Wednesday, July 23, 2025
Home Blog Page 4588

இந்த வயதிலும் எவ்வளவு அழகு! ரசிகர்களை உச்சுக்கொட்ட வைக்கும் சிம்ரன்!

0

நோய் தொற்றின் இரண்டாவது அலை தற்சமயம் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. அதோடு பல உயிர்களை இந்த நோய் தொற்றின் இரண்டாவது அலை பலி கொண்டு வருகின்றது. இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

அதோடு தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வையும் மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தி வருகின்றன. ஆனாலும் நாள்தோறும் ஏற்படுகின்ற இறப்பு செய்திகள் எல்லோரையும் கலங்கத்தான் வைக்கிறது.

இதன் காரணமாக, பல பிரபலங்களும் தங்களுடைய இல்லறத்தில் இருந்தவாறே தங்களுக்கு பிடித்த பல விஷயங்களை செய்து வருகிறார்கள். அதோடு பலர் நோய் தோற்று குறித்த விழிப்புணர்வு காணொளிகளை பகிர்ந்து வருகிறார்கள். அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

அந்த விதத்தில் தற்சமயம் நடிகை சிம்ரன் ஊர் அடங்கில் இருக்கும் போது தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன்னுடைய வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். 40 வயதிலும் தன்னுடைய உடலை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கின்ற அவரை ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

இனிமேல் தமிழில் இன்ஜினீயரிங் படிக்கலாம்!! AICTE ஒப்புதல்!

0

பொறியியல் படிப்புகளில் ஆர்வமுடைய மாணவர்கள் ஆங்கிலம் சரியாக தெரியாததால் படிப்பை நிறுத்தும் அபாயம் கூட ஏற்பட்டுள்ளது. சாதாரண பழங்குடி மக்கள் கூட பொறியியல் படிப்பிற்கு படிக்க அவர் அவர்களது தாய்மொழியில் பொறியியல் படிப்புகள் நடத்தலாம் என ஏஐசிடிஇ ஒப்புதல் அளித்துள்ளது..

தமிழ் உள்ளிட்ட மற்றும் 8 மொழிகளில் பொறியியல் படிப்புகளை நடத்த அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், குஜராத்தி, கன்னடம், மராத்தி மற்றும் வங்க மொழிகளில் 2020-21 கல்வி ஆண்டில் பொறியியல் பாடங்களை நடத்துவதற்கு  AICTE அனுமதி அளித்துள்ளது.

 

தொழில்நுட்பக் கல்வியை மாணவர்களின் தாய்மொழியிலேயே கற்பிப்பது தான் தங்களது நோக்கமென ஏஐசிடிஇ தலைவர் அனில் சாஸ்டிரபுத்தே கூறியுள்ளார். அவர்களது தாய் மொழியில் பாடங்களைக் கற்பிப்பதற்கு மூலம் அடிப்படையான தொழில்நுட்பக் கல்வியின் விஷயங்களை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.

 

இது தொடர்பாக 500 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் இளநிலை பட்டப் படிப்பையும் 11 மொழிகளில் நடத்த திட்டமிடல் செய்யப்பட்டு வருகிறது.

 

கிராமப்புற மற்றும் பழங்குடியின மக்கள் எளிதில் தொழில் படிப்பை படிக்க முடியும். அவர்களின் மத்தியில் தொழிற்படிப்பு படிக்கும் வாய்ப்புகளை அதிகமாக உருவாக்க முடியும். பலபேர் ஆங்கிலம் சரியாக தெரியாததால் தொழில் படிப்புகளில் சேர தயக்கம் காட்டி வருகின்றனர். அதனால்  அவர்களது தாய்மொழியில் தொழில் படிப்புகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக தொழில் படிப்புக்கு மதிப்பு கூடும்.

 

ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள், தங்களது தாய் மொழியில்தான் பாடங்களை கற்பிக்கின்றனர்.

ஸ்டாலின் வெளியிட்ட இனிப்பான செய்தி! தமிழக மக்கள் மகிழ்ச்சி!

0

நோய்த்தொற்று நாடு முழுவதும் மிகத் தீவிரமாக பரவி வருகிறது இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நோய் தொற்றின் முதல் அலையை விட இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது.அதனுடைய வீரியமும் அதிகமாகவே இருந்து வருகிறதுஇதனைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். ஆக்சிஜன் போன்றவற்றை அதிகப்படுத்துவதில் தங்களுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.

 

அந்த விதத்தில் தமிழக அரசு சார்பாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் உதவியுடன் சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்ற ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் வலைப்பதிவில் ஸ்டாம்லி மருத்துவமனையில் உதவியுடன் சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள 100 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையத்தை தொடங்கி வைத்தேன் சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது பிற பகுதியில் கட்டுப்படுத்த அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று பதிவிட்டிருக்கிறார்.

