Sunday, July 27, 2025
Home Blog Page 4594

அண்ணாச்சி பட நடிகைக்கு சம்பளம் இத்தனை கோடியா?

0

தமிழ்நாட்டில் இருக்கின்ற பிரபலமான துணிக்கடைகளில் ஒன்றுதான் சரவணா ஸ்டோர்ஸ் தமிழ்நாட்டில் பல கிளைகளை தொடங்கி மிகவும் பிரம்மாண்டமாக காட்சி தருகிறது. இந்த துணிக்கடை விளம்பர படங்களில் அந்த கடையின் உரிமையாளர் சரவணன் அருள் நடித்திருந்தது சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலுக்கு ஆளானது.

ஆனாலும் இதுவே அவருக்கு ஒரு கதாநாயகராக ஆவதற்கு வழியை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. கோலிவுட்டில் தன்னுடைய ஜோடியாக நடிப்பதற்கு ஹன்சிகா, தமன்னா, நயன்தாரா, என்று கோலிவுட்டின் முன்னணி நடிகைகளுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார் சரவணன் அருள்.ஆனால் அவருடன் எந்த நடிகையும் நடிப்பதற்கு தயாராக இல்லை என சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த திரைப்படத்தில் கிளாமர் ராணியான ஊர்வசி ரவுடாலா நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்னர் சரவணன் அருள் ஊர்வசியுடன் ரொமான்ஸ் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி விட்டது.இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு அவருக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை கேள்வியுற்ற நடிகைகள் பலரும் கவலை அடைந்துள்ளனர்.

நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்! மனசாட்சிகள் மடிந்து போனது!!

0

வேலூர் மாவட்டத்தில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கருகிய நிலையில் உள்ள உடலை மீட்டு எடுக்கபட்ட சம்பவம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அங்குள்ள மக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

வேலூர் மாவட்டத்தில் உள்ள அடுக்கம்பாரை என்ற ஊரில் அரசு மருத்துவமனைக்கு மிக அருகில் எரிந்த நிலையில் ஒரு அட்டை பெட்டி இருந்துள்ளது. மருத்துவமனைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால் என்னவென்று பார்க்கச் சென்ற மக்கள் பயந்து போய் அலறி இருக்கின்றனர். அங்கு போய் பார்த்தால் மக்களுக்கு மிகப் பெரும் அதிர்ச்சி. அந்த அட்டைப் பெட்டிக்குள் கருகிய நிலையில் பச்சிளம் குழந்தை ஒன்று இறந்து கிடந்து உள்ளது.

 

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர். தகவலை கேட்டு அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உள்ளனர்.

 

போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின் அனைவரிடமும் தீவிர விசாரணை செய்தனர். ஆனாலும் எந்த ஒரு தகவலும் கிடைக்க படாத நிலையில் போலீசார் அந்த குழந்தை இறந்து எரிக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் உறவின் மூலம் பிறந்து எரிக்கப்பட்டதா? என்ற பல்வேறு கோணங்களிலும் விசாரித்து வருகின்றனர்.

 

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்குள் பிறந்த குழந்தைகளின் விவரங்களை மருத்துவமனை இடம் கேட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

குழந்தைகளே இல்லை என்று ஏங்கும் பலர் இருக்க, இரண்டு நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை எரிக்க எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை என்று பலரும் திட்டி வருகின்றனர்.

திருநங்கைகளை கவலை படாதீங்க!! உங்களுக்கு உதவித்தொகை!! அதிரடி காட்டும் மத்திய அரசு!!

கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு உதவித்தொகையாக ரூ 1500 கொடுப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள திருநங்கைகள் மிகவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

திருநங்கைகளின் நலனை கவனிக்கும், மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தில்,திருநங்கைகளின் அடிப்படைத் தேவைகளுக்காக உடனடியாக தலா ரூ 1500 உதவி தொகையாக வழங்க வேண்டும் என ஆலோசனை செய்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் திருநங்கைகளுக்கு ரூ 1500 வழங்கும் உதவி குறித்த விழிப்புணர்வை அனைவருக்கும் பரப்ப வேண்டும்’ ‌ அனைத்து திருநங்கைகளும் பயன்பெற வேண்டும் என, தொண்டு நிறுவனங்கள், சமுதாய அமைப்புகள் ஆகியவை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் இந்த உதவித் தொகை மிகவும் கணிசமாக இருப்பதால் அதிகரித்துத் தருமாறு கோரிக்கை எழுந்துள்ளது என்று சொல்லப்படுகிறது.

