New Education Policy: புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மத்திய அரசு நுழைவுத் தேர்வை திணிக்க கூடாது என ராமதாஸ் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
மத்திய அரசு புதிய கல்வி கொள்கை அறிமுகம் செய்து இருக்கிறது. அதன் அடிப்படையில் மாணவர்கள் 12ம் வகுப்பில் எந்த பாடப்பிரிவை படித்து இருந்தாலும் கூட கல்லூரியில் விரும்பிய துறையில் உயர்கல்வி பயில நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என அறிவித்து இருந்தது. அவ்வாறாக நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விரும்பி படைப்பிரிவு எடுத்து படைக்கலாம் என அறிவித்தது.
மேலும், கல்லூரி மாணவர்கள் சேர இரண்டு முறை சேர்க்கை நடைபெறும் என அந்த கல்வி கொள்கையில் தெரிவித்து இருந்தது. மேலும் பட்டப்படிப்பு படிப்பதற்கான கால அளவை மாணவர்களே குறைத்துக்கொள்ளவும், அதிகரித்துக் கொள்ளவும் முடியும் என முடியும் என பல்கலைக்கழக மானியக் குழு மக்கள் முன் வைத்து இருக்கிறது.
இது குறித்து பாமக ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் புதிய கல்வி கொள்கையில் மாணவர்களின் உயர்கல்வியில் விரும்பிய படத்தை எடுத்து படிக்கலாம் என்பதும் சரி, ஆனால் அதற்காக நுழைவுத் தேர்வை மத்திய அரசு திணிக்ககூடாது என அறிவித்து இருக்கிறது.
12 ஆம் வகுப்பில் படித்த அதே பாடத்தை கல்லூரி உயர்கல்வியில் தேர்வு செய்து படிக்க நுழைவு தேர்வு இருக்கிறாதா? இல்லையா? என்பது குறித்து எவ்வித அறிக்கையை வெளியிட வில்லை என தெரிவித்து இருக்கிறார்.