Tamil Nadu:கேரளாவில் உள்ள குப்பை கழிவுகளை தமிழக எல்லைகளில் கொட்டி வருவதற்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
தமிழக கேரள எல்லைப் பகுதி மாவட்டங்களான தென்காசி, கன்னியாகுமரி பகுதியில் கேரளா மாநிலங்களில் இருந்து வரும் லாரிகளில் குப்பைகளை ஏற்றிக் கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கிறார்கள். இது தொடர்ந்து பல ஆண்டுகளாக வாடிக்கையாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. அந்த குப்பைகளில் மனிதனுக்கு திங்கு விளைவிக்க கூடிய சுற்றுச்சூழல் மாசக்கும் பொருட்கள் இருக்கிறது.
மருத்துவக் கழிவுகள்,பிளாஸ்டிக் குப்பைகள், இறைச்சிக் கழிவுகள் இருக்கிறது என குற்றச்சாட்டு மக்கள் மத்தில் எழுந்து வந்தது. தமிழக எல்லைக்குள் லாரி மூலம் குப்பைகளை கொண்டு வந்து கொட்ட அனுமதி கொடுத்தது யார்? அரசு அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? என்ற கேள்வியையும் எழுந்து உள்ளது. அரசியல் வட்டாரத்தில் தமிழக அரசின் மீது இது தொடர்பாக பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில், கேரளா அரசின் இந்த செயலை கண்டிக்காமல் இருக்கும் திமுக அரசு மீது கண்டனங்களை தெரிவித்து வருகிறார் பாஜக அண்ணாமலை. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் இருந்து கனிம வளங்கள் கேரளாவிற்கு திருடு போகிறது அதை கண்டுகொள்ளாமல் திமுக அரசு செயல்படுகிறது.
இனி ஒரு கேரளா லாரி தமிழகத்திற்கு குப்பைகளை கொண்டு வந்து கொட்டினால் தான் குப்பை லாரியில் கேரளாவிற்கு செல்வேன் என கண்டிக்கதக்க வகையில் கூறினார். மேலும், தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது தமிழ்நாடு குப்பை நாடாக மாறியுள்ளது. தமிழகத்தில் இருந்து கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்தி சென்று இருக்கிறார்கள்.
அங்குள்ள குப்பைகளை தமிழகத்தில் கொட்டுகிறார்கள் அதை ஆளும் அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு தமிழக மக்கள் தலைகுனிய வேண்டும் என பேசி இருக்கிறார்.