TVK CONGRESS DMK: பீகாரில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் பீகாரை விட தமிழக அரசியல் கணக்குகளில் நிறைய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம். அங்கு நடந்த தேர்தலில் NDA கூட்டணி அபார வெற்றி பெற்றிருக்கிறது. பாஜகவின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் யாரும் எதிர்ப்பார்த்திராத அளவு 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் பீகாரில் தோற்றதால், திமுக கூட்டணியில் அது பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் பீகார் தேர்தலை வைத்தே நகரும் என்று கூறப்பட்ட நிலையில், திமுக தலைமை இவ்வாறான முடிவை எடுத்திருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர். திமுக கூட்டணி கட்சிகளில் அதிக முக்கியத்துவம் பெறுவது காங்கிரஸ் தான். இப்படி இருக்கும் பட்சத்தில் பீகாரின் தேர்தல் முடிவுகள் அதன் அரசியல் நிலையை தலைகீழாக மாற்றியுள்ளது.
தேர்தல் நெருங்கும் சமயத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலரும் ஆட்சி பங்கை கேட்டு ஸ்டாலினை வலியுறுத்தி வந்த சமயத்தில், பீகார் தேர்தல் முடிவுகள் வரை பொறுத்திருந்தார் ஸ்டாலின். இதில் காங்கிரஸ் பெரும் தோல்வியடைந்ததால், தமிழகத்தில் நடக்க இருக்கும் தேர்தலில் அவர்களுக்கு ஒற்றை இலக்க தொகுதிகளை ஒதுக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம். இதனை அறிந்த காங்கிரஸ் கட்சி திமுகவில் தங்களுக்கு போதிய மரியாதை இல்லையென்பதை உணர்ந்து, தவெக உடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகின்றனர். ராகுலின் இந்த திடீர் முடிவு வரவிருக்கும் தேர்தலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்படுகிறது.

