Monday, July 21, 2025
Home Blog Page 4558

சிவாங்கியிடம் சிறுவன் கேட்ட விஷயம்! நிறைவேற்றுவாரா?

0

சிவாங்கி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. சூப்பர் சிங்கர் 7- இல் அறிமுகமாகி குக் வித் கோமாளி சீசன் 1 &2 என இரண்டிலும் தனது அப்பாவியான மற்றும் அழகான செய்கையால் மக்கள் மனதை கவர்ந்தவர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிவாங்கியின் ஃபேன் தான்.

 

இப்பொழுது 12 வயதான ஒரு சிறுவன் ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டு சிவாங்கியவுடன் சமைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு உள்ளாராம். அதை அந்த சிறுவனின் தாய் ட்விட்டரில் கருத்து வெளியிட்டு பகிர்ந்துள்ளார். அதற்கு சிவாங்கி அதை பகிர்ந்து நன்றி என்று பதிலளித்துள்ளார்.

 

அந்த 12 வயது சிறுவனின் தாய் பகிர்ந்த விஷயம், எனது மகனுக்கு 12 வயது, அவன் சிறிது ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளான். அவன் தியேட்டரில் படம் பார்ப்பதை விரும்ப மாட்டான். அந்தக் கூட்டம் மற்றும் நெரிசல்கள் அதிகமாக இருப்பதால் அவனால் தியேட்டரில் படம் பார்க்க முடியாது. அதனால் அவனை தியேட்டருக்கு கூட்டிட்டு செல்வதையே நாங்கள் விட்டு விட்டோம். பிரைம் வீடியோவில் தான் அவன் படங்களை பார்ப்பான். அவனுக்கு தெறி, மடகாஸ்கர், நான் ஈ போன்ற திரைப்படங்கள் பிடிக்கும். அதேபோல் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் அவர்களின் பாடல்களை மிகவும் விரும்பி கேட்பான்.

 

சமீபத்தில் நானும் எனது அம்மாவும் குக் வித் கோமாளி அஷாங்கி மற்றும் புகழ் அவர்களின் வீடியோவை பார்க்க ஆரம்பித்தோம். எனது மகனின் ஆன்லைன் வகுப்புகளிலும் இதுபோல் ஒரு பகுப்பு வந்ததால் அவனும் இந்த குக் வித் கோமாளியை பார்க்க ஆரம்பித்தான். நாங்கள் அனைவரும் சேர்ந்து பார்த்தோம். ஒவ்வொரு முறையும் பார்க்கும் பொழுது அவனுக்கு பெயர்களை சொல்லி தந்தோம், அப்போது அவன் அஸ்வின் அண்ணா சிவாங்கி அக்கா, புகழ் அண்ணா என்று அவர்களை பெயரிட்டு கூற ஆரம்பித்தான்.

 

அதன் பிறகு நாங்கள் குக் வித் கோமாளி சீசன் 2 எபிசோட்களை பார்க்க ஆரம்பிக்கும் பொழுது அஸ்வின் மற்றும் சிவாங்கியை அவன் அடையாளம் கண்டுகொண்டு மிகவும் ஆர்வத்துடன் பார்த்தான். அப்பொழுது அவன் சொன்னான் நான் சிவாங்கி அக்காவுடன் சமைக்க வேண்டும் என்று. நான் அவனுக்கு எடுத்துக் கூறினேன், இது மிகப்பெரிய சோ, பெரியவர்கள் தான் சமைப்பார்கள், இது சிறிய பையன் ஆகிய நீ சமைக்க முடியாது என்று எடுத்துக் கூறினேன். அவன் உடனே 2035 நான் பெரிய பையன் ஆகிவிடுவேன். அப்போது சிவாங்கி அக்காவுடன் சேர்ந்து சமைப்பேன் என்றான்.

 

இதற்கு முன் அவன் இப்படியான விஷயங்களை எங்களிடம் பகிர்ந்து இல்லை. எங்களுடன் அமர்ந்து அனைத்து CWC 2 எபிசோடுகளை பார்க்கிறான். சிவாங்கியின் கியூடான எக்ஸ்பிரஷன்களைப் பார்த்து அவன் மகிழ்ச்சி அடையும் போதெல்லாம் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

 

தாங்க்யூ சிவாங்கி & CWC 2 டீம்.

 

இதை சிவாங்கி ட்விட்டரில் பகிர்ந்து நன்றி என்று தெரிவித்துள்ளார். பலரும் இதை பார்த்து ஷேர் செய்து சூப்பர் சிவாங்கி என்று மகிழ்ந்து வருகிறார்கள்.