எவ்வாறு விண்ணப்பிப்பது என்று தெரியாமல் கவலை வேண்டாம். கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து ஆதார் எண் மற்றும் வங்கிக்கணக்கு ஆகியவற்றுடன் தங்களது சுய விவரத்தையும் அளித்து விண்ணப்பிக்கலாம். திருநங்கைகள் அல்லது அவர்கள் சார்பில் சமுதாய அமைப்புகள் http://forms.gle/H3BcREPCy3nG6TpH7 என்ற இணைப்பில் உள்ள படிவதத்தில் ஆதார் எண், தொலைபேசி எண், வங்கி கணக்கு எண் போன்ற அடிப்படை விவரங்களை தெரிவித்து இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கு மே 31 தேதி கடைசி தேதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தளபதி 66 திரைப்படத்தின் கதாநாயகி இவர்தான்! வெளியான தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி!

0

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய் அவருடைய நடிப்பில் அவருடைய 65வது திரைப்படம் தயாராகி வருகின்றது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த திரைப்படத்தின் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயார் செய்யும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். என்று சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து வருகிறது நோய் தொற்று பரவல் குறைந்த பின்னர் இந்த திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கிடையில் நடிகர் விஜய்யின் 66வது திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

அத்துடன் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த திரைப்படம் இரண்டு கதாநாயகிகளை கொண்டதாக இருக்கும் என்றும், அதில் ஒரு கதாநாயகியாக கீர்த்திசுரேஷ் அவர்களை நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், தகவல் கிடைத்திருக்கிறது. இதற்கு முன்னரே விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து பைரவா மற்றும் சர்க்கார் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

உருவாகிறது கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம்!

0

கார்த்தி நடிப்பில் கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் மாநகரம் திரைப்படத்திற்கு பின்னர் அவர் இயக்கிய கைதி திரைப்படத்தில் நடிகர் கார்த்தி கைதியாக நடித்து தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.இதற்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.நடிகர் நரேன் இதில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கிறார்.

விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு திரைப்படத்தில் பாடல்கள் இல்லை, கதாநாயகி இல்லை, முழுக்க முழுக்க ஆக்ஷன் மட்டுமே இருந்தது. இவ்வாறு ஒரு திரைப்படம் வந்தால் வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இந்த வழக்கத்தையெல்லாம் தகர்த்தெரிந்து இந்த படம் நல்ல வெற்றியை பெற்றது.

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க இரவு சமயத்தில் தந்தை மகள் பாசத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் நடிகர் கார்த்திக் இன்று பிறந்தநாள் என்று சொல்லப்படுகிறது. இதனை முன்னிட்டு ரசிகர் ஒருவர் கைதி தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவிடம் சமூகவலைதளத்தில் கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கிறார். அதில் கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்று தெரிவித்திருக்கிறார். அந்த சமயத்தில் கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் அதற்கு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

சிவாங்கி பிறந்தநாளுக்கு அஸ்வின் எப்படி வாழ்த்து சொன்னார் தெரியுமா??

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக களமிறங்கிய சிவாங்கி குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியின் மூலமும் நாடறிந்த ஒருவராகப் போற்றப்படுகிறார். அவரது அந்த கள்ளம் கபடமில்லாத மனசு அனைவருக்கும் இப்படி ஒரு தங்கை நமக்கு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என ஏங்கும் அளவிற்கு அவர் உள்ளார்.

 

இன்று 22 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் சிவாங்கிக்கு அனைத்து பிரபலங்களும் தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். இன்றைக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தை திறந்தாலே சிவாங்கி தான் வருகின்றார்.

 

அஸ்வின், கவின், புகழ், சாம், பிரியங்கா, குக் வித் கோமாளி பவித்ரா, தீபா அக்கா, சரத், சக்தி, பாலா, மற்றும் சூப்பர் சிங்கர் போட்டியாளர்கள், என அனைவரும் சிவாங்கிக்கு வாழ்த்து மழை பொழிந்து கொண்டிருக்கிறார்கள்.