நாட்டு மருத்துவரின் மருந்தால் குணமாகும் கொரோனா! படையெடுத்த மக்கள்!

0

நாட்டு மருத்துவரின் மருந்தால் குணமாகும் கொரோனா! படையெடுத்த மக்கள்!

கொரோனாவின் இரண்டாம் அலை பல திருப்பங்களை அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தினாலும், தமிழகத்தில் நோய் தொற்று முதலிடம் வகிக்கும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல நிறுவனங்களின் மருந்தை தடுப்பூசியாக பயன்படுத்தினாலும், எந்த மருந்து முழுமையாக குணம் அளிக்கிறது என யாருக்கும் தெரியாத பட்சத்தில் மக்கள் அனைவரும் குழப்பத்தில் இருந்தாலும், அரசு சொல்வதற்காக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில், நெல்லூர் மாவட்டத்தில், கிருஷ்ணப்பட்டினம் முத்துக்கூறு கிராமத்தை சேர்ந்தவர் போனஜி  ஆனந்தய்யா என்பவர்.இவர் பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்கி, வைத்தியம் பார்த்து வருகிறார்.

சமீபத்தில் இவர் கொரோனா நோயாளிகளுக்காக தேன், வால் மிளகு, கத்திரிக்காய் போன்ற பொருட்கள்  கொண்டு மருந்து தயாரித்தார். இது நல்ல பலன் தந்ததால் அவரிடம் மருந்து வாங்க பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கிருஷ்ணப்பட்டினத்தில் குவியத் தொடங்கியுள்ளனர்.

இது பற்றி அவர் கூறுகையில், கண்ணில் போடக்கூடிய சொட்டு மருந்தாகும்.இந்த சொட்டு மருந்து  தேன், வால் மிளகு மற்றும் ஒரு குறிப்பிட்ட வகையான கத்திரிக்காயின் கூழ் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டு உள்ளது என்றார்.

இதுகுறித்து தகவலறிந்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆனந்தய்யாவின் ஆயுர்வேத மருந்து உண்மையில் கொரோனா தொற்றை குணப்படுத்துகிறதா என்பதை ஆய்வு செய்யுமாறு ஐசிஎம்ஆர் குழுவுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதுவரை ஆனந்தய்யாவின் மருந்து விநியோகத்தை நிறுத்துமாறும் அவர் அறிவுறுத்தியதால், போலீசார் மற்றும் வருவாய் அதிகாரிகள் தலையிட்டு அவரது மருந்து விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்திவிட்டனர்.

இந்நிலையில், ஆந்திர அரசு நியமனம் செய்த மருத்துவக் குழு கிருஷ்ணப்பட்டினம் சென்று, ஆனந்தய்யாவின் ஆயுர்வேத மருந்தை ஆய்வு செய்தது. இந்த மருந்தால் எவ்வித பக்க விளைவுகளும் இல்லை என்றும், இவை முற்றிலும் முறையான மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படுவதாகவும் அக்குழு அறிவித்தது.

அதனை தொடர்ந்து இந்த சூழலில், ஆனந்தய்யா நெல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ரகசியமாக தங்கவைக்கப்பட்டிருப்பதை தெலுங்கு ஊடகம் ஒன்று உறுதி படுத்தியது.

அங்கு அவர், தனது சிஷ்யர்களுடன் சேர்ந்து மிகப்பெரிய அளவில் கொரோனா மூலிகை மருந்தை தயாரித்து வருவதையும் அந்த ஊடகம் ஒளிபரப்பியது.

இந்த ரகசிய இடத்தில் ஆளும் கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஆனந்தய்யா, கொரோனா மருந்து தயாரித்து, அவற்றை ஆந்திரா, தெலங்கானா, மற்றும் டெல்லியில் உள்ள விஐபிக்களுக்கு மட்டும் ஆளும் கட்சியினர் ரகசியமாக அனுப்பி வைப்பதாகவும், அந்த ஊடகம் வீடியோ ஆதாரங்களுடன் செய்தியை வெளியிட்டது.

இத்தகைய சூழ்நிலையில், ஆனந்தய்யா தயாரிக்கும் மருந்தை திருப்பதியில் உள்ள ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் நேற்று முதல், எலிகள், முயல்களுக்கு கொடுத்து பரிசோதனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மருந்து குறித்து முழுமையாக அனைத்து பரிசோதனைகளையும் செய்த பிறகு, இதுதொடர்பான அறிக்கை மத்திய, மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், அரசுகள் அனுமதி வழங்கினால், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உதவியுடன் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் மருந்து தயாரித்து அனைத்து மாநிலங்களுக்கும் வழங்குவோம் என்றும் சந்திரகிரி தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் ரெட்டி கூறியுள்ளார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானங்கள் (டி.டி.டி) ஆயுர்வேத வல்லுநர்களும் இந்த தயாரிப்புகள் குறித்து  ஆய்வு செய்து வருகின்றனர், மேலும் ஆயுஷ் அமைச்சகம் ஒப்புதல் அளித்தவுடன் பெரிய அளவில் விநியோகிப்பதற்கான மருந்துகளை தயாரிக்கும் திறன் இருப்பதாக டி.டி.டி கூறியுள்ளது.

