் ஜூலி 2 என்ற திரைப்படத்தில் இவர் மிகவும் கவர்ச்சியாக நடித்து இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த திரைப்படம் தோல்வியை தழுவி இருக்கிறது. பட வாய்ப்புகள் அவருக்கு மிகவும் குறைவாகவே இருப்பதன் காரணமாக, இந்தி திரைப்படங்களில் நடிப்பதற்கு தனி கவனம் செலுத்தி வருகிறார் என்று சொல்லப்படுகிறது.

https://www.instagram.com/p/CPzM-9LHcLN/?utm_source=ig_embed&ig_rid=6ff758ba-48e5-4017-8b85-86859a5e856d


அதோடு அவர் தன்னுடைய உதட்டை அழகாக மாற்றுவதற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். இந்த சூழ்நிலையில், தற்சமயம் நடிகை லட்சுமி ராய் கருப்புநிற டாப் ஒன்றை அணிந்து வெள்ளை தேகம் தெரியுமாறு செல்பி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார். அவருடைய முகத்தில் மினுமினுப்பும், அழகும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கின்றது என்று ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.