 

சிவாங்கிக்கு மிகவும் பிடித்த அஸ்வின் தனது பிறந்த நாள் வாழ்த்தை மிகவும் அழகாக கூறியுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் சிவாங்கிக்கு போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் “Happiest Birthday Kedi Rowdy CM” என்று கூறியுள்ளார்.

 

மேலும் ” நீ ஒரு சிரிப்பு இயந்திரம் , அனைவர் முகத்திலும் சிரிப்பை வர வர வைத்தர்க்கு நன்றி, இந்த வருடமும் உன்னுடைய power மற்றும் நல்ல பாஸிட்டிவ் தன்மையை நிறைய மக்களுக்கு அள்ளிக்க வேண்டும்” என அவர் அழகாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டு தேதி மாற்றமா?

0

கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தில் வெளியீடு தேதி மாற்றப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பெரிய வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் ஜூலை மாதம் 26ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்சமயம் நாடு முழுவதும் நோய் பற்றிய அச்சம் அதிகமாக இருப்பதன் காரணமாக, திரையரங்குகள் எப்போது செயல்படும் என்று தெரியவில்லை. ஆகவே கேஜிஎப் திரைப்படக் குழு இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றுவதற்கு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்குள் நோய் தொற்று தாக்கம் குறைந்து திரையரங்குகள் மறுபடியும் திறக்கப்பட்டால் திட்டமிட்ட தேதியில் படம் வெளியிடப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாசின் அவர்களின் வெறித்தனமான நடிப்பை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலாக இருந்த வருகிறார்கள். இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்து வருகின்றார். அதோடு பாலிவுட் நடிகை ரவீனா டண்டனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அர்ச்சகர்கள்!! நிவாரணம் வழங்க கோரிக்கை!!

0

கொரோனாவில் அனைவர்களும் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர். அதில் கோயில் அர்ச்சகர்களும் பூசாரிகளும் அடங்குவர். கொரோனா காலத்தில் அனைத்து கோவில்களும் மூடப்பட்டு இருக்கும் நிலையில் தங்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் ஹரிஹர முத்தையர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

அதில் அவர் கூறியதாவது, கொரோனா ஊரடங்கு காலத்தில் பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப் படவில்லை. தினமும் தீப ஆராதனைகள் நடந்து கொண்டுதான் வருகின்றன. தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கை நம்பியே பல அர்ச்சகர்களின் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. எந்த ஒரு வழிபாட்டு நிகழ்ச்சியும் திருமணங்களும் நடைபெறவில்லை. அதனால் வரும் சிறு வருமானங்கள் கூட இல்லாமல் போய்விட்டது. இதனால் வாழ்வாதாரம் இன்றி பல அர்ச்சகர்கள் பூசாரிகள் தவித்து வருகின்றனர்.

 

எனவே வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் அர்ச்சகர்களுக்கும் பூசாரிகளுக்கும் நிதி உதவி மற்றும் பொருட்கள் உதவி செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார், ஹரிஹர முத்தையர்.

 

 

இன்று ரேஷன் கடைகள் திறப்பு!! அலைமோதும் மக்கள்!! இதுதான் அரசின் திட்டமா??

0

தளர்வில்லா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இன்று ரேஷன் கடைகள் திறந்து உள்ளதால் 2000 ரூபாய் நிதியை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது இதனால் வைரஸ் பரவும் அபாயம் அதிகமாக உள்ளது.

 

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகம் பரவி ஒவ்வொரு நாளும் உச்சத்தை அடைந்து வருவதால் தமிழக அரசு வருகிற 31-ஆம் தேதி வரை தளர்வு இல்லா முழு ஊரடங்கு அறிவித்தது.. ரேஷன் கடைகளிலும் திறக்க அனுமதி இல்லை என்று தெரிவித்து இருந்த நிலையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வீடியோ ஒன்று வெளியிட்டு தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்கு மக்கள் ஆதரவு தந்து வீட்டிற்குள்ளேயே இருந்தால் கொரோணா பரவாது என்று அவர் தெரிவித்திருந்தார்.