 

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை! 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!

தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு. தமிழ்நாட்டில் உள்ள வட்டங்களுக்கு அஞ்சல் துறையின் கார் டிரைவருக்கு காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பணி: Tamilnadu Postal Circle

பணி : மத்திய அரசு பணி

காலிபணியிடம்: 25

இடம்: சென்னை

பணியின் பெயர்: Staff Car Driver

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வாகனத்தில் சிறு பழுது ஏற்பட்டால் அதை நீக்கும் அளவிற்கு தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை.

சம்பளம்: Rs. 19900- Rs.63200

தேர்வு செயல்முறை: முறையான ஓட்டுனர் உரிமம் பெற்ற வேட்பாளர் இடமிருந்து தேர்வு செய்யப்படும். அதன்பின் கனரக மோட்டார் வாகனங்களை ஓட்ட விண்ணப்பதாரர்களின் திறனை மதிப்பிடுவது குறித்து நடத்தப்படும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியான தேதிகள் அறிவிக்கப்படும்.

கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.100-க்கு ஒரு இந்திய அஞ்சல் ஆணை அல்லது UCR எடுக்கப்பட வேண்டிய அதே தொகைக்கு எந்த ஒரு தபால் நிலையத்திலும் விண்ணப்ப கட்டணத்துடன் இணைக்கப்பட வேண்டும். கட்டணமில்லாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும். பெண்கள் மற்றும் எஸ்சி எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

அனுப்பும் முறை:

விண்ணப்பங்கள் ஸ்பீடு போஸ்ட் மூலமாக மட்டுமே வரவேற்கப்படுகிறது. அதைத் தவிர மற்றது நிராகரிக்கப்படும்.

ஸ்பீடு போஸ்ட் அனுபுபவர்கள் அந்த விண்ணப்பத்தின் மேல் “Application for the post of Staff Car Driver (Ordinary Grade) in Mail Motor Service, Chennai 600 006.” ”

அனுப்ப வேண்டிய முகவரி “The Senior Manager, Mail Motor Service, No.37 (Old No.16/1) Greams Road, Chennai – 600 006  ”

விண்ணப்பம் வந்து சேரும் கடைசி நாள்:

25.06.2021

தேவையான ஆவணங்கள்:

1. பள்ளிச் சான்றிதழ்
2. ஓட்டுநர் உரிமம் HMV/LMV
3. RTO விடம் இருந்து பெற்ற ஓட்டுநர் உரிமம் நகல்.
4. சாதி சான்றிதழ்
5. அனுபவச் சான்றிதழ்
6. விண்ணப்ப கட்டணம் IPO/UCR

 

Website:  https://tamilnadupost.nic.in/.

https://tamilnadupost.nic.in/Documents/2021/May-2021/Notification-%20Driver.pdf

 

https://tamilnadupost.nic.in/Documents/2021/May-2021/corrigendum-driver-ext.pdf

சிறுமியை கடத்திய தொழிலாளி! சிறுமியின் தந்தை செய்த செயல்!

சிறுமியை கடத்திய தொழிலாளி! சிறுமியின் தந்தை செய்த செயல்!

பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளும், கொலை, கொள்ளை வழக்குகளும் அதிகரித்து கொண்டே வருகின்றது. நாளுக்கு நாள் இதெல்லாம் வளர காரணம் சட்டங்கள் கடுமையாக இல்லாதது, மட்டுமே. மற்ற நாடுகளில் உள்ளது போல் பெண்களை ஏறெடுத்து பார்க்கவே யோசிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும்.

புதுச்சத்திரம் அருகே திருமலைபட்டியை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் 15 வயது மகள் கடந்த மாதம் 29-ந் தேதி மாயமானார். இதுகுறித்து சிறுமியின் தந்தை புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் புதுசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அதே ஊரை சேர்ந்த ரங்கசாமி மகன் கூலித்தொழிலாளியான கவுதம் (வயது 19) என்பவர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது.

அந்த தொடர் விசாரணையில் அவர்கள் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியை மீட்டு, கவுதமை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

பின்னர் அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து கவுதம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்ந்து அந்த பையனை விசாரித்து வருகின்றனர்.

பெற்றோர்கள் செய்த திருமணம்! பெண்ணோ காதலனுடன் சேர்ந்து செய்த அதிர்ச்சி சம்பவம்!

