Vidaamuyarchi:விடாமுயற்சி படத்தை தயாரித்த லைகா நிறுவனத்திடம் 150 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஹாலிவுட் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் படம் தான் விடாமுயற்சி. மேலும் அர்ஜுன், ரெஜினா, ஆரவ், திரிஷா போன்ற திரைப்பிரபலங்க்குள் நடித்து இருக்கிறார்கள். அனிருத் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.
இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. அஜித் குமார் ரசிகர்கள் இரண்டு வருட காத்து இருப்பிற்கு பிறகு வெளியாக உள்ள திரைப்படம் இது ஆகும். இந்த படம் வருகிற 2025ல் பொங்கல் பண்டிகை நாட்களில் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. இந்த நிலையில் விடாமுயற்சி படத்துக்கு புது சிக்கல் எழுத்து இருக்கிறது.
அதாவது, 1997 ஆம் ஆண்டு ஹாலிவுட் ல் வெளியான திரைப்படம் பிரேக்டவுன். விடாமுயற்சி படம் இந்த படத்தை தழுவி எடுக்கப்பட்டதாக இருக்கிறது என குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது ஹாலிவுட் தாயரிப்பு நிறுவனமான பாரமெளண்ட் பிக்ச்சர்ஸ். மேலும், விடாமுயற்சி படத்தை தயாரித்த லைகா நிறுவனத்திடம் 150 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதற்கு முன்பு லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட்டு இருந்த இந்தியன் -2 மற்றும் வேட்டையன் திரைப்படங்கள் பெரிதாக வசூல் செய்யவில்லை. இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் மூலம் புதிய சிக்கல் எழுந்து இருக்கிறது. இதனால் விடாமுயற்சி திரைப்படம் திரையிட இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் புது பிரச்சனை எழுந்து இருக்கிறது.