இதற்கிடையே, நெல்லூரில் தற்போது ஆனந்தய்யா தயாரித்த மருந்துகள் பாக்கெட் ஒன்று ரூ.1,500 முதல் 2,000 ஆயிரம் வரை கள்ளச்சந்தையில் சிலர் விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

போனஜி ஆனந்தையா ஒரு நாட்டு மருத்துவர் மற்றும் அவரது தயாரிப்புகள் ஆரம்பத்தில் ‘நேத்து மண்டு’ (நாட்டு மருத்துவம் அல்லது பாரம்பரிய சிகிச்சைமுறை முறைகள்) என விளம்பரப்படுத்தப்பட்டாலும், பின்னர் அவர் ‘ஆயுர்வேத சிகிச்சையுடன் இணைந்திருக்கிறார்’ என்றும் ஆயுஷ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விரைவில் உண்டாகும் கூட்டணி! தெறிக்க விடப் போகும் இயக்குனர்!

0

இயக்குனர் அட்லி மிக குறுகிய சமயங்களிலேயே முன்னணி இயக்குனர்கள் வரிசையில் வந்துவிட்டார். இவர் இயக்கிய திரைப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். முதன்முதலாக இயக்கிய ராஜாராணி தெரிவித்ததைத் தொடர்ந்து அடுத்தடுத்து இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் ஹிட் அடித்தது. இந்த நான்கு திரைப்படங்களும் நல்ல வரவேற்ப்பை பெற்றது அவர் இதற்கு முன்னர் இயக்குனர் ஷங்கர் படமான நண்பன், எந்திரன் போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் என்று சொல்லப்பட்டது.

ஆனால் இவர் இயக்கும் அனைத்து படங்களுமே முன்பே வெளியான திரைப்படங்களின் டாப்பிங் போலவே இருக்கிறது என்ற ஒரு விமர்சனம் அவர் படம் வெளிவரும் போதெல்லாம் எழுவது யோசிக்க வேண்டிய விஷயம் தான்.

நடிகர் விஜய் அவர்களின் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை தொடர்ச்சியாக இயக்கியவர் அடுத்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும், தெரிவிக்கப்படுகிறது .இதற்கு முன்னர் ஷாருக்கான் தற்சமயம் நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்வதில் கவனம் செலுத்தி வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது.

தமிழகத்தில் அதிகரிக்கும் கருப்பு பூஞ்சைத் தொற்று! பீதியில் மக்கள்!

0

தமிழகத்தில் ஏற்கனவே நோய்த் தொற்று பரவல் மிகத் தீவிரமாக தாண்டவம் ஆடி வருகிறது. அதில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனாலும் அந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறது அரசாங்கம்.

அதேசமயம் பொதுமக்களிடம் இது தொடர்பான விழிப்புணர்வு சரியான அளவில் இல்லை என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் முழு ஊரடங்கு போடப்பட்டும் பொதுமக்கள் ஏதோ சாதாரண நாளில் வெளியில் சுற்றுவது போல திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த கொரோனா தொற்றை தொடர்ந்து கருப்பு பூஞ்சை நோய்க்கும் உயிரிழப்பு ஏற்படத் தொடங்கி இருக்கிறது. இது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.நாட்டின் பல மாநிலங்களில் இந்த கருப்பு பூஞ்சை தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. கொரோனாவில் இருந்து நலம் பெற்றவர்கள் இந்த நோய் பாதிப்பு காரணமாக, அதிகமாக பாதிப்படைகிறார்கள். எனவே இந்த நோயை தடுப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், வேலூரை சேர்ந்த முருகானந்தம் என்பவர் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிப்படைந்து பலியாகி இருக்கிறார். சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருக்கிறார். இந்த நிலையில், அவருக்கு மறுபடியும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கருப்பு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது அவருடைய இடது கண் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலன் இல்லாமல் உயிர் இழந்து விட்டார் என்று சொல்லப்படுகிறது.

அட்லி இயக்கத்தில் இவரா? அறிவிப்பு வெளியிடாத நிலையில் ஆர்வம்!

அட்லி இயக்கத்தில் இவரா? அறிவிப்பு வெளியிடாத நிலையில் ஆர்வம்!

இயக்குனர் அட்லி என்பவர் மிக குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனர்கள் வரிசையில் வந்து விட்டார்.இவர் இயக்கிய படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்றாலும், மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்ப்பு உள்ளது.