0

பெற்றோர்கள் செய்த திருமணம்! பெண்ணோ காதலனுடன் சேர்ந்து செய்த அதிர்ச்சி சம்பவம்!

இப்போது உள்ள பிள்ளைகள் அவர்களுக்கு துணையை தானே தேடிக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள். அவர்கள் போக்கில் விட்டால் நன்றாக இருக்குமா? என யோசித்து அவர்களை சேர்த்து வைத்தால் அவர்களும் நன்றாக இருப்பார்கள். நாமும் நிம்மதியாக இருக்கலாம், ஆனால் நம் இஸ்டத்திற்கு திருமணம் செய்து வைக்கும் போது அவர்கள் வாழ்கை நன்றாக இருக்குமா? என்பதை யோசித்து செயல்பட வேண்டும்.

பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகா சிந்தோகி கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சப்பா கனவி. அதே கிராமத்தில் வசித்து வந்தவர் ஜக்குபாய். இந்த நிலையில் பஞ்சப்பாவும், ஜக்குபாயும் காதலித்து வந்தனர்.

ஆனால் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜக்குபாயின் பெற்றோர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஜக்குபாயை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியேறிய ஜக்குபாய், அங்கு பஞ்சப்பாவை சந்தித்து பேசினார். பின்னர் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள மாந்தோப்புக்கு சென்று 2 பேரும் அங்கு ஒரு மா மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதுபற்றி அறிந்த சவதத்தி போலீசார் சம்பவ இடத்திற்குசென்று பஞ்சப்பா, ஜக்குபாயின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் வேறொருவருடன் பெற்றோர் திருமணம் செய்து வைத்ததால் மனம் உடைந்த ஜக்குபாய், தனது காதலன் பஞ்சப்பாவுடன் தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து சவதத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசாங்கம் அறிவித்த தளர்வுகளில் டாஸ்மாக் அடங்குமா? குடிமகன்கள் ஆவல்!

0

அரசாங்கம் அறிவித்த தளர்வுகளில் டாஸ்மாக் அடங்குமா? குடிமகன்கள் ஆவல்!

கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலையில் பாதிப்புகள் கட்டுக்கு அடங்காமல் உள்ளதால், மாநில அரசுகள் பல்வேறு முடிவுகளை தொடர்ந்து பரிசீலனை செய்து வருகிறது. அதன் பேரில் முழு ஊரடங்கு தமிழகம் முழுவதிலும் தொடர்ந்து வருகிறது.

தற்போது நோய் தொற்று பல மாவட்டங்களில் குறைந்துள்ளதின் காரணமாக அந்த மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகளை பின்பற்ற அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் பொழுது பொதுமக்கள்‌ அத்தியாவசிய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும்‌ நோக்கில்‌, அனைத்து மாவட்டங்களிலும்‌ நடைமுறையில்‌ இருந்துவரும்‌ நடமாடும்‌ காய்கறி, பழங்கள்‌ விற்பனை தொடர்புடைய துறைகள்‌ மூலம்‌ தொடர்ந்து நடைபெறும்‌.

மேலும்‌, மளிகைப்‌ பொருட்களை அந்தந்தப்‌ பகுதிகளில்‌ உள்ள மளிகைக்‌ கடைகளால்‌ வாகனங்கள்‌ அல்லது தள்ளுவண்டிகள்‌ மூலம்‌ உள்ளாட்சி அமைப்புகளின்‌ அனுமதியுடன்‌, குடியிருப்புப்‌ பகுதிகளுக்குச்‌ சென்று விற்பனை செய்யவும்‌, ஆன்லைன்‌ மற்றும்‌ தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர்‌ கோரும்‌ பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும்‌ காலை 7 மணி முதல்‌ மாலை 6 மணிவரை அனுமதிக்கபட்டு வந்துள்ளது.

இந்நிலையில், இந்த ஊரடங்கு வருகின்ற 7ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து நேற்று மருத்துவ குழுவினருடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 7 முதல் 14 வரையிலான ஊரடங்கு காலத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி. மேலும் மின் பணியாளர் (Electricians) பிளம்பர்கள் (Plumbers) கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.

ஊரடங்கு தளர்வுகளில் டாஸ்மாக் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் அரசு அறிவிக்கவில்லை. மேலும் தளர்வுகளுடன் கூடிய இந்த ஊரடங்கு டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி கிடையாது என தமிழக அரசு கூறியுள்ளது.

நாகினி-3 புகழ் நடிகர் பாலியல் வழக்கில் கைது! இவருக்கு தமிழ் நடிகை ஆதரவு!

