Tirupattur:மாணவனின் சாதி பெயரை புத்தகத்தில் எழுதிய ஆசிரியர், பணியிடை நீக்கம் செய்த மாவட்ட முதன் கல்வி அலுவலர்.
நாம் 20 ஆம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.அறிவியல் தொழில்நுட்பத்தில் நாம் வளர்ச்சி பெற்று இருந்தாலும் கூட, இந்த சாதிய தீண்டாமை இன்றும் உலகில் இருப்பதை தினந்தோறும் வரும் செய்திகள் மூலம் நம்மால் அறிய முடிகிறது. பிறப்பால் சாதி பாகுபாடுகள் பார்க்க கூடாது, தீண்டாமை என்பது பெரும் குற்றம் என பாடம் எடுக்க வேண்டிய ஆசிரியரே மாணவர்களின் சாதியை குறிப்பிட்டு பேசியது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சி மோட்டூர் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். அந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் விஜயகுமார். இவர் மாணவர்களுக்கு பாட புத்தகத்தில் உள்ள இசை கருவில் பற்றி பாடம் எடுத்து கொண்டு இருந்தார்.
அந்த படத்தில் இடம் பெற்று இருந்த இசை கருவியை குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே வாசிப்பார்கள் என்றும் மேலும் ஒரு மாணவர் புத்தகத்தில் சாதி பெயரை குறிப்பிட்டு எழுதியிருக்கிறார் ஆசிரியர் விஜயகுமார் . மேலும் அனைத்து மாணவர்கள் முன்னிலையில் அந்த மாணவனை இழிவாக பேசி இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்து இருக்கிறார் அந்த மாணவன்.
மாணவனின் பெற்றோர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று பள்ளி முன் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். இந்த போராட்டத்தில் மாணவர் சாதி பெயரை சொல்லி இழிவாக பேசிய ஆசிரியர் விஜயகுமார் கைது செய்ய கோஷம் எழுப்பினார்கள் இதனை அறிந்த மாவட்ட முதன் கல்வி அலுவலர் ஆசிரியர் விஜயகுமார் பணியிடை நீக்கம் செய்தார்.