 

திடீரென்று நேற்று மாலை இன்று முதல் காலை 8 மணி முதல் 12 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் என்று அரசு திடீர் என்று அறிவித்திருந்தது.

 

மேலும் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகை வாங்காதவர்கள் வாங்கிக் கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்திருந்தது. தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கும் ரேஷன் கடைகள் 8 மணி முதல் 12 மணி வரை செயல்பட்டு நிவாரணத்தொகை விநியோகிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

 

அதனால் ரேஷன் கடைக்கு செல்லும் பொழுது ரேஷன் கார்டுகளை தவறாமல் எடுத்துச் செல்லுங்கள் என்றும் அறிவுறுத்தியிருந்தது. 2.09 கோடி அரிசி அட்டை கார்டுதாரர்களில் இன்னும் 7.51 லட்சம் கார்டுதாரர்கள் மட்டும் நிவாரண தொகை வாங்க வேண்டியுள்ளது. சர்க்கரை கார்டுதாரரையும் சேர்த்து மொத்த 2.13 கோடி கார்டுதாரர்களில 20 சதவீதம் பேர் பொருட்கள் வாங்க வேண்டியுள்ளது என சுட்டி காட்டியது.

 

ரேஷன் கடைகளையும் திறந்து கொரோனா நிவாரணத் தொகையையும் வழங்குகிறோம் என்று கூறினால் மக்கள் வாங்காத பணத்தை வாங்க வெளியே வருவார்கள். மேலும் அட்டைதாரர்கள் அல்லது அவர்களின் பெயரில் பலர் வெளியே வீடுகளை விட்டு வருவார்கள்.

 

இதனால் மக்கள் கூட்டம் கூடாதா? கொரோனா மேலும் பரவாதா? கொரோனா உச்சத்தை தொட்டு கொண்டிருக்கும் நிலையில் ஏன் இந்த மாதிரியான செயல்பாடுகளை அறிவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

 

கொரோனா பரவலை தடுக்க வேண்டுமெனில் இந்த மாதத்திற்கான நிவாரணத்தொகை வாங்காதவர்கள் அடுத்த மாதம் வாங்கிக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்தால் மட்டுமே பரவலை தடுக்க முடியும். அப்பொழுதுதான் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முழு ஊரடங்கு பின்பற்ற முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

பணம் தராததால் ஏற்பட்ட பரிதாபம்! ரியல் எஸ்டேட் அதிபர் படுகொலை!

0

தளி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்த பெல்லூரை சார்ந்தவர் லோகேஷ் ரியல் எஸ்டேட் அதிபரான இவருடைய நண்பர் குருபராப்பள்ளியை சேர்ந்த எதுபூஷன் ரெட்டி இவர் மீது காவல் நிலையங்களில் கொலை உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், லோகேஷ் இடம் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு எதுவும் பேட்டி மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அவர் பணம் கொடுப்பதற்கு மறுத்திருக்கிறார்.

இவ்வாறான சூழ்நிலையில், எதுபூஷன் ரெட்டி பிரபல ரவுடி கஜா என்பவருடன் இணைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு லோகேஷின் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அங்கே உறங்கிக் கொண்டிருந்த அவரை வெளியே இழுத்து வந்து இருவரும் பணம் கேட்டு அடித்து இருக்கிறார்கள். ஆனால் லோகேஷ் பணம் தருவதற்கு சம்மதம் தெரிவிக்க மறுத்து விட்ட படியால் ஏதுபூஷண் ரெட்டி தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரைச் சுட்டு விட்டார். இதில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபோன்ற சூழ்நிலையில், இந்த தகவலை அறிந்துகொண்ட தேன்கனிக்கோட்டை உதவி மாவட்ட கண்காணிப்பாளர் சங்கீதா தலைமையில் காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்து வைத்துவிட்டு விசாரணை செய்ய தொடங்கினார்கள். அதோடு தப்பியோடிய கொலையாளிகள் எதுபூஷன் மற்றும் கஜாவை தீவிரமாக தேடிவந்தனர். இந்த சூழலில் காரில் தப்பிச் செல்வதற்கு முயற்சி செய்து இருவரையும் நேற்று பூனம் பள்ளி சோதனை சாவடியில் காவல்துறையினர் கைது செய்தார்கள். தொடர்ச்சியாக இருவரிடமும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.