0

நாகினி-3 புகழ் நடிகர் பாலியல் வழக்கில் கைது! இவருக்கு தமிழ் நடிகை ஆதரவு!

நிஷா ராவல் மற்றும் கரண் மெஹ்ரா டிவி நட்சத்திர தம்பதிகளில்  நிஷாவின் புகாரின் பேரில் கரண் மெஹ்ரா வீட்டு வன்முறை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமின் வழங்கப்பட்டு உள்ளது. கரண் மெஹ்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

நிஷா ராவல் மற்றும் கரண் மெஹ்ரா டிவி நட்சத்திர தம்பதிகளில்  நிஷாவின் புகாரின் பேரில் கரண் மெஹ்ரா வீட்டு வன்முறை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமின் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் கரண் மெஹ்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி சஞ்சய் பாட்டீல் கூறியது.

இந்த சம்பவம் பழையதுதான், ஆனால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி தனது தாயுடன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து உள்ளார்.  நாங்கள் பிரிவு 376 (கற்பழிப்பு)  மற்றும் போக்சோ சட்டத்தின்  கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். பூரி  நீதிமன்றத்தால் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பாட்டீல் மேலும் தெரிவித்தார்.

டிவி தொடர்களில் நடிக்கவைப்பதாக கூறி சிறுமியை  நடிகர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

இதனை தொடர்ந்து,  இந்த செய்தி வெளியானவுடன், நாகினி 3 ல்  பூரியுடன் நடிக்கும்  அனிதா ஹசானந்தனி அவருக்கு ஆதரவாக பேசினார். இன்ஸ்டாகிராமில் அவருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், “சில முட்டாள்தனமான செய்திகளுக்கு பதில் அளிக்கிறேன் பேர்ல்  வி பூரியை எனக்கு நன்றாக தெரியும் என்றும், இது உண்மையல்ல என்றும், இதெல்லாம்  உண்மையாக இருக்க முடியாது, எல்லாம் பொய்கள்.  விரைவில் உண்மை வெளிவரும். ஐ லவ் யூ  பேர்ல்  வி பூரி எனவும் கூறி உள்ளார்.

அனிதா ஹசானந்தனி தமிழில் வருசெமெல்லாம் வசந்தாம், சாமுராய், சுக்ரன்,நாயகன்,மகராஜா ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.

அடேங்கப்பா! நம்ம தளபதி மகன் என்னமா கார் ஓட்றாரு! வீடியோ உள்ளே! மறக்காம பாருங்க!

0

தமிழ் சினிமா மட்டுமல்ல உலக சினிமாவிலேயே இளைய தளபதிக்கு தான் அதிகமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இவர் கையசைத்தால் அந்தக் கையின் அசைவுக்கு ஆட்டம் போடும் எத்தனையோ இளம் தலைமுறைகள் இவரைப் பின்பற்றி வருகிறார்கள். இவர் படங்களின் தகவல்கள் இப்போ வந்து விடும். ஆனால் இவரது குடும்பத்தைப் பற்றிய தகவல் அவ்வளவு எளிதாக வருவதில்லை.

தளபதிக்கு மகன் மகள் உள்ளனர். மற்ற திரைப்பட நடிகர்கள் தங்களது குடும்பப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் நம் தளபதி இடமும் அந்த பழக்கம் கிடையாது. அதாவது நம் தளபதியின் மகன் மகள் மற்றும் மனைவி புகைப்படங்கள் எதுவும் அவ்வளவு சீக்கிரம் வெளி வராது. தளபதியின் மகன் ஜேன்சன் சஞ்சய் கனடாவிலுள்ள சினிமா படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பியுள்ளார்.

இவர் எப்பொழுது சினிமா பக்கம் வருவார் என்பதை பற்றி தெரியவில்லை. சீக்கிரம் திரையில் பார்ப்போம் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவர் திரைக்கு முன்னால் வருவதைவிட பின்னால் வருவதை விரும்புகிறாராம்.

இப்பொழுது அவர் கார் ஓட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. ஜேன்சன் தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்யும் போது எடுத்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அப்படியே தன் அப்பாவை போலவே காணப்படுகிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். அதேபோல் ஊரடங்கு தம்பி மாஸ்க் போடுங்க என்ற கமெண்டுகளும் தெறித்து வருகிறது.

 

 

https://twitter.com/IamJasonSanjay/status/1400063355650416647?s=20

ரூ 1 கோடி வழங்கியது போத்திஸ் பட்டு நிறுவனம்!