ராஜாராணி,தெறி,பிகில்,மெர்சல் போன்ற படங்களை இயக்கி உள்ளார்.அதற்கு முன் இயக்குனர் சங்கரின் திரைப்படமான நண்பன்,எந்திரன் போன்ற படங்களில் உதவி இயக்குனர் ஆகவும் பணியாற்றி உள்ளார்.

இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் ஹிட் அடித்தது.விஜய்யை வைத்து  இவர் கொடுத்த 3 படங்கலும் மக்கள் மத்தியில் வெற்றியடைந்தது.

அட்லி அடுத்ததாக, பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், ஷாருக்கான் தற்போது நடித்து வரும் படப்பிடிப்பு வேலைகளை முடித்து வருகின்றனர்.

மன்னிப்பு கேட்டார் எச் ராஜா!

0

நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை மரணம் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் எச் ராஜா சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இந்த கருத்து பல்வேறு தரப்பினராலும் ஆட்சேபிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்தார்கள்.

அதாவது நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை மரணம் அடைந்ததற்கு இயற்கை காரணம் அல்ல, அவர் கொலை செய்யப்பட்டார் என்று தெரிவித்த எச் ராஜா, அவருடைய மரணத்திற்கு காரணம் அப்போது பாபநாசம் சட்டசபை உறுப்பினராக இருந்த ஜவாஹிருல்லாஹ் என்று தெரிவித்தார்.

இதன் காரணமாக, திருமாவளவன் உள்ளிட்டோர் அவருடைய கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள் அதோடு இஸ்லாமிய அமைப்புகளும் அவருக்கு எதிராக கொந்தளிக்கத் தொடங்கியது.

இந்த சூழ்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை மரணம் குறித்து தான் பேசிய சர்ச்சை கருத்துக்கு எச் ராஜா மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதோடு தவறான நோக்கத்துடன் நான் அவ்வாறு பேசவில்லை என்று தெரிவித்து இருக்கிறார் எச் ராஜா.

அதேசமயம் ராஜாவிற்கு இவ்வாறு இஸ்லாமிய அமைப்புகளைப் பற்றியும், இஸ்லாமிய தலைவர்களை பற்றியும் தவறாக பேசி விட்டு மன்னிப்பு கேட்பது வாடிக்கையாகிப் போய்விட்டது. அதனால் இந்த முறை அவர் மன்னிப்பு கேட்டாலும் நாங்கள் அவரை மன்னிக்க மாட்டோம் என்று பல இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பொது மக்களிடையே வந்த நம்பிக்கை! துரிதப்படுத்தும் மாநில அரசு!

0

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவால்லை கட்டுப்படுத்துவதற்காக இந்த மாதம் 24 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அதனால் பொதுமக்களுக்கு பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் நேற்று ஒரே தினத்தில் 33 ஆயிரத்து 764 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், மொத்த நோய் தொற்று பாதிப்பு 19 லட்சத்து 45 ஆயிரத்து 260 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்று இந்த நோய்க்கு 475 பேர் பலியாகி இருக்கிறார்கள். இந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 21 ஆயிரத்து 715 ஆக அதிகரித்திருக்கிறது. 29 ஆயிரத்து 617 பேர் இந்த நோய் தொற்றிலிருந்து நலம் பெற்று வீடு திரும்பியதை தொடர்ந்து மொத்த நலன் பெற்றோரின் எண்ணிக்கை 16 லட்சத்து 13 ஆயிரத்து 221 ஆக அதிகரித்திருக்கிறது.

இதன் காரணமாக, தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு துரிதப்படுத்தி இருக்கிறது. தற்சமயம் எல்லா ஊர்களிலும் நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், தமிழ்நாட்டில் இரண்டாவது தினமாக நேற்று தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டி இருக்கிறது. நேற்று இரண்டு லட்சத்து 59 ஆயிரம் பேர் இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். சென்ற வாரங்களில் தினசரி எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கு கீழே இருந்த சூழலில் தற்சமயம் இந்த எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், தடுப்பூசி மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. ஆகவே எல்லோரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகிறார்கள் குறிப்பாக இளைஞர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை!

0

இந்தியாவைப் பொறுத்தவரையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றது. அந்த விதத்தில் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறை இந்தியாவை பொறுத்தவரையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பொதுத்துறை நிறுவனங்களாக இருந்து வரும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நோய்த்தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இருந்தது.ஆனால் அதற்கு முக்கிய காரணமாக, சொல்லப்பட்டது அண்மையில் நடைபெற்ற தமிழகம், புதுவை, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் தான் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால் ஜூன் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது

அந்த வகையில், சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது. பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து 95 ரூபாய் 28 காசுகளும். டீசல் ஒரு லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து 89 ரூபாய் 39 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.