DMK TVK: சட்டமன்ற தேர்தலை விட கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற சோகம் தான் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசு தனி நபர் குழுவும், அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவும் அமைத்து விசாரித்து வந்தது. இதனை ஏற்காத விஜய் தரப்பு சிபிஐ விசாரணையை கோரியது. இந்த சம்பவம் கரூரில் நடைபெற்றதால், இதற்கு காரணம் திமுக அரசு தான் என எதிர்க் கட்சிகளும், தவெக தொண்டர்களும் கூறி வந்தனர்.
இதனால் இந்த வழக்கை தமிழக அரசு விசாரித்தால் உண்மை வெளிவராது என்று அனைவரும் நினைத்தனர். இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றமும் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் சிபிஐ விசாரணையை கேட்டதன் அடிப்படையில் சிபிஐக்கு உத்தரவிட்டது. இது மாநில அரசுக்கு பேரிடியாக இருந்தது. தற்போது இந்த வழக்கை தமிழக அரசு விசாரித்தால் அது விஜய்க்கு எதிராக தான் திரும்பும் என்பதை ஸ்டாலின் நிரூபித்துள்ளார்.
சம்பவம் நடந்த அன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது எதிர்பாராத விதமாக நடந்தது என்று கூறினார். ஆனால் இன்று, சட்டசபையில் கரூர் சம்பவம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், அப்போது விளக்கமளித்த அவர், கரூர் பிரச்சாரத்திற்கு 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. வழக்கமான பாதுகாப்பை விட கூடுதலாகவே வழங்கப்பட்டது.
தவெக சார்பில் கூட்டத்திற்கு வருபவர்களுக்கு எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. மேலும் தவெக தலைவர் அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு பிரச்சாரத்திற்கு வராமல் 7 மணி நேரம் தாமதமாக வந்தார் என்றும் கூறியுள்ளார். இப்படி இருக்கையில் இந்த வழக்கை முதல்வர் அமைத்த குழுவின் கீழ் விசாரித்தால் அந்த அறிக்கை விஜய்க்கு எதிராகவே திரும்பும் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையின் மூலம் நிரூபித்துள்ளார் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.