0

அனைவரும் தங்கள் சார்பில் முதலமைச்சருக்கு கொரோனா நிவாரண நிதியை திரட்டி அளித்து வரும் நிலையில் போத்தீஸ் நிறுவனமானது ஒரு கோடி ரூபாயை போத்திஸ் பட்டு ஆலயத்தின் சார்பில் கொரோனா நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளது.

கொரோனா வின் இரண்டாவது அலை அனைவரையும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. சமீபத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பொதுமக்கள் கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அனைவரும் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.

திரைக்கலைஞர்கள், பல்வேறு நிறுவனங்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். ஏன் சிறுவர்கள் கூட தான் சேமித்து வைத்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கி வருகின்றனர்.

இப்பொழுது போத்திஸ் பட்டு ஆலயத்தின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ 1 கோடி வழங்கியுள்ளது. சென்னை தலைமையகத்தில் போத்திஸ் பட்டு ஆலயத்தின் இயக்குனர் ரமேஷ் போத்தி அவர்கள் முதலமைச்சர் அவர்களை சந்தித்து கொரோனா நிவாரண நிதியை வழங்கினார்.

இதற்கு மு க ஸ்டாலின் அவர்கள் போத்தீஸ் குடும்பத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட உடற்பயிற்சி புகைப்படம்! செம ஹாட்!

0

தமிழ், தெலுங்கு, மலையாளம், போன்ற தென்னிந்திய மொழிகளில் வெளிவரும் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்சமயம் இவருடைய நடிப்பில் ரஜினியின் அண்ணாத்த மற்றும் சாணி காயிதம் போன்ற திரைப்படங்கள் உருவாகி வருவதாக சொல்கிறார்கள்.

அதோடு மலையாளத் திரையுலகில் நடிகர் மோகன்லாலுடன் கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர் இந்த படம் எப்போது வெளிவரும் என்று கீர்த்திசுரேஷ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

https://www.instagram.com/keerthysureshofficial/?utm_source=ig_embed&ig_rid=99935d0d-f9dd-49b2-bfe6-3b25c43fc7ce



நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் அவருடைய வாழ்க்கையில் நடைபெறும் பல விவகாரங்களை எப்போதும் சமூக வலைத்தளத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த விதத்தில் சமீபத்தில் இவர் மோகன்லாலுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அந்த புகைப்படம் வைரலாகி இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் ஊரடங்கு காரணமாக, அவர் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தற்சமயம் உடலை வளைத்து யோகா செய்யும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

வெளியானது வலிமை திரைப்படத்தின் முதல் அப்டேட்! ரசிகர்கள் மகிழ்ச்சி!

0

கோலிவுட் வட்டாரத்தில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் அஜித்குமார். இவருடைய நடிப்பில் வெளிவந்த திரை படங்கள் எல்லாமே ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்து வசூலில் சாதனை படைத்திருக்கிறது.

மற்ற நடிகர்களை போல இல்லாமல் தன்னம்பிக்கை ஏற்படும் திரைப்படங்களில் மட்டுமே அஜித்குமார் நடித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. கடைசியாக இவருடைய நடிப்பில் கடைசியா வெளியான படம் நேர்கொண்ட பார்வை இந்த திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை பதிவு செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. அதோடு குடும்பங்களுடன் ஒன்றிணைந்து ரசிக்கும் ரசிகர்கள் மட்டும் திருப்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது.

அத்துடன் நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் எந்தவிதமான பெரிய அளவிலான சண்டை காட்சிகளும் இல்லை என்று சொல்லப்படுகிறது. தற்சமயம் அஜித் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தொடர்பான தகவல் இதுவரையில் வெளியாகாமல் இருந்து வருகிறது ஆகவே விரைவாக இதுதொடர்பான தகவலை வெளியிட வேண்டும் என்று அஜித் குமார் அவர்களின் ரசிகர்கள் அவருக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஹீமா நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திக்கேயா நடித்து வருகிறார் எனவும் இந்த சூழ்நிலையில் நடிகர் அஜித் வலிமை திரைப்படத்திற்காக 10 முதல் 15 கிலோ வரை எடையைக் குறைத்து விட்டார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நேர்கொண்டபார்வை இத்திரைப்படத்தில் அதிரடி காட்சிகளை மிகவும் மிஸ் செய்த ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாகவே இருக்கும் என்று இந்த திரைப்படத்தின் தகவல் முதல் முறையாக வெளியிடப்பட்டு இருக்